1948 ஆம் ஆண்டில் இலங்கைச் சிங்களப் பெரும்பான்மை அரசு பிரிட்டிஷ் அரசிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற நாள்முதல் தமிழர்களின் மனித உரிமைகளை திட்டமிட்டே இனவழிப்பை இது வரை சிங்களஅரசு நடத்திவருகிறது. சிங்கள மொழிக்கு, சிங்களவர்கள் பின்பற்றும் பெளத்த சமயத்துக்கு சிறப்புரிமைகள் தந்து, தமிழர்களின் கல்வி வேலைவாய்புக்களை அபகரித்து, திட்டமிட்ட குடியேற்றங்களை நிகழ்த்தி, நியாமற்று முறையில் கைதுசெய்து சிறையில் அடைத்து தமிழர்களின் மனித உரிமைகளை இலங்கைச் பெரும்பான்மைச் சிங்கள அரசுகள் மீறின. இதன் உச்ச கட்டமாக இதுவரை பல லட்ச தமிழர்கள் தொகை தொகையாக கொல்லப்பட்டனர். சிங்கள அரசு கலவரங்களை ஏற்படுத்தியும், வானூர்திகளில் இருந்து கண்மூடித்தனமாக குண்டு வீசியும், எறிகணைகளை வீசியும், நேரடியாகச் சுட்டும், சித்திரவதை செய்தும் ஈழத்தமிழர்களை படுகொலை செய்தது. மானிட வரலாற்றில் நீண்ட இனப்படுகொலை இது என்றே கூறலாம்.
நெஞ்சை உருக்கும் சோகத்தின் கதையை தமிழீழம் கொண்டுள்ளது. விடியல் பிறக்காதா என்று தமிழீழம் ஏங்கி தவிக்கிறது. மீளமுடியாத சோகங்களும் கலையாத கவலைகளும் மட்டுமே எஞ்சி நடைபிணங்களாக தமிழின மக்கள் விரக்தியுடன் ஆற்றனா துயரத்தில் வாழ்ந்து கொண்டு இருகிறார்கள். தமிழகத்தில் உள்ள தலைவர்கள் தமிழீழத்தை ஒரு அரசியல் யுக்திகாக மட்டுமே பயன்படுத்தி மக்களை ஏமாற்றி வருகின்றனர். தமிழீழத்தில் உள்ள தலைவர்களிடையே ஒற்றுமை இல்லாமல் இருப்பது தமிழீழ மக்களிடையே ஒரு மிகப் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது!
எந்த திசையில் பயணிப்பது யார் தங்களை வழிநடத்த போகிறார்கள் என்று தெரியாமல் தவிக்கும் தமிழீழ மக்களுக்கு யார் துணை?
வீடுகளை இழந்து, உறவுகளை இழந்து, உடமைகளை இழந்து நிற்கதியாக இருக்கும் அவர்களுக்கு என்ன அறுதல் கூற முடியும்?
அவர்களுக்கு ஏற்பட்ட அநீதிகளுக்கு என்ன பதில்?
மீண்டும் தமிழீழம் மலருமா?
சுதந்திர காற்றை சுவாசிக்க நினைக்கும் தமிழின சிறார்களின் ஆசை நிறைவேறுமா?
இது போன்ற கேள்விகளுக்கு உங்களிடம் விடை உள்ளதா....?

No comments:
Post a Comment