March 8, 2013

பெண்மையை போற்றுவோம்...இன்பம்தனை கருவாக்கி
உயிரை உருவாக்கினாள் தாய்
பாசம்தனை விதையாக்கி
உடன் வளர்ந்தாள் சகோதரி
நேசம்தனை நட்பாக்கி
தோள் கொடுத்தாள் தோழி
வாழ்வுதனை பகிர்ந்தாக்கி
வாழ்க்கை அளித்தாள் மனைவி
வம்சம்தனை விருட்சமாக
நிலவாய் அவதரித்தாள் மகள்
எத்தனை அவதாரம் எடுத்தாலும்
போற்றுதலுக்குரிய பெண்ணாய்
வாழ்வுதனில் கலந்து உயிர்பிக்கிறாள்
சிறப்புக்குரிய பெண்மணியாய்......

அன்புடன்
♥ ஆயிஷாபாரூக் ♥
 
பெண்மையை போற்றும் அதே வேலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் இருந்து பெண்களை காக்க ஒவ்வொரு பெண்ணும் தன்னால் முடிந்த வகையில் உதவ வேண்டும். அனைவருக்கும் என் மகளிர் தின வாழ்த்துகள்!!!

 

March 5, 2013

விடியலை தேடும் முகங்கள்

விடியலை தேடும் முகங்கள்

 

எத்தனை தோல்வி வந்தாலும்
வெற்றியின் பாதை மாறாது
முயற்சி மட்டுமே துணையோடு
உறுதியோடு நீ நடைப்போடு

தோல்வி மட்டுமே நிலையில்லை
துணிந்துவிட்டால் வானே எல்லை
துவண்டு போயி சோர்ந்திடாதே
தோல்வியே முடிவுயென நினைக்காதே

சோதனையன்றி சாதனை எளிதல்ல
உழைப்பின்றி வெற்றியும் உனதல்ல
முன்னேறு பல தடையை நீ கடந்து
உயர்வாய் நீ வெற்றி களிப்போடு

இரவும் பகலும் காலத்தின் சமநிலை
வெற்றியும் தோல்வியும் நிலையில்லை
மனஉறுதியுடன் எதிர்கொள்ளும் மனநிலை
வந்துவிட்டால் வாழ்வில் பயம்மில்லை..

ஆயிஷாபாரூக்

March 4, 2013

மறையுமோ சாதிக்கொடுமைகள்

 மறையுமோ சாதிக்கொடுமைகள்


மனிதனின் குருதியின் நிறம் ஒன்று
வேற்றுமையின் வடிவமோ பலவுண்டு
ஏற்றமும் தாழ்வும் வகைப்படுத்தி
மனிதன் வாழ்கிறான் மிகைப்படுத்தி

பாலியல் வன்முறைகள் கட்டவிழ்த்து
உணர்வுடன் உயிரை வதைச் செய்து
என்ன சுகம் நீவீர் காண்பீரோ
இரத்த வாடையில் குளிர் காய்வீரோ

சாதி மனதை தீக்கரையாக்குது
சகமனிதனின் வாழ்வை சீரழிக்குது
வன்கொடுமையை தொடுக்கின்றான்
வாழும் உரிமையை கெடுகின்றான்

எரிவது உடமைகள் மட்டுமல்ல
சாதியக் கொடுமையின் உருவமும் தான்
எத்தனை வடிவம் பெரியார் எடுத்தாலும்
சாதிக்கொடுமைகள் இங்கு மறையாதோ….


                                                                                                                             **ஆயிஷா பாரூக்**

March 2, 2013

தமிழ்வழிக்கல்வி தமிழ் மொழியுணர்வு பிள்ளைக்கட்கு வேண்டும்  
தமிழ் நாகரீகம் வாழ்வியல் வழியை அறிவிக்கும்   
 தமிழ் பண்பாடு நடைமுறை இன்பம் சுவைக்கும்  
தமிழ் கலாச்சாரம் உறவுகளின் பலம் பெருக்கும் 
தமிழ் வழிக்கல்வி கற்றதலை சுலபமாக்கும்  
உயிரும் மெய்யும் சேர்ந்த உணர்வுள்ள தமிழை  
வாழ்க்கை சிறப்புக்கான வாழ்வழிக் பொக்கிஷங்கள்  
ஆத்திசூடி, திருக்குறள், எட்டுத்தொகை,பத்துப்பாட்டு  
பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியங்கள் 
இப்படி இன்னும் எத்தனை தமிழா அமிர்தமாய்  
தேனினும் செந்தமிழின் அறிவுச்சுவை சுவைக்க 
தாய்மொழி பயின்றோர் உயர்ந்த சரித்திரம் பலயிருக்க  
தமிழ்வழிக் கல்விக்கொண்டு சரித்தரம் படைப்போம்.

வீட்டில் தொழுவத்தில் கறந்த தூய்மையான பாலும் கடையில் வாங்கிய தண்ணீர் பாலும் சுவையும் பயனும் வேறுபடுவது போல கலப்படம் கலந்தது இன்றைய அந்நிய மொழி கலந்த கல்விமுறை. கலப்படமற்ற மலைத்தேன் போல தமிழ், தமிழ்வழிக்கல்வி தமிழனுக்கு கண்டிப்பாக வேண்டும். இன்றைய தொழிற்போட்டி காலச்சூழலுக்கு அந்நிய மொழிகள் தமிழுக்கு அடுத்தபடியாக பயில்வது தவறு கிடையாது. அதற்காக தன் தாய்மொழி தமிழை துச்சமாக நினைத்து தமிழ் கற்காத தமிழரை தமிழ் சமூகம் ஏற்க கூடாது.
                                                       ஆயிஷாபாரூக்