May 30, 2012

அயல்நாட்டு அகதிகள்

தங்கள் சுகங்களை, ஆசைகளை தியாகம் செய்து குடும்பத்திற்காக அல்லும் பகலும் அயல்நாட்டில் அயராது உழைக்கும் உழைப்பாளிகள் நீங்கள், அயல்நாட்டில் வாழும் அனைவருக்கும் இந்த கவிதையை சமர்பிக்கிறேன்.. 
அன்புடன் ஆயிஷா பாரூக்.. 
 
 
அயல்நாட்டில் வேலைக்கிடைத்த
ஆனந்தசெய்தியை அகம்மகிழிந்து
ஒய்வுற்ற தந்தைக்கு ஆறுதலாக
அன்பான தாய்க்கு மனம்குளிர
பாசமான தங்கைக்கு மணமுடிக்க
குறும்பான தம்பிக்கு நல்லபடிப்புத்தர
வீட்டில்லினி வருமை தீரும்மென
கடன் வாங்கிப்போக நகையடகுவைத்து
இத்தனை கனவோட  மனச்சுமையாக
விமானமேறி வாழ்வை வென்றிட
பணியில் முதல்நாள் சேர்ந்தேன்

புதியஉலகம் புதியமனிதர்கள் தெரிந்தவேலை
சிறிதுகூச்சம் மனதில் ஒருவிதபயம்
ஊரில்சொன்னதும் கம்பெனியில் சொல்வதும்
வெவ்வேறு சம்பளங்கள் நடைமுறைகள்
செய்வதறியாது புரியாமல் கையெழுத்திட்டேன்
படிவத்தில் வந்துவிட்டோம் தலைவிதியென
வீட்டிலில்லூர் கனவுமெய்பட சுகங்களைமறந்து
வேலையோடியது தினம்முறை கண்ணீருடன்
மிஞ்சியஏக்கங்களும் உறைந்த நினைவுகளும்
சோகத்தைமறைத்து மகிழ்ச்சியை பேச்சில்காட்டி
தொலைபேசியில் வாரம் ஒருமுறைப்பொழுதில்
தாய்தந்தையின் நலமும் தம்பிதங்கையின் கல்வியும்
நண்பர்கள்  உற்றார் உறவினர் செய்தியும்
நாட்டுநடப்பும் நல்ல செய்திகளும் தூக்க விசாரிப்பும்
பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் செவிவழி செய்திதான்
பரிமாறி காலம்கறைந்தோட தவமிறிந்தேன்   

நானும் இயந்திரம்தான் உணர்வுயில்லா
பொருளீட்டும் கருவியாக ருசியில்லா  
உணவூண்டு நெருக்கடியான இடத்தில்லுறங்கி
சகநன்பருடன் சககதைகளை கேட்டு
விடியல்லொருநாள் நமக்குவருமென ஆறுதல்கூறி
தேதி ஒன்றில் சம்பளம்மனுப்பி முப்பதில் வயிர்க்காய்ந்து
ஊருக்கு செல்லும்நாளை ஆண்டுக்குறிப்பேட்டில்
தினம்மொருமுறை நோக்கி கண்னயர்ந்தேன்

ஓவ்வொருநாளும் இதேநிகழ்வென புரண்டோடி
இரண்டாண்டுகளானது விடுமுறைக்கண்டது
பூத்தகண்ணுடன் காத்துநிற்கும் பாசகுடும்பத்திற்கு
திக்குமுக்காட வியப்பில் ஆழ்த்த புத்தாடையும் பரிசும்
தங்கையின் திருமணத்திற்கு தங்கதாலிச்சங்கிளியும்
ராமர் வனவாசமுடிந்து நாடுதிரும்பியதுப்போல
கடன் குறைந்ததால் கவலைமறைந்த கண்களாய்
நிறைவேறிய  சிலகனவுடன் பயணமானேன் தாய்நாட்டிற்கு
அயல்நாட்டின் அகதிவாழ்கையை முடித்துக்கொண்டு..

May 27, 2012

வாழ்க்கைச் சக்கரம்

இருப்பவை யாவும்மிங்கு நிஜமில்லையே
பிரிவுவென்பது இவ்வுலகில் இயற்கையே!
வருவதும் போவதும் காலச்சுழற்சியே
வெற்றியும் தோல்வியும் அனுபவமுயற்சியே!
உறவும் உற்றமும் நிலையில்லையே
பிறப்பும் இறப்பும் ஊழ்வினையே!
புண்ணியமும் பாவமும் வரும்பின்னேயே
தீதும் நன்றும் செயலின்விடையே!
இழப்பதற்கும் பெறுவதற்கும் ஒன்றுமில்லையே
சொந்தமான பொருள்ளேதும் இங்குயில்லையே!

May 25, 2012

யாவும் நீ அறிவாயடி தோழி!


மனதில் மின்னலாக
கண்ணிமைப்பொழுதில்
சூடான மேனியாய்  
பரவசச் சிலிர்ப்புடன்
மயங்கியப் பார்வையாய்
வார்த்தையை விழுங்கி
துடித்த செவ்விதல்கள்

கைமெலியாமல் நழுவிய
கண்ணாடி வளையல்கள்
கால்லிசைக்காமல் பேசிய
வெள்ளி கொலுசொலிகள்
குளிர்வாடை வீசாமல்
நெளிந்த கொடியான இடுப்பில்
பட்டாடைகள் பாரமாகி கட்டவிழ

இருமனம் ஓர்ருடலாய்
சேரத்துடித்தப் அப்பொழுதில்
இதயம் கனிந்துருகி
என்னவன் தொட்டப்பொழுதிலே
ஆயிரமாயிரம் உணர்வலைகள்
உடலெங்கும் இசையமைக்க

நீங்கினால் சுட்டுவிட
அணுகினால் குளிர்ந்துவிட
எறிந்த தீபத்தை அமிழ்த்திவிட்டு  
என்னவனின் தீபமாய் ஒளிர்ந்தேன்
காலைக்கதிரவன் புலரும்வரையில்  

வண்ணக்கோலமிட காலைப்பொழுதில்  
வாசலில் உன் வரவைக்கண்டு
வெட்கத்தால் முகம்தாழ்த்தி
சொல்ல பலயிருந்தும்
சொல்லாமல் புன்சிரிப்பால்
மறைத்தேனடி அவையறிந்தும்
உண்மையாவும் நீயறிவாயனப் போல  
இருபுருவமதை மேல்லுயர்த்தி
நீ சிரித்தாயடி அன்புத்தோழி!

