நம் ஒவ்வொருக்கும் வாழ்கையின் மீது தனியொரு தோற்றம் இருக்கிறது. நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் பல தரப்பட்ட பேர் பணியாற்றுகின்றனர். பல தேசத்து ஆண்கள் பெண்கள் என பன்முகத்தன்மையுடன் எங்கள் நிர்வாகம் இயங்குகிறது. அவர்களின் ஒவ்வொருக்கும் வாழ்கை பற்றி தனி தனி கண்ணோட்டங்கள், எண்ணங்கள்.. ஒரு சிலர் அவர்கள் வாழ்கையை அவர்களே சிக்கலாக மாற்றுகிறார்கள். மனித உறவு அன்புடன் தொடங்குகிறது, அன்புக்காக ஏங்குகிறது, அன்பை தேடி அலைகின்றது.
நான் சந்தித்த ஒருவருக்கு நல்ல கல்வி, கை நிறைய சம்பாத்தியம், நல்ல குடும்பம் என வாழ்கை அமைந்தாலும் அந்த நபர்க்கு இன்னும் வாழ்கையில் திருப்தி இல்லை. அந்த நபரிடம் நான் சிறிது உரையாடினேன், அப்போது அவர் தான் இப்போது உள்ள அந்தஸ்தை விட அதிகமாக உயர வேண்டும், அதை பற்றிய கவலையில் உள்ளேன் என்றார். அவருடைய கவலைக்கு என்ன காரணம்? அடிப்படை தேவைகள் பூர்த்தியான பிறகு அடுத்து பிறதேவைகள் மற்றும் விருப்பங்கள் அவரை ஆடம்பர வாழ்வின் தேடலுக்கு ஓட்டிக்கொண்டு செல்கிறது. பைக்கில் பயணிக்கும் ஒருவருக்கு அடுத்து கார் வாங்க ஆசை, கார் வாங்கிய பிறகு அடுத்து அதிலே அதிக சொகுசு உள்ள கார் வாங்க ஆசை, இப்படியே அவனின் மனம் கிடைத்ததை பற்றி மகிழாமல் இல்லாத ஒன்றை தேடி தேடி மனம் அமைதியை தொலைக்கின்றது.
அந்த மனிதரை போல நம் கண்கள் முன் பல நபர்கள் தங்களின் வாழ்கையில் கிடைத்த பல நல்ல விஷயங்களை நினைத்து மகிழாமல், இல்லாத ஒன்றை தேடி தேடி அவர்களின் வாழ்கை பயணம் ஏக்கத்துடன் செல்கிறது. நிறைவேறிய ஆசை, வேண்டிய வசதி, கிடைத்த அன்பு இருந்தும் இன்னும் அதிக ஆசை, அதிக ஆடம்பரம், அதிக வசதி, அதிக அன்புக்காக மனிதன் நிம்மதியை தொலைத்து கவலையில் மூழ்கிறான். வாழ்க்கை என்பது ஒரு பயணம், நம் பயணத்தில் உள்ள எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். நம்மில் பலர் வாழ்கையின் எளிய உண்மையை புரிந்துகொள்வது இல்லை. உங்களுக்கு அமைந்த வாழ்கையை நினைத்து மகிழ்ச்சியுடன் பயணியுங்கள், உங்களின் வாழ்கையில் இல்லாத ஒன்றை நினைத்து கவலைக்கொள்ளாதிர்கள்.
உங்கள் தளம் பலரை சென்று அடைய இந்த அடியேன் உதவுகிறேன்.... நீஙகள் எழுதுங்கள் நாங்கள் தொடர்கிறோம்...
ReplyDeleteThanks satish for your kindness and support!
ReplyDelete