தங்கள் சுகங்களை, ஆசைகளை தியாகம் செய்து குடும்பத்திற்காக
அல்லும் பகலும் அயல்நாட்டில் அயராது உழைக்கும் உழைப்பாளிகள் நீங்கள், அயல்நாட்டில் வாழும் அனைவருக்கும் இந்த
கவிதையை சமர்பிக்கிறேன்..
அன்புடன் ஆயிஷா பாரூக்..
அயல்நாட்டில் வேலைக்கிடைத்த
ஆனந்தசெய்தியை அகம்மகிழிந்து
ஒய்வுற்ற தந்தைக்கு ஆறுதலாக
அன்பான தாய்க்கு மனம்குளிர
பாசமான தங்கைக்கு மணமுடிக்க
குறும்பான தம்பிக்கு நல்லபடிப்புத்தர
வீட்டில்லினி வருமை தீரும்மென
கடன் வாங்கிப்போக நகையடகுவைத்து
இத்தனை கனவோட மனச்சுமையாக
விமானமேறி வாழ்வை வென்றிட
பணியில் முதல்நாள் சேர்ந்தேன்
புதியஉலகம் புதியமனிதர்கள் தெரிந்தவேலை
சிறிதுகூச்சம் மனதில் ஒருவிதபயம்
ஊரில்சொன்னதும் கம்பெனியில் சொல்வதும்
வெவ்வேறு சம்பளங்கள் நடைமுறைகள்
செய்வதறியாது புரியாமல் கையெழுத்திட்டேன்
படிவத்தில் வந்துவிட்டோம் தலைவிதியென
வீட்டிலில்லூர் கனவுமெய்பட சுகங்களைமறந்து
வேலையோடியது தினம்முறை கண்ணீருடன்
மிஞ்சியஏக்கங்களும் உறைந்த நினைவுகளும்
சோகத்தைமறைத்து மகிழ்ச்சியை பேச்சில்காட்டி
தொலைபேசியில் வாரம் ஒருமுறைப்பொழுதில்
தாய்தந்தையின் நலமும் தம்பிதங்கையின் கல்வியும்
நண்பர்கள் உற்றார் உறவினர் செய்தியும்
நாட்டுநடப்பும் நல்ல செய்திகளும் தூக்க விசாரிப்பும்
பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் செவிவழி செய்திதான்
பரிமாறி காலம்கறைந்தோட தவமிறிந்தேன்
நானும் இயந்திரம்தான் உணர்வுயில்லா
பொருளீட்டும் கருவியாக ருசியில்லா
உணவூண்டு நெருக்கடியான இடத்தில்லுறங்கி
சகநன்பருடன் சககதைகளை கேட்டு
விடியல்லொருநாள் நமக்குவருமென ஆறுதல்கூறி
தேதி ஒன்றில் சம்பளம்மனுப்பி முப்பதில் வயிர்க்காய்ந்து
ஊருக்கு செல்லும்நாளை
ஆண்டுக்குறிப்பேட்டில்
தினம்மொருமுறை நோக்கி கண்னயர்ந்தேன்
ஓவ்வொருநாளும் இதேநிகழ்வென புரண்டோடி
இரண்டாண்டுகளானது விடுமுறைக்கண்டது
பூத்தகண்ணுடன் காத்துநிற்கும் பாசகுடும்பத்திற்கு
திக்குமுக்காட வியப்பில் ஆழ்த்த புத்தாடையும் பரிசும்
தங்கையின் திருமணத்திற்கு தங்கதாலிச்சங்கிளியும்
ராமர் வனவாசமுடிந்து நாடுதிரும்பியதுப்போல
கடன் குறைந்ததால் கவலைமறைந்த கண்களாய்
நிறைவேறிய சிலகனவுடன் பயணமானேன் தாய்நாட்டிற்கு
அயல்நாட்டின் அகதிவாழ்கையை முடித்துக்கொண்டு..
அருமையான கவிதை மிகவும் உண்ர்ச்சி பூர்வமானது.
ReplyDeleteநடைமுறையில் நடப்பதுவும் கூட...இப்படி எத்தனையோ அகதிகள் இன்னும் சம்பளம் என்ற ஒன்றை கானாதவர்களாக வெளிநாடுகாளில் இருக்கின்றனர். தொடருங்கள் உங்கள் கவிதையை
உங்களின் விமர்சனத்திற்கு மிக்க நன்றி நண்பரே! உங்களின் ஆதரவிற்கு நன்றி...
DeleteSuch a nice poem da..!! Keep write many such..waiting to read, comment and realise..!!
ReplyDeleteRavi..
Thanks Ravi for your comment..
Delete