May 23, 2012

எதிரி நீங்க தான்? (Some times for your life)

நம் ஒவ்வொருக்கும் வாழ்கையின் மீது தனியொரு தோற்றம் இருக்கிறது. நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் பல தரப்பட்ட பேர் பணியாற்றுகின்றனர். பல தேசத்து ஆண்கள் பெண்கள் என பன்முகத்தன்மையுடன் எங்கள் நிர்வாகம் இயங்குகிறது. அவர்களின் ஒவ்வொருக்கும் வாழ்கை பற்றி தனி தனி கண்ணோட்டங்கள், எண்ணங்கள்.. ஒரு சிலர் அவர்கள் வாழ்கையை அவர்களே சிக்கலாக மாற்றுகிறார்கள். மனித உறவு அன்புடன் தொடங்குகிறது, அன்புக்காக ஏங்குகிறது, அன்பை தேடி அலைகின்றது.

நான் சந்தித்த ஒருவருக்கு நல்ல கல்வி, கை நிறைய சம்பாத்தியம், நல்ல குடும்பம் என வாழ்கை அமைந்தாலும் அந்த  நபர்க்கு இன்னும் வாழ்கையில் திருப்தி இல்லை. அந்த நபரிடம் நான் சிறிது உரையாடினேன், அப்போது அவர் தான் இப்போது உள்ள அந்தஸ்தை விட அதிகமாக உயர வேண்டும், அதை பற்றிய கவலையில் உள்ளேன் என்றார். அவருடைய கவலைக்கு என்ன காரணம்? அடிப்படை தேவைகள் பூர்த்தியான பிறகு அடுத்து பிறதேவைகள் மற்றும் விருப்பங்கள் அவரை  ஆடம்பர வாழ்வின் தேடலுக்கு ஓட்டிக்கொண்டு செல்கிறது. பைக்கில் பயணிக்கும் ஒருவருக்கு அடுத்து கார் வாங்க ஆசை, கார் வாங்கிய பிறகு அடுத்து அதிலே அதிக சொகுசு உள்ள கார் வாங்க ஆசை, இப்படியே அவனின் மனம் கிடைத்ததை பற்றி மகிழாமல் இல்லாத ஒன்றை தேடி தேடி மனம் அமைதியை தொலைக்கின்றது.

அந்த மனிதரை போல நம் கண்கள் முன் பல நபர்கள் தங்களின் வாழ்கையில் கிடைத்த பல நல்ல விஷயங்களை நினைத்து மகிழாமல், இல்லாத ஒன்றை தேடி தேடி அவர்களின் வாழ்கை பயணம் ஏக்கத்துடன் செல்கிறது. நிறைவேறிய ஆசை, வேண்டிய வசதி, கிடைத்த அன்பு இருந்தும் இன்னும் அதிக ஆசை, அதிக ஆடம்பரம், அதிக வசதி, அதிக அன்புக்காக மனிதன் நிம்மதியை தொலைத்து கவலையில் மூழ்கிறான். வாழ்க்கை என்பது ஒரு பயணம், நம் பயணத்தில் உள்ள எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். நம்மில் பலர் வாழ்கையின் எளிய உண்மையை புரிந்துகொள்வது இல்லை. உங்களுக்கு அமைந்த வாழ்கையை நினைத்து மகிழ்ச்சியுடன் பயணியுங்கள், உங்களின் வாழ்கையில் இல்லாத ஒன்றை நினைத்து கவலைக்கொள்ளாதிர்கள்.

May 16, 2012

விழித்திரு மானிடா!



நீ எந்த ஜாதி என்று கேட்டா
பூமி உன்னை சுமக்கின்றது!

நீ எந்த மதம் என்று பார்த்தா
நிலம் நீர் கொடுக்கிறது!

நீ எந்த இனம் என்று அறிந்தா 
காற்று சுவாசிக்க அனுமதிக்கிறது!


கல்விக்கும் வேலைக்கும் ஜாதியை பார்க்கிறாய்
அறிவும் செல்வமும் ஜாதியை பார்ப்பதில்லை!

பிறப்புக்கும் இறப்புக்கும் ஜாதியை பார்க்கிறாய்
ஜனனமோ மரணமோ ஜாதியை பார்ப்பதில்லை!

விளையாட்டிலும் வீரத்திலும் ஜாதியை பார்க்கிறாய்
சாதனையும் தைரியமும் ஜாதியை பார்பதில்லை!

நிறத்திற்கும் மொழிக்கும் ஜாதியை பார்க்கிறாய்
நோயோ புலமையோ ஜாதியை பார்ப்பதில்லை!

கோவிலுக்கும் கருவறைக்கும் ஜாதியை பார்க்கிறாய்
இறைவனோ தீபமோ ஜாதியை பார்பதில்லை!

பாட்டுக்கும் ஆட்டத்துக்கும் ஜாதியை பார்க்கிறாய்
இசையோ கலையோ ஜாதியை பார்ப்பதில்லை

மூடன் ஏற்படுத்திய பிளவு மனிதனுள்  
கீழ் ஜாதியாம் மேல் ஜாதியாம்
மேல் ஜாதி என்றால் உனக்கு சொர்கமோ!
கீழ் ஜாதி என்றால் உனக்கு நரகமோ!
சொர்கமோ நரகமோ அவையிரண்டும்
ஜாதியோ மதமோ பார்ப்பதில்லை
உன் புண்ணியக் கணக்கையோ 
நீ செய்த பாவக் கணக்கையோ 
இறைவன் பார்க்கிறான்! மதிப்பிடுகிறான்.

மரமோ செடியோ கொடியோ
மிருகமோ பறவையோ நுன்னுயிரோ
ஜாதியோ மதமோ இனமோ பார்ப்பதில்லை
அறிவும் பண்பும் தெளிவும் இருந்தும்
மூடனாய் மூர்க்கனாய் மூளையிழந்து 
ஜாதியை பேசி மனிதனாய் வாழ மறந்தாய்யடா!

விழித்திரு மானிடா! விழித்திரு!!!

May 15, 2012

நேரம் பொன்னானது!


தேர்வு எழுதும் மாணவனுக்கு
தேர்வு நேரம் பொன்னானது!!!

பதவி போட்டியிடும் அரசியல்வாதிக்கு
வாக்கு நேரம் பொன்னானது!!!

விளையாட்டு மைதானத்தில் தடகளவீரனுக்கு
 ஓடும்நேரம் பொன்னானது!!!

குழந்தை பிரசவிக்கும் கர்ப்பிணிக்கு
பிரசவ நேரம் பொன்னானது!!!

