நித்திரை இல்லை மனம் நித்தமும்
சித்தமும் அவன் சிந்தனையினிலே
செய்திக்கூற தூது சொல்ல யாருமில்லை
மனநோவினை ஆற்றிட தோழியுமில்லை
மனதினில் துயரை விதைத்து அனுதினம்
விழியோரம் கண்ணீர் ஊற்றாய் சுரந்தேன்
எண்ண அதிர்வலைகள் காதலை கரைசேர்க்குமோ
வஞ்சியவள் உயிர் வலி காதலனுக்கு புரியுமோ
என் சொல்வேன் என் செய்வேன் செய்வதறியாது
இருள் சூழ்ந்த திக்கற்ற காட்டில் வழியறியா
பேதையாய் மனம் வெதும்பி நிற்கிறேன்
காதல் மீதுள்ள நம்பிக்கை மட்டும் கொண்டு
காதலன் மீண்டும் சேர்வான் என மதிக்கொண்டு….
சித்தமும் அவன் சிந்தனையினிலே
செய்திக்கூற தூது சொல்ல யாருமில்லை
மனநோவினை ஆற்றிட தோழியுமில்லை
மனதினில் துயரை விதைத்து அனுதினம்
விழியோரம் கண்ணீர் ஊற்றாய் சுரந்தேன்
எண்ண அதிர்வலைகள் காதலை கரைசேர்க்குமோ
வஞ்சியவள் உயிர் வலி காதலனுக்கு புரியுமோ
என் சொல்வேன் என் செய்வேன் செய்வதறியாது
இருள் சூழ்ந்த திக்கற்ற காட்டில் வழியறியா
பேதையாய் மனம் வெதும்பி நிற்கிறேன்
காதல் மீதுள்ள நம்பிக்கை மட்டும் கொண்டு
காதலன் மீண்டும் சேர்வான் என மதிக்கொண்டு….
ஆயிஷாபாரூக்