விடுமுறை நாளில் சீரான ஓடல் செய்வது வழக்கம். அன்று ஒரு அழகான காலைப்பொழுதில் சூரியன் தன் கதிர்களால் ஒளியை மெல்ல மெல்ல பரப்பிக்கொண்டு இருக்க குளிர்ந்த காற்றுடன் ரம்மியமான சுழலாக இருந்தது. மனதிற்கு இதமாகவும் உடலுக்கு நலமாகவும் இருந்தது ஓடல். சட்டென்று கார்மேகம் இருட்டிவிட பனி துளி போல தூறல்கள் ஆரம்பித்து மழை ஆனது.காலையில் மழை பெய்வது பல நபர்களுக்கு மிகவும் பிடித்தமான இயற்கை சுழல். மழைக்கு ஒதுங்க பார்த்தபோது ஒரு கல்லூரியின் பேருந்து நிழற்கொடை தெரிந்தது. சற்று நனைந்த படியே அங்கே சென்றேன். குளிர்ந்த காற்றுடன் மழையும் ரசிக்கும்படியாக இருந்தது. அங்கே உள்ள இருக்கையில் அமர்ந்தபடி அங்கிருக்கும் சுழலை ரசித்து கொண்டு இருந்தேன். அங்கே இருக்கும் கல்லூரியை பார்த்தபோது என்னுடைய பருவக்கால கல்லூரி வாழ்கை நெஞ்சில் அலைமோதி கடந்த கால நினைவலைகளுக்குள் சென்றது.
நம் அனைவரின் வசந்த காலம் எனக்கேட்டால் நாம் கல்லூரி வாழ்கையை தான் சொல்லுவோம். சுதிந்திர காற்றில் அழகாய் திரியும் பட்டாம்பூச்சி போல, எந்த ஒரு சுமையும் இல்லா வாழ்கை தருணம் அது. நமக்கு பிடித்தமான பல நிகழ்வுகள் கொண்டது கல்லூரி வாழ்கை.. நண்பர்கள்ளுடன் மனம்விட்டு பழகியது, சில நண்பர்களுடன் மட்டுமான நட்பு வட்டம், கல்லூரி சிற்றுண்டி சாலையில் டிபன், டி.., பேராசிரியர்களின் நீண்ட சலிப்பான விரிவுரைகள், வகுப்புகளுக்கு போகாமல் நண்பர்களுடன் சினிமாவிற்கு செல்வது, கேலியும் கிண்டலுமான குறும்பு காலங்கள், ஜாலியான சுற்றுப்பயணம், கண் முன்னே காணும் பல காதல்கள், காதல் கடிதங்கள், கலை விழா, விளையாட்டு போட்டிகள் இப்படி அது ஒரு அழகிய கனா காலம் என்றே சொல்லலாம்....
அந்த நினைவுகளை பெருமூச்சு விட்டபடி இப்போது தொடர்பில் இருக்கும் சில நண்பர்களை நினைத்து பார்த்தேன்.. மீண்டும் அந்த நாட்கள் வாழ்வில் வருமா என்று ஒரு சின்ன ஏக்கம்... நம் அனைவருக்கும் கல்லூரி வாழ்கை அழகான நாட்கள். அழகிய நாட்களை நாம் அசைபோடதான் முடியும்.. கடந்த காலத்தை நினைவுகளை கொண்டு மட்டுமே பயணிக்க முடியும்.. மழை சிறிது குறைய மழையில் நனையாத நான் கல்லூரி நினைவுகளின் காட்சிகளை கண்டபோது கண்கள் நனைந்தவாறு சென்றேன்.. இதை படிக்கும் போது உங்களின் நினைவுகளும் கல்லூரி காலத்தை பயணித்துருக்கும் என்பதில் சந்தேகமில்லை..

No comments:
Post a Comment