போரில் சண்டையிடும் ராணுவவீரனுக்கு
போர் நேரம் பொன்னானது!!!

விண்வெளி சோதனையில் விஞ்ஜானிகளுக்கு
சோதனை நேரம் பொன்னானது!!!

சாவின் விளிம்பில் இருக்கும் நோயாளிக்கு
சிகிச்சை நேரம் பொன்னானது!!!

குற்றவாளி கூண்டில்லுள்ள  கைதிக்கு
வழக்கறிஞரின் வாதநேரம் பொன்னானது!!!

வாழ்வின் ஓவ்வறு துளியும் பொன்னானது ஆனால் நாம் நம் அவசர தேவையின் போது மட்டுமே நேரத்தின் முக்கியத்தை உணர்கிறோம். நேரம் என்றுமே பொன்னானது தான்!
நம் நேரத்தை ஆக்கபூர்வமாக செயல்படுத்துவோம் நண்பர்களே!!!

May 13, 2012

தமிழீழம் - கனவா நினைவா

1948 ஆம் ஆண்டில் இலங்கைச் சிங்களப் பெரும்பான்மை அரசு பிரிட்டிஷ் அரசிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற  நாள்முதல் தமிழர்களின் மனித உரிமைகளை திட்டமிட்டே  இனவழிப்பை  இது வரை சிங்களஅரசு  நடத்திவருகிறது.  சிங்கள மொழிக்கு, சிங்களவர்கள் பின்பற்றும் பெளத்த சமயத்துக்கு சிறப்புரிமைகள் தந்து, தமிழர்களின் கல்வி வேலைவாய்புக்களை அபகரித்து, திட்டமிட்ட குடியேற்றங்களை நிகழ்த்தி, நியாமற்று முறையில் கைதுசெய்து சிறையில் அடைத்து தமிழர்களின் மனித உரிமைகளை இலங்கைச் பெரும்பான்மைச் சிங்கள அரசுகள் மீறின. இதன் உச்ச கட்டமாக இதுவரை பல லட்ச தமிழர்கள் தொகை தொகையாக கொல்லப்பட்டனர். சிங்கள அரசு கலவரங்களை ஏற்படுத்தியும், வானூர்திகளில் இருந்து கண்மூடித்தனமாக குண்டு வீசியும், எறிகணைகளை வீசியும், நேரடியாகச் சுட்டும், சித்திரவதை செய்தும் ஈழத்தமிழர்களை படுகொலை செய்தது. மானிட வரலாற்றில் நீண்ட இனப்படுகொலை இது என்றே கூறலாம்.

நெஞ்சை உருக்கும் சோகத்தின் கதையை தமிழீழம் கொண்டுள்ளது. விடியல் பிறக்காதா என்று தமிழீழம் ஏங்கி தவிக்கிறது. மீளமுடியாத சோகங்களும்  கலையாத கவலைகளும் மட்டுமே எஞ்சி நடைபிணங்களாக தமிழின மக்கள் விரக்தியுடன் ஆற்றனா துயரத்தில் வாழ்ந்து கொண்டு இருகிறார்கள். தமிழகத்தில் உள்ள தலைவர்கள் தமிழீழத்தை ஒரு அரசியல் யுக்திகாக மட்டுமே பயன்படுத்தி மக்களை ஏமாற்றி வருகின்றனர். தமிழீழத்தில் உள்ள தலைவர்களிடையே ஒற்றுமை இல்லாமல் இருப்பது தமிழீழ மக்களிடையே ஒரு மிகப்  பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது!

எந்த திசையில் பயணிப்பது யார் தங்களை வழிநடத்த போகிறார்கள் என்று தெரியாமல் தவிக்கும் தமிழீழ மக்களுக்கு யார் துணை?

வீடுகளை இழந்து, உறவுகளை இழந்து, உடமைகளை இழந்து நிற்கதியாக இருக்கும் அவர்களுக்கு என்ன அறுதல் கூற முடியும்?

அவர்களுக்கு ஏற்பட்ட அநீதிகளுக்கு என்ன பதில்?

மீண்டும் தமிழீழம் மலருமா?

சுதந்திர காற்றை சுவாசிக்க நினைக்கும் தமிழின சிறார்களின் ஆசை நிறைவேறுமா?
இது போன்ற கேள்விகளுக்கு உங்களிடம் விடை உள்ளதா....?

வாழ்க்கை - ITS UR CHOICE

ஒரு தத்துவ பேராசிரியர் தன் வகுப்பறையில்  முன் மேசையில் சில பொருட்களை வைத்து நின்றார். வகுப்பு தொடங்கிய போது, அவர் ஒரு மிக பெரிய மற்றும் காலியான அகன்ற வாய்க்கொண்ட  கண்ணாடி ஜாடியில் கற்களை நிரப்ப தொடங்கினார். கண்ணாடி குடுவை முழுவதும் கற்களை நிரப்பினர். இப்போது கண்ணாடி குடுவை நிரம்பிவிட்டதா என்று மாணவர்களை பார்த்துக்கேட்டார்? அதற்கு மாணவர்கள் ஆமாம் என்று பதில் அளித்தனர்.

பின்னர் ஒரு பெட்டியில்லிருந்து கூலாங்கற்கள் சிலவற்றை எடுத்து நிரப்பினார். ஜாடியை சிறிது குலுக்கியதும் திறந்த வெளி பகுதிகளில் கூலாங்கற்கள் கற்களோடு நிரப்பிக்கொண்டன. மறுபடியும் மாணவர்களிடம் கண்ணாடி குடுவை நிரம்பிவிட்டதா என்று கேட்டார்? அதற்கு மாணவர்கள் மீண்டும் ஆமாம் என்று பதில் கூறினர்.

பேராசிரியர் மீண்டும் ஒரு பையில் இருந்து மணலை ஜாடியில் ஊற்றினார். மணல் ஜாடி முழுவதும் நிரப்பிக்கொண்டது. மீண்டும்  மாணவர்களிடம் கண்ணாடி குடுவை நிரம்பிவிட்டதா என்று கேட்டார்? அதற்கு ஆமாம் என்று மாணவர்கள் ஒருமித்து பதிலளித்தனர்.

பேராசிரியர் மாணவர்களை பார்த்து " இந்த ஜாடி உங்கள் வாழ்கையை போன்றது" என்றார். இதில் நிரம்பிய கற்கள் உங்களின் வாழ்க்கையில் முக்கியமானவைகள் -  அது உங்கள் குடும்பம்,  உங்கள் ஆரோக்கியம், உங்கள் குழந்தைகள் மற்றும் உங்கள் உறவினர்கள் என பல அடிப்படைகளை குறிக்கிறது. இவைகள் உங்கள் வாழ்க்கையை முழுமையடைய செய்கிறது. 

