இறைவன் படைப்பில் நான் அதிசயம்
பலருக்கு நான் விசித்திரம்
பாதியில் வரைந்து நின்ற சித்திரம்
எனக்கு இல்லை எந்த ஒரு சாஸ்திரம்
கவலை மறந்து சிரிக்கும் எந்திரம்
மனதில் என்றும் இல்லை தந்திரம்
புன்னகையோடு சிரிக்கும் மந்திரம்
கஷ்டங்களை மறந்து ஜொலிக்கும் ரத்தினம்!
புரிந்துகொள்ளாத மனிதரிடம் வாழ்ந்ததே சரித்தரம்!
No comments:
Post a Comment