May 12, 2012

அன்பு தோழி வாடி ... ஆடி தான் பார்போம்




விட்டு விடு சோகத்தை உன்னை விட்டு
சுடர் விடு ஒளியாய் மனம் விட்டு
வெற்றியோட வாழ பல வழி உண்டு
நின்றிடு தன்நம்பிக்கையால் வென்றிடு
மோதிடு கஷ்டங்களை சினம் கொண்டு

பிறந்திட்டோம் இங்கே வாழ்ந்து தான் பார்போம்
இல்லாத பாதையை அமைத்து தான் போவோம்
அன்பு தோழி வாடி ஆடி தான் பார்போம்
வாழ்கை விளையாட்டில் வெற்றி காண்போம் 

நலமுடன் பிறந்த மனிதனே மனதளவில் வளரவில்லை
நம்மை எண்ணி சிரிக்கும் மடமை ஓயவில்லை
சோதனைகள் இல்லாமல் இங்கு யாரும் இல்லை
சோர்ந்துவிட நீயும் நானும் கோழை இல்லை

திருநங்கையாக பிறந்தது உன் குற்றம் இல்லை
தைரியமாக வாழ்ந்துவிட்டால் பயம் இல்லை
வேதனையை மறந்துவிட்டால் துயரம் இல்லை
முன்னேறி நடந்துவிட்டால் தோல்வி இல்லை

அன்பு தோழி வாடி ஆடி தான் பார்போம் !!!
வாழ்கை விளையாட்டில் வெற்றி காண்போம் !!!

No comments:

Post a Comment