உங்கள் வேலை, உங்கள் வீடு, உங்கள் வாகனங்கள் போன்றவைகள்  கூலாங்கற்கள் போன்றவை. இவைகள் அனைத்தும் இரண்டாம் பட்சம் உங்கள் வாழ்க்கையை சொகுசாக மாற்றக்கூடியவை. இவைகள் இல்லாவிட்டாலும் பிரச்சினையில்லை. மணல் மற்ற எல்லாவற்றையும் குறிக்கிறது.

நீங்கள் முதலில் மணலை ஜாடியில் நிரப்பினால்  கற்களையோ கூலாங்கற்களையோ உங்களால் நிரப்பி இருக்கமுடியாது. அது போன்றது தான் உங்கள் வாழ்கையும். நீங்கள் சிறிய விஷயங்களில் அதிக முக்கியத்துவம் கொடுத்தால், உங்களின் குடும்பம்,குழந்தைகளில் அதிக கவனம் செலுத்த முடியாது.

குடும்பத்திற்கு அதிக நேரத்தையும் முக்கியத்தையும் கொடுங்கள். உங்களின் குழந்தையுடன் விளையாடுங்கள், உங்கள் குடும்பத்துடன் வெளியே செல்லுங்கள். உங்கள் பெற்றோர்களுடன் நேரம் செலவிடுங்கள். உங்கள் துணையுடன் காதலை பரிமாறுங்கள். இன்றைய யுகத்தில் நாம் சின்ன சின்ன விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி நம் குடும்பத்துடன் நேரம் கழிக்க  முடியமால் தவிக்கிறோம்.


உங்களின் மகிழ்ச்சி சின்ன சின்ன விஷயங்களில் இல்லை.. உங்கள் வாழ்க்கை ஜாடியில் முதலில் கற்களை நிரப்புங்கள் மற்றவைகள் அனைத்தும் அடுத்தபடியே.. நீங்களே இப்பொழுது முடிவு செய்யுங்கள் உங்களுக்கு எது வேண்டும் என்று?

இது ஒரு மொழிமாற்ற படைப்பு!

சில்க் சில்க் சில்க் - NOT A DIRTY PICTURE

ஆந்திர மாநிலத்தில் ஏலுறு என்ற கிராமத்தில் ஏழை குடும்பத்தில் விஜயலக்ஷ்மியாக பிறந்து தென்இந்தியாவை தன்னுடைய அழகாலும் கவர்ச்சியாலும் தனகென்று ஒரு இடத்தை   நிலைப்படுத்திய பிரபல நடிகை சில்க் ஸ்மிதா. ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்து 1979ல் வண்டிச்சக்ரம் என்ற தமிழ் படத்தில் அறிமுகமாகி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் கிட்டத்தட்ட 450 படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து மக்களிடம் தனகென்று ஒரு தனி பெயரை தக்கவைத்து கொண்டார்.17 வருட சினிமா வாழ்கையில் சில்க் ஸ்மிதா பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்திருக்கிறார். ஒப்பனை பெண்ணாக தன்னுடைய கலைபயனத்தை தொடங்கி  1980- 90 களில் தென் இந்திய திரையுலகை தன்னுடைய கவர்ச்சியாலும் நடிப்பாலும் தனக்கென ஒரு இடத்தை நிலைபடுத்திகொண்டார்.

தெனிந்தியா முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி போன்ற பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதிகமாக குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பினாலும் கவர்ச்சி வாய்ப்புகளே சில்க்கை தேடி வந்தது. Yamakinkarudu (1982), Khaidi (1983), Challenge (1984), Layanam (1989) remake in Hindi as Reshma Ki Jawani and Adharvam (1989) போன்ற படங்கள் சில்க்கை புகழின் உச்சிக்கு அழைத்துசென்றது. அலைகள் ஒய்வதில்லை, கோழி கூவுது போன்ற தமிழ் படங்களில் அனைவரும் ரசிக்கும்படி வகையில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்தார். சில நடிகைகள் நடிக்க தயங்கிய கதாபாத்திரங்களில் சில்க் தைரியமாக நடித்தார்.

பிரபலமான நடிகையான சில்க் ஸ்மிதா செப்டம்பர் 23,1996 தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக மாறியது. நிதி நெருக்கடி, காதல் குழப்பங்கள், மன சோர்வு போன்ற பல காரணங்கள் கூறினாலும் சில்க் ஸ்மிதாவின் தற்கொலை மர்மகதையாக உள்ளது. Dirty Pictures என்ற ஹிந்தி படம் சில்க் ஸ்மிதாவின் வாழ்கையை தழுவி எடுக்கப்பட்டது. மிகப்பெரிய வசூல் செய்தும் அந்த படத்தில் சில்க் ஸ்மிதாவின் வேடத்தில் நடித்த வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுத்தந்தது. இன்றும் சில்க்கை ரசிகர்கள் மறக்காமல் ரசிக்கிறார்கள் என்பதற்கு அது ஒரு எடுத்துக்காட்டு. திரையுலகில் சில்க் விட்டுச்சென்ற இடம் இன்றும் காலியாகவே உள்ளது. எத்தனையோ நடிகைகள் அவர் இடத்திற்கு போட்டியிட்டாலும் ரசிகர்கள் சில்கிற்கு கொடுத்த இடத்தை எவராலும் நெருங்க முடியவில்லை. எதையும் வெளிப்படையாக தைரியமாக பேசும் குணம் கொண்டவர். திரையில் நடித்தாலும் நிஜத்தில் நடிக்காதவர் அவர். யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்ற பழமொழிக்கு ஏற்ப சில்க் ஸ்மிதா இறந்த பின்னும் அவருடைய வாழ்க்கையை தழுவி எடுத்த Dirty Pictures படத்தின்  வசூலே சாட்சி..

'Being a sex symbol is a heavy load to carry, especially when one is tired, hurt and bewildered' – Silk smitha.

என்னவளின்றி நானில்லை...

