November 24, 2013

மெய்மறந்து தலைசாயாயோ....




என்னை தேடும் வெள்ளி நிலவே உன்னை தவழும் தென்றல் நானே அன்னை மடிசாய ஏக்கமாகி தவிக்கிறாய் தாலாட்டை கேட்டு கண்ணுறங்க பார்க்கிறாய் குயிலூசையாக ஜன்னல் வழியே பாடுகிறேன் அதை கேட்டு மெய்மறந்து தலைசாயாயோ...
காலம் விதித்த கோலமடி செல்லக்கிளியே காலனின் பிடியில் அன்னையடி பிள்ளையமுதே உன்னை பிரிந்து நித்தம் துடிகின்றேன் காற்றிலே சுவாசமாகி உன்னுடன் கலந்துருப்பேன் கலங்காதே வருந்தாதே நிழலாய் தொடர்ந்துருப்பேன் இதை கேட்டு மெய்மறந்து தலைசாயாயோ....
நிஜங்களை ஏற்றுவிட்டால் வலியும் மறைந்துவிடும் மாயங்களை விலக்கிவிட்டால் உண்மைகள் புரிந்துவிடும் ஆசிர்வதித்து ஆசைகள் யாவும் தீர்த்துக்வைப்பேன் ஆபத்துக்கள் உன்னை சூழாது பார்த்துக்கொள்வேன் அஞ்சாதே அசராதே அரணாய் சூழ்ந்துருப்பேன் இதை கேட்டு மெய்மறந்து தலைசாயாயோ....
                                                                                                                    ஆயிஷாபாரூக்

November 21, 2013

மீனவ நண்பன்

மீனவர்களுக்கு அர்ப்பணம்
  



கடல் அலையை தாலாட்டாய்
கேட்டு வளர்ந்தேன்
உப்பு காற்றை உயிர் காற்றாய்
சுவாசித்து வாழ்ந்தேன்
கட்டுமர படகினிலே வாழ்கையின்
பயணத்தை தொடங்கினேன்
வலை விரித்து மீன்களை
அதிர்ஷ்ட பொக்கிஷமாய் விற்றேன்
அலை சீற்றமோ புயல் காற்றோ 
உயிர் போராடும் சவாலாய் கண்டேன்
தினமொரு பொழுது மற்றொரு வாய்ப்பு
இறப்பும்  இழப்பும் கடந்த வாழ்வு
வலை விரிக்கும் எங்களுக்கு
கை விரிக்காமல் அள்ளித்தந்தாள்
அன்னமிடம் என் வளர்ப்பு அன்னை
என் வாழ்விடமான கடல் அன்னை

ஆயிஷாபாரூக்

November 17, 2013

என் காதலன் அவள் கணவன்


என் காதலன் அவள் கணவன்
என் காதலி அவள் மனைவி
சூழ்நிலையோ விதியோ எங்களை பிரித்தது
காலத்தால் எங்கள் காதல்நிலை மாறிப்போனது
காதல் நினைவுகள் நீங்கவில்லை
வெளியுலகில் புன்னகை உதிர்த்தபடி
மனதுக்குள் நினைவலைகளை புதைத்தபடி
எதார்த்த உலகில் வாழ்கிறோம் 





என் அன்பிற்கான
அகராதி நீ
உன் அகராதியின்
மொத்த சொற்களும் நான்
நம் காதலே
சொற்களஞ்சியம் 


                                                                                                      <3 ஆயிஷாபாரூக் <3

November 14, 2013

வரதட்சணை


பெண்ணிடம் வரதட்சணை
வாங்கிய மணமகனுக்கு
மட்டும் விலையான
மாது வீட்டினிலே

சல்லாபதிற்கு பணம்
வாங்கிய மாது
பலருக்கு விலையானது
பாலியல் சந்தையினிலே

பிள்ளை வரம் தரும் பெண்ணிடம்
பணம் பொருள் வாங்காதே
இல்லையென்று வந்தவளிடம்
எதையும் கூறி விரட்டாதே
ஆயிஷாபாரூக் 

November 12, 2013

ஆன்மாவின் தேடல்


 பரந்து விரிந்த வானங்களில்
காலையில் புலரும் கதிரவனில்
மழையுடன் கூடிய மின்னல் இடிகளில்
தேய்ந்து வளரும் சந்திரனில்
யாருமற்ற நிசப்பத்தமான தனிமைகளில்
காடுளுடன் நிறைந்த மலை முகடுகளில்
ஆர்ப்பரித்து விழும் நீர் வீழ்ச்சிகளில்
நுண்ணுயிர் பல்லுயிர் நிறைந்த நிலங்களில்
மாலை நேர தென்றல் பொழுதுகளில்
விண்ணில் மின்னி மறையும் நட்சத்திரங்களில்
காரிருருள் சூழ்ந்துள்ள இரவு காலங்களில்
அன்றாடம் சந்திக்கும் மனித இதயங்களில்
நீக்கமற நிறைந்திருக்கும் அண்டவெளியும்
பரம்பொருளாய் இயற்கையில் நிறைந்துக்கொண்டு
மனதிலும் இறையுனர்வாய் சுடரொளி விட்டு
எழுதியவையும் எழுதாதவையுமாக நிறைந்திருக்கும்
இறைவனே உன்னையன்றி ஆன்மாவிற்கு தேடல் ஏது

ஆயிஷாபாரூக் 

November 11, 2013

தேடலின் தருணம்



குத்தும் உன் முக தாடி
மனதை அசத்தும் மீசை
உன் குறு குறு பார்வை
சுண்டி இழுக்கும் உதடு
என் ஆணழகன் நீயட
எனை ஆளும் ஆணும் நீயட
என்றும் வேண்டும் நீயட

இரவு முழுதும் பகலின் பொழுதும்
நிமிடம் நிறைந்து விலகா தருணம்
இமைகள் இமைக்கும் அந்த தருணம்
சுவாசம் முட்டும் தேடலின் தருணம்
என்னுயிர் உன்னுயிராய் மாறிய தருணம்
தருணங்கள் உறைந்து மறையும் விடியும்
என் ஆணழகன் நீயட
எனை ஆளும் ஆணும் நீயட….

