May 13, 2012

சில்க் சில்க் சில்க் - NOT A DIRTY PICTURE

ஆந்திர மாநிலத்தில் ஏலுறு என்ற கிராமத்தில் ஏழை குடும்பத்தில் விஜயலக்ஷ்மியாக பிறந்து தென்இந்தியாவை தன்னுடைய அழகாலும் கவர்ச்சியாலும் தனகென்று ஒரு இடத்தை   நிலைப்படுத்திய பிரபல நடிகை சில்க் ஸ்மிதா. ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்து 1979ல் வண்டிச்சக்ரம் என்ற தமிழ் படத்தில் அறிமுகமாகி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் கிட்டத்தட்ட 450 படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து மக்களிடம் தனகென்று ஒரு தனி பெயரை தக்கவைத்து கொண்டார்.17 வருட சினிமா வாழ்கையில் சில்க் ஸ்மிதா பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்திருக்கிறார். ஒப்பனை பெண்ணாக தன்னுடைய கலைபயனத்தை தொடங்கி  1980- 90 களில் தென் இந்திய திரையுலகை தன்னுடைய கவர்ச்சியாலும் நடிப்பாலும் தனக்கென ஒரு இடத்தை நிலைபடுத்திகொண்டார்.

தெனிந்தியா முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி போன்ற பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதிகமாக குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பினாலும் கவர்ச்சி வாய்ப்புகளே சில்க்கை தேடி வந்தது. Yamakinkarudu (1982), Khaidi (1983), Challenge (1984), Layanam (1989) remake in Hindi as Reshma Ki Jawani and Adharvam (1989) போன்ற படங்கள் சில்க்கை புகழின் உச்சிக்கு அழைத்துசென்றது. அலைகள் ஒய்வதில்லை, கோழி கூவுது போன்ற தமிழ் படங்களில் அனைவரும் ரசிக்கும்படி வகையில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்தார். சில நடிகைகள் நடிக்க தயங்கிய கதாபாத்திரங்களில் சில்க் தைரியமாக நடித்தார்.

பிரபலமான நடிகையான சில்க் ஸ்மிதா செப்டம்பர் 23,1996 தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக மாறியது. நிதி நெருக்கடி, காதல் குழப்பங்கள், மன சோர்வு போன்ற பல காரணங்கள் கூறினாலும் சில்க் ஸ்மிதாவின் தற்கொலை மர்மகதையாக உள்ளது. Dirty Pictures என்ற ஹிந்தி படம் சில்க் ஸ்மிதாவின் வாழ்கையை தழுவி எடுக்கப்பட்டது. மிகப்பெரிய வசூல் செய்தும் அந்த படத்தில் சில்க் ஸ்மிதாவின் வேடத்தில் நடித்த வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுத்தந்தது. இன்றும் சில்க்கை ரசிகர்கள் மறக்காமல் ரசிக்கிறார்கள் என்பதற்கு அது ஒரு எடுத்துக்காட்டு. திரையுலகில் சில்க் விட்டுச்சென்ற இடம் இன்றும் காலியாகவே உள்ளது. எத்தனையோ நடிகைகள் அவர் இடத்திற்கு போட்டியிட்டாலும் ரசிகர்கள் சில்கிற்கு கொடுத்த இடத்தை எவராலும் நெருங்க முடியவில்லை. எதையும் வெளிப்படையாக தைரியமாக பேசும் குணம் கொண்டவர். திரையில் நடித்தாலும் நிஜத்தில் நடிக்காதவர் அவர். யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்ற பழமொழிக்கு ஏற்ப சில்க் ஸ்மிதா இறந்த பின்னும் அவருடைய வாழ்க்கையை தழுவி எடுத்த Dirty Pictures படத்தின்  வசூலே சாட்சி..

'Being a sex symbol is a heavy load to carry, especially when one is tired, hurt and bewildered' – Silk smitha.

2 comments:

  1. unmaiya nalla sollurenga vazthukal

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் தோழரே!

      Delete