ஒப்பனை செய்ய விருப்பமில்லை
மனம் ஒப்பாமல் செயலில்லை 
மதுவை குடிக்க புடிக்கவில்லை
உணவை ருசிக்க இஷ்டமில்லை
போதையில் மறக்க வழியில்லை
காலம் கரைய நேரமில்லை

கணவாய் காண முடியவில்லை
பிரிந்திட மனமும் நினைக்கவில்லை
ஆறுதல் சொல்ல அவளில்லை
மனம் துடிப்பதையவள் காணவில்லை 
காதலில் தோற்றால் வாழ்வில்லை
கரைந்து உடலானது நூலிலை

காதலியை மறக்க மனமில்லை
அவள் நினைவால் உறக்கமில்லை
என் வலியையவள் உணரவில்லை
என்னவலன்றி ஊன் உயிரில்லை
அவளிடன்சேர செல்வேன் பல எல்லை
என் காதலுக்கு விலையுமில்லை
அவளிடம் சேரும்வரை மரணமில்லை..

பயணம்

பிறந்தது முதல் பயணிக்கிறேன்
ஓவ்வறு சூழ்நிலையிலும்
பல வித அனுபவங்கள்
சில வகை மகிழ்ச்சி ; சில வகை துக்கம்
இருந்தும் பயணியாக
போக வேண்டிய தூரம் தெரியாமல்
என் பயணம் தொடர்கிறது.

தொடக்கம்

இருளில்லிருந்து வெளிச்சம் தொடங்குகிறது
பயதில்லிருந்து தைரியம் தொடங்குகிறது
நம்பிக்கையிலிருந்து  வாழ்கை தொடங்குகிறது
இரவில்லிருந்து பகல் தொடங்குகிறது
எளிமையிலிருந்து புகழ் தொடங்குகிறது
ஆணவத்திலிருந்து அழிவு தொடங்குகிறது
பொறமையிலிருந்து வஞ்சம் தொடங்குகிறது
உணர்விலிருந்து ஆசை தொடங்குகிறது
சிந்தனையிலிருந்து செயல் தொடங்குகிறது
தோல்வியிலிருந்து வெற்றி தொடங்குகிறது

வாழ்க்கை அழகானது - CHILLAX

நான் விமலா, வயசு 23 சாப்ட்வேர் கம்பெனில வொர்க் பண்றேன்.. என் தோழி திவ்யா பார்க்க சொன்னா. உங்கள அவசரமா பார்க்கணும், முக்கியமான விஷயம் பேசணும் வக்கில் சார்.. நான் உங்கள பார்க்கதான் வந்துட்டு இருக்கேன் என்று மொபைல் போனில் பேசிக்கொண்டு பேருந்தின் வலது ஓர ஜன்னலில் மழை சிந்திய கண்ணாடியை கோலம்மிட்டபடி அமர்ந்து இருந்தாள்.

கண்களில் கண்ணீர் கோர்த்தபடி மனதில் பல குழப்பமான கேள்விகளுக்கு பதில் தெரியாமல் மிகுந்த கவலையுடன் காணப்பட்டாள். வாழ்கை எப்படிலாம் மாறுது, நாம ஒன்னு நினைக்கிறோம் தெய்வம் ஒன்னு நினைக்குது... என்று மனதில் முனங்கியபடி இருந்தாள். பேருந்து நிறுத்தத்தில் ஒரு வயதான தம்பதி ஏற விமலாவின் இருக்கை அருகே இருவரும் அமர்ந்தார்கள். அந்த வயதான தம்பதிக்கு வயது எழுபதிற்கு மேல் இருக்கும். 

‘ஏம்மா சிவகாமி வாடை காத்து வீசுது உனக்கு ஒத்துக்காது இந்த மப்ளர தலைல கட்டிக்கோ தாயி’ என்று அந்த முதியவர் கையில் இருந்த சின்ன கூடையில் இருந்து அந்த பாட்டிக்கு மப்ளர கட்டி விட்டார்.. பாட்டி சிரித்தபடி விமலாவிடம் ‘உங்க தாத்தாவுக்கு என்  மேல பாசம் அதிகம் பாரு’னு சொல்ல விமலாவிற்கு உதட்டில் சிறு புன்னகை. மழையுடன் மாலை நேர பயணத்தில் குளிர்ந்த காற்று வீச விமலா பேருந்து ஜன்னலை மூடினாள்.
குளிர்ந்த காற்றில் தாத்தாவின் கை நடுங்க தன் மேலில் இருந்த சால்வையை பாட்டி தாத்தாவிற்கு போர்த்தி விட்டு சேலையை இழுத்திபோர்த்தியபடி தாத்தாவின் கையை பிடித்து கொண்டார். ‘அவர்கிட்ட அப்பவே சொன்னேன் மழை பெய்யுது நாளைக்கு காலைல டாக்டர்கிட்ட எனக்கு போய் காட்டலாம்னு கேட்காம இப்போ பாருமா ரொம்ப குளிருது அவருக்கு’ என பாட்டி விமலாவிடம் சொல்ல.. ‘உன்னோட மருந்து தீந்து போச்சுல சிவகாமி அதுனால தான் நான் புறப்பட சொன்னேன் பரவாயில்லை இன்னும் இருவது நிமிஷம் தான் கிளினிக்கு ஸ்டாப், இறங்க போறோம்’ என்றார் தாத்தா..

இந்த தள்ளாத வயதிலும் இவர்கள் இருவருக்கும் உள்ள அன்னோனியமான அன்பை கண்டு விமலாவிற்கு கண்ணில் தாரை வார்த்தது. விமலாவின் கண்ணீரை கண்ட பாட்டி \"ஏம்மா அழுகுற என்ன ஆச்சு\" என்றாள்.. \"உனக்கு ஏதும் முடியலையா என்ன ஆச்சு மா\" என விமலாவிடம் கேட்க அழுத படி விமலா ஒன்னும் இல்ல பாட்டி என்றாள். \"சொல்லுமா நான் உனக்கு பாட்டி மாறி, சொல்லுமா ஏன் அழுகுற அழுகாத தாயி\" என்றாள் பாட்டி. ‘எனக்கும் என் புருஷனுக்கும் ஒரே சண்டை பாட்டி, இனிமே எனக்கு அவரோட ஒத்துவாழ முடியாது. நானும் அவரும் வீட்ட எதிர்த்து காதலிச்சு தான் கல்யாணம் பண்ணினோம். எங்களுக்குள்ள நல்ல ஒத்துமை இருந்துச்சு, இப்போ எப்போதும் சண்டை சச்சரவு தான்.. என்னால இனிமே அவரோட வாழ முடியாது பாட்டி’.. என்று அழுதபடி பாட்டியுடன் கூறினாள்.