விடிந்த பின்னாலும் தேடல் தொடங்கும்
தொடங்கிய தேடலின் முடிவும் நீ
தொடர்ந்திடும் தேடலின் பொருளும் நீ
உன்னை என்னுள் வென்றிட நேரம்
தேடி காத்திருக்கும் மந்தாகினி நான்
உன் மனதை கவர்ந்த கள்ளியும் நான்
என் ஆணழகன் நீயட
எனை ஆளும் ஆணும் நீயட….

ஆயிஷாபாரூக் 

November 9, 2013

பல்சுவை கவிதை மொட்டுக்கள் - 2

அரசியல் சினிமா மோகமா 


 பெற்ற தாய் தந்தைக்காக
உன் உயிரைக்கொடுத்து வாழு
உன்னை பெற்றகடனாவது தீரும்
யாரோ அரசியல்வாதி
யாரோ நடிகருக்காக
உயிரை கொடுக்கும் உன் அற்ப
முடிவு எதற்கும் பயன்படாது....
அரசியல், சினிமா மோகம்
கொண்டு வாழும் இளைய
சமுதாயமே கொஞ்சம் விழித்திரு
நீ முட்டாளாகி கொண்டே இருக்கிறாய்....
 --------------------------------------------------------------------------------------------

திருநங்கையராய் பிறத்தல் அரிது

 எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்
வாழ்க்கை கால்வாயில் ஒரு சேர தள்ளப்பட்டோம்
காலத்தையோ விதியையோ பழிக்க விரும்பவில்லை
எங்கள் பிறப்பை ஏற்காத மக்களை பழிக்கின்றேன்
மனிதா, கொஞ்சம் உணரு எங்கள் ஏக்கங்களை
வாழ்க்கை வாழ்வதற்கான எங்கள் கனவுகளை
அன்பிற்கு மட்டும் ஏங்கும் உன்னத பிறவிகள் நாங்கள்
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
அதனினும் அரிது திருநங்கையராய் பிறத்தல்.....
 
 --------------------------------------------------------------------------------------------

 வெற்றியின் கோட்பாடு


வெற்றி ஒன்றும் எளிதல்ல
தோல்வி என்றும் உனதல்ல
இரண்டும் கலந்த அனுபவ பாதை
வகுக்கும் உனக்கோர் உன்னத வாழ்வை

சோர்ந்து மட்டும் போகாதே
வீழ்ந்தால் துவண்டு மாளாதே
உற்சாகம் என்றும் இழக்காதே
தோல்வியின்றி சரித்திரம் கிடையாதே

மனமதை உறுதியாய் மாற்றிவிடு
வரும் தடையை துணிந்து தாண்டிவிடு
சோம்பலை அறவே தள்ளிவிடு
இதுவே வெற்றியின் கோட்பாடு
 
 --------------------------------------------------------------------------------------------

 பேசாத அழைப்பு 


நீ பேசாத போது
நான் அழைக்கும்
ஒவ்வொரு அழைப்பையும்
நீ தவிர்க்கும் போது
என்னிடம் உன் மனது
மறுபடியும் பேச வைக்க
ஓவ்வொரு அழைப்பையும்
உணர்த்தும் இவள்
உனக்காகவே காத்திருக்கிறாள்…..
 
--------------------------------------------------------------------------------------------

 என் அழகான கவிதை நீ

 என் அழகான கவிதை நீ
அதில் எழுத்து பிழையும் நீ
அதன் கரு பொருளும் நீ
அர்த்தம் உணராத வரிகளும் நீ
அதிலுள்ள உயிரும் மெய்யும் நீ
உன்னை எழுதுபவள் மட்டும் தான் நான்... 
வார்த்தைகளன்றி மௌனமாகிறேன்
உன் இதயத்தை தொட்டு விட
எத்தனை தூரம் என்றறியாமல்
நித்தம் காதலுடன் ஆண்டுகள் கடந்து
ஜீவனற்ற வெறுமை கண்களுடன்
செய்வதறியாமல் வெறும் காதல் மட்டும்
மனதில் கொண்டு காத்துருக்கிறேன்...
காதல் செய் இல்லேயேல் கல்லறை செய்...
காதல் முக்தி தேடும் மனமதை
பதிலின்றி இனி கொள்ளாதே...
--------------------------------------------------------------------------

நீயே என் அழகு  

 இதற்கென்று தனி அழகில்லை
நெற்றியில் குங்குமமும்
கழுத்தில் தாலியும்
கைகளில் வளையல்களும்
காலில் கொலுசுகளும்
அழகு பெறுகிறது
என் மனதில் நீ வாழ்வதால்...


  ஆயிஷாபாரூக்