விமலாவின் கண்களை பாட்டி துடைத்தபடி \' இங்க பாருமா ஏதும் அவசர படாதே, இப்படிலாம் பேசாதே கண்ணு நீ நல்லா வாழனும் தாயி, குடும்பம்னா சந்தோசம் கஷ்டம் எல்லாம் இருக்கும் கண்ணு, பொம்பளைங்க நாம தான் அனுசரிச்சு போகணும், பிரியறது பத்தி யோசிக்கிற நீ சேர்ந்து வாழ்றத பத்தி யோசிச்சு பாரு நல்லா இருக்கும். இப்போ உள்ள புள்ளைங்க புரிஞ்சுக்காம காதல் பண்ணி கஷ்டபடுறிங்க.. நானும் உங்க தாத்தாவும் இத்தனை வருசமா சேர்ந்து இருக்கோம், எங்களுக்குள்ளயும் சண்டை சச்சரவு எல்லாம் இருக்கு ஆனா அதுக்கு மேல எங்ககிட்ட அன்பு, விட்டுகொடுத்து போறது, அனுசரணை இருந்ததுனால நாங்க இவ்வளவு வருஷம் சேர்ந்து இருக்கோம்..  வாழ்க்கை ரொம்ப அழகானது நாம தான் நம்மள கஷ்டபடுதிகிறோம்..  நான் வாழ்ந்த பொம்பளை, உன்னோட பாட்டி மாறி நான் சொல்லறத கேளுமா.. நீ காதலிச்ச பையன்னையே கல்யாணம் பண்ணிக்கிட்ட அப்புறம் என்ன, நல்லா வாழு தாயி... சந்தோசமா வாழு..  போ போயி அந்த தம்பிகிட்ட நல்லா மனசுவிட்டு பேசு, கோவபடாம அன்பா பேசு தாயி எல்லாம் சரி ஆயிடும்… பாட்டியின் இந்த வார்த்தைகள் விமலாவின் மனகுளப்பதிற்கு ஆறுதலாகவும் விடையாகவும் அமைந்ததாக எண்ணினாள்.எங்கள மாறி நீங்களும் சந்தோசமா இருக்கணும் தாயி என்றார் தாத்தா..

அந்த வயதான தம்பதி இருவரும் விமலாவை மகிழ்ச்சியுடன் அனுப்பினார்கள். இந்த வயதான தம்பதிகளின் அன்பும் வழக்கை முறையும் அவளுக்கு தன் இல்லறவாழ்கையில் நம்பிக்கை ஏற்படுத்தியது. தாத்தாவிற்கும் பாட்டிக்கும் நன்றி கூறி விமலா அடுத்த நிறுத்தத்தில் இறங்க தயாரானாள். தன் கணவனை விவாகரத்து செய்ய வக்கில்லை காணப்போய்க்கொண்டுருந்த விமலா அடுத்த நிறுத்தத்தில் இறங்கிதன் கணவனைக்காண சென்றாள். தான் அவசரமான முடிவை எடுத்ததிற்கு வருந்தியபடியே தன் கணவனை கைபேசியில் அழைத்தாள்..

வியாபாரமான மருத்துவம்

ஒரு காப்பீட்டு நிறுவனதின் ஆய்வில் சராசரி இந்தியன் 12,036 ரூபாய் தனியார் மருத்துவமனையில் ஒரு நாள் தங்கி செலவு செய்கிறான் என்று கூறுகிறது. இந்தியாவில் மருத்துவம் என்பது வியாபார சந்தையாக உள்ளது. நோயாளிகளுக்கு அதிகபடியான கட்டணத்தை வசூலிக்க எந்த ஒரு தனியார் மருத்துவமனையும் தவறுவது இல்லை. பல மருத்தவமனைகள் நோயாளிகளின் அறியாமையையும், நோயின் தன்மையை பயன்படுத்தியும் அதிகப்படியான கட்டணத்தை வசூலிக்கிறது.

பெரும்பாலும் மருத்துவர்கள் பரிந்துரைகளை தங்கள் மருந்து கடைகளில் வாங்க கட்டாயபடுதுகின்றனர். விலை உயர்ந்த மருந்துகளையே அதிகமாக பரிந்துரை செய்கிறார்கள். தங்களிடம் மாட்டும் நோயாளிகளை பணம் ஈட்டும் இயந்திரமாக இன்றைய பெரும்பாலான மருத்துவர்கள் பார்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.

சரியான அனுசரிப்பும், நல்ல கவனிப்பும் போதிய சிகிச்சை வசதியும் பல அரசு மருத்துவமனையில்  இல்லாததால் ஏழை, நடுத்தர மக்கள் தனியார் மருத்துவமனையை நாடுகின்றனர்.
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற மக்களை ஊக்குவிக்க அரசு பல நல்ல  திட்டங்களை அறிவிக்க வேண்டும். 
தனியார் பள்ளிகளில் கட்டணம் நிர்ணயம் செய்தது போல் தனியார் மருத்துவமனைகளிலும் கட்டணம் நிர்ணயம் செய்தால் சிறந்ததாகும்.
அணைத்து நோயாளிகளும் நல்ல அனுசரணையுடன் போதிய கவனிப்புடன் முறையான சிகிச்சை அரசு மருத்துவமனையில் பெறுவதை தீவிரமாக அரசு கண்காணிக்க வேண்டும். சில அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை அளித்தாலும் மக்களுக்கு அதை பற்றிய  போதிய விழிப்புணர்வு இல்லை.

மருத்துவம் என்ற புனிதமான சேவை இன்று வர்த்தகமானது  நம் அனைவரின்  துரதிருஷ்டவசம். நோயாளிகள் இல்லமால் மருத்துவர்கள் இல்லை, மருத்துவர்கள் நோயாளிகளின் சிகிச்சைக்கு ஏற்ற சரியான கட்டணத்தை வசூலித்தால் சாலச்சிறந்தது. இறைவனுக்கு அடுத்தபடியாக மருத்துவர்களை மக்கள் காண்கிறார்கள், அப்படி பட்ட மக்களை அதிக கட்டணம் வசூலித்து வஞ்சிக்காமல் மருத்துவர்கள் தங்கள் சேவையை சரியான கட்டணத்துடன் வழங்கினால் மிகவும் நல்லது.

அக்னி - 5 ஏவுகணை


இந்தியாவின் சக்தி ஏவுகணை அக்னி 
ஒலியை விட வேகம் சீறிப்பாயும் சிங்கம்
வீலர் தீவின் விஞ்ஞான அதிசயம் 
அணுவை சுமக்கும் அசாதாரண ஏவுகணை
ஐம்பது ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் தாக்கும்
கண்டம் விட்டு கண்டம் பாயும் வான்ஜாலம்
நவீன உலகின் பாதுகாப்பின் வஸ்த்ரம்

அக்னி - 5 ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட அனைத்து விஞ்ஞானிகளுக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்..

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...

அறிவைத்தானம் செய்தாய் மடமை நீக்கினாய்
அன்னத்தானம் செய்தாய் பசியை போக்கினாய்
கண்தானம் செய்தாய் பார்வையை அளித்தாய்
ரத்ததானம் செய்தாய் உயிரை கொடுத்தாய்
உறுப்பைத்தானம் செய்தாய் தெய்வமாகி போனாய்

இறந்தபின் உறுப்புதானம் செய்தால் பலஉயிரை இறைவனால் மட்டும் அல்ல நம்மாலும் காப்பாற்றமுடியும் தோழர்களே...

இறந்தும் வாழலாம்!!!

ஒரு நாள் நீயும் வெல்லலாம்...


ஒரு நொடித்தீப்பொறி கவிதையாகலாம்
ஒரு மரம் காடு ஆகலாம்
ஒரு எழுத்து சொல்லை மாற்றலாம்
ஒரு புன்னகை நட்பை தொடக்கலாம்
ஒரு நட்சத்திரம் கப்பலுக்கு வழிக்காட்டலாம்
ஒரு வாக்கு தேசத்தை மாற்றலாம்
ஒரு சிரிப்பு மனசுமையை இறக்கலாம்.
ஒரு படி பயணத்தை தொடக்கலாம்
ஒரு செயல் வாழ்கையை திருப்பலாம் 
ஒரு நம்பிக்கை உன்னை வாழவைக்கலாம்
ஒரு நாள் நீயும் வாழ்கையில் உயரலாம்

ஆகையால் நண்பர்களே, எதற்காகவும் கலங்க வேண்டாம் .. நம்மால் முடியும் என்ற நம்பிக்கையோடு மனஉறுதியுடன் உழைத்தால் நாமும் வாழ்வில் சாதிக்கலாம்...

மனிதன் ஒரு மெழுகுவர்த்தி...

எரிய எரிய
மெழுகு உருகுவதுபோல்
வயது ஏற ஏற
மனிதன் ஆயுள் குறைகிறது...

அடுத்தவருக்கு வெளிச்சம் கொடுத்து
மெழுகு உருகுகிறது
அடுத்தவருக்காக வாழ்ந்து வாழ்ந்து
மனிதன் உருகுகிறான்...

உடலை விட்டு உயிர் பிரிவது போல
மெழுகை விட்டு திரி பிரிகிறது
கடைசியில் உடலும் மெழுகும் மட்டுமே மிச்சம்..

காத்திருக்கிறோம்

பிறக்கவும் காத்திருக்கவேண்டும்
பின் வாழ்கையில் எல்லா
நேரங்களிலும் நிலையிலும்
சிலருக்காக சிலவற்றுக்காக
காத்திருக்கிறோம் ;
தெரிந்தும் தெரியாமலும்
அறிந்தும் அறியாமலும்
புரிந்தும் புரியாமலும்
காத்திருந்து காத்திருந்து
சோர்ந்தவிட்ட நாம் பின்
இறக்கவும் காத்திருக்கவேண்டும்!

ஆள் கடத்தல் - ஒரு கண்ணோட்டம்

ஆள் கடத்தல் தற்போது அதிகம் வருவாய் கொண்ட தொழிலாக மாறியுள்ளது. குஜராத்தில் உள்ள பின்தங்கிய குக்கிராமங்களில் உறவினர்களே தங்கள் வீட்டில் உள்ள பெண்களை சுலபமான பண வருவாய்க்கு பெண்களை பல ஆண்டுகளாக  பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்துகின்றனர். பங்களாதேஷில் சில இடங்களில் பெண்களை கால்நடைகளுக்கு கொடுக்கும் கொழுப்பு ஊசி செலுத்தி பெண்களை வயாபார சந்தையில் அதிக விலைக்கு விற்கிறார்கள்.

ஒரு ஆய்வின்படி உலகில் 2.4 மில்லியன் பெண்கள் கடத்தபடுகிறார்கள். அவர்களில் 80 சதவிதம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தபடுகின்றனர். உலகில் 32 பில்லியன் வருவாய் ஆண்டுதோறும் ஆள்கடத்தல் மூலமாக  ஈட்டபடுகிறது. தென் ஆசியாவில் 1,50,000 பெண்கள் ஆண்டுதோறும் கடத்தபடுகிறார்கள்.

கடத்தப்படும் பெண்களில் அதிகம் பேர் பின்தங்கிய கிராமங்களில் இருந்தும், வீட்டுவேலைக்காக நகரத்திற்கு சென்ற பெண்களும் கணிசமான அளவில் உள்ளனர். இவர்களில் அதிகம் பேர் பெண்களால் கடத்தப்படுகின்றனர் என்பது வியப்பான உண்மை. கடத்தப்பட்ட பெண்கள் பலர் வலுகட்டாயமாக பாலியல் தொழிலிற்கு தள்ளபடுகின்றனர். அவர்களை பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடுத்திகின்றனர். கடத்தப்பட்ட பெண்கள் சிலர் கொத்தடிமைகளாக விற்கபடுகின்றனர்.

பெண்களை தெய்வமாக கருத்தும் நம் நாட்டிலும் இத்தகைய சுழல் இருப்பது நாம் வேதனையும் வெட்கப்படவேண்டிய விஷயமாகும். இதற்கு என்ன தீர்வு? அரசும் தனார்வஅமைப்புகளும் காவல்துறையும் பொதுமக்களும் இணைந்து ஆள் கடத்தலை தடுக்கவேண்டும். நாமும் இணைந்து போராடுவோம் நண்பர்களே..

போலியோ இல்லா இந்தியா

இனி இல்லை கவலை
இந்தியாவில் போலியோ இல்லை
இந்தியர்கள் ஒன்றுபட்டோம்
போலியோவை ஒழித்துவிட்டோம்
நோயில்லா இந்தியாவை படைப்போம்
சுகாதாரமாய் வாழ பழகுவோம்
காய்கறி உணவுகளை சேர்ப்போம்
சத்தான உட்டச்சத்தை பகிர்வோம்
மாசுயில்லா சுற்றுசுழல் அமைப்போம்
அனைவரும் நலமாய் இருப்போம்...

இந்தியர்கள் நாம் அனைவரும் ஒன்றுபட்டு போலியோவை ஒழித்ததுபோல் மற்ற ஆட்கொல்லி நோய்களையும் கட்டுப்படுத்தி வெற்றிக்காண்போம். நாம் வாழும் தேசத்தை நலமுடன் வைப்பது நம் இந்தியரின் கடமை.

சொல்ல துடிக்குது மனசு..

உன்னிடம் பேசிய வார்த்தைகளை விட
உன்னிடம் பேசாத வார்த்தைகள் அதிகம்...
மனம் சொல்ல துடித்தாலும்
உதடுகள் சொல்ல மறுக்கிறது...

அழகான நாட்கள்

விடுமுறை நாளில் சீரான ஓடல் செய்வது வழக்கம். அன்று ஒரு அழகான காலைப்பொழுதில் சூரியன் தன் கதிர்களால் ஒளியை மெல்ல மெல்ல பரப்பிக்கொண்டு இருக்க குளிர்ந்த காற்றுடன் ரம்மியமான சுழலாக இருந்தது. மனதிற்கு இதமாகவும் உடலுக்கு நலமாகவும் இருந்தது ஓடல். சட்டென்று கார்மேகம் இருட்டிவிட பனி துளி போல தூறல்கள் ஆரம்பித்து மழை ஆனது.காலையில் மழை பெய்வது பல நபர்களுக்கு மிகவும் பிடித்தமான இயற்கை சுழல். மழைக்கு ஒதுங்க பார்த்தபோது ஒரு கல்லூரியின் பேருந்து நிழற்கொடை தெரிந்தது. சற்று நனைந்த படியே அங்கே சென்றேன். குளிர்ந்த காற்றுடன் மழையும் ரசிக்கும்படியாக இருந்தது. அங்கே உள்ள இருக்கையில் அமர்ந்தபடி அங்கிருக்கும் சுழலை ரசித்து கொண்டு இருந்தேன். அங்கே இருக்கும் கல்லூரியை பார்த்தபோது என்னுடைய  பருவக்கால கல்லூரி வாழ்கை நெஞ்சில் அலைமோதி கடந்த கால நினைவலைகளுக்குள் சென்றது.

நம் அனைவரின் வசந்த காலம் எனக்கேட்டால் நாம் கல்லூரி வாழ்கையை தான் சொல்லுவோம். சுதிந்திர காற்றில் அழகாய் திரியும் பட்டாம்பூச்சி போல, எந்த ஒரு சுமையும் இல்லா வாழ்கை தருணம் அது. நமக்கு பிடித்தமான பல நிகழ்வுகள் கொண்டது கல்லூரி வாழ்கை.. நண்பர்கள்ளுடன் மனம்விட்டு பழகியது, சில நண்பர்களுடன் மட்டுமான நட்பு வட்டம், கல்லூரி சிற்றுண்டி சாலையில் டிபன், டி.., பேராசிரியர்களின் நீண்ட சலிப்பான விரிவுரைகள், வகுப்புகளுக்கு போகாமல் நண்பர்களுடன் சினிமாவிற்கு செல்வது, கேலியும் கிண்டலுமான குறும்பு காலங்கள், ஜாலியான சுற்றுப்பயணம், கண் முன்னே காணும் பல காதல்கள், காதல் கடிதங்கள், கலை விழா, விளையாட்டு போட்டிகள் இப்படி அது ஒரு அழகிய கனா காலம் என்றே சொல்லலாம்....

அந்த நினைவுகளை பெருமூச்சு விட்டபடி இப்போது தொடர்பில் இருக்கும் சில நண்பர்களை நினைத்து பார்த்தேன்.. மீண்டும் அந்த நாட்கள் வாழ்வில் வருமா என்று ஒரு சின்ன ஏக்கம்... நம் அனைவருக்கும் கல்லூரி வாழ்கை அழகான நாட்கள். அழகிய நாட்களை நாம் அசைபோடதான் முடியும்.. கடந்த காலத்தை நினைவுகளை கொண்டு மட்டுமே பயணிக்க முடியும்.. மழை சிறிது குறைய மழையில் நனையாத நான் கல்லூரி நினைவுகளின் காட்சிகளை கண்டபோது கண்கள் நனைந்தவாறு சென்றேன்.. இதை படிக்கும் போது உங்களின் நினைவுகளும் கல்லூரி காலத்தை பயணித்துருக்கும் என்பதில் சந்தேகமில்லை..

சுகமான சுமைகள்

கருவை சுமக்கும் தாய்க்கும்
பிள்ளையை தோளில் சுமக்கும் தந்தைக்கும்
பாசத்தை சுமக்கும் சகோதிரிக்கும்
சீண்டல்களை சுமக்கும் சகோதரனுக்கும்
நட்பை சுமக்கும் தோழனுக்கும்
காதலை சுமக்கும் காதலிக்கும்
குடும்பத்தை சுமக்கும் மனைவிக்கும்
போரில் காயங்களை சுமக்கும் வீரனுக்கும்
வலிகள் கூட சில நேரம் சுமையான சுமைத்தான்
நம்மை சுமக்கும் பூமிக்கும்
நம் பாவங்களை சுமக்கும் இறைவனுக்கும் கூட
நாம் சுகமான சுமைகள் தான்!

ஆருயிர் கள்வனே

என் ஆருயிர் கள்வனே
திருடி விட்டாய் இதயத்தை...
மகிழ்ச்சியில் தவிக்கிறேன்
மணிக்கொரு நிமிடம்...
சேரவேண்டிய இடத்தில
சேர்ந்தது இதயம் என்று...

வாழ்கை இனிமையானது

நம் வாழ்கை நம்முடையது; நம் சமுதாயம் நம்முடைய வாழ்கை முறையை அமைக்கிறது. நம் வாழ்கை எந்த ரீதியில் எவ்வாறு பயணிக்க வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்கவேண்டும். எது நல்லது, எது கெட்டது அன்பதை நாம் தான் முடிவு செய்யவேண்டும். பிறரின் முடிவிற்கு நம்முடைய வாழ்க்கையை விட்டு விட கூடாது, அடுத்தவர் தரும் ஆலோசனைகளை வேண்டுமானால் நாம் தீர ஆராயலாம். அந்த செயலுக்கான முடிவு நாம் தான் எடுக்க வேண்டும். மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள், என்ன பேசுவார்கள் என்று கவலைப்பட்டு வாழக்கூடாது, உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை செய்யுங்கள்.

உங்கள் முடிவுகள் அடுத்தவர்க்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவகையில் இருக்கவேண்டும்.உங்கள் மனதுக்கு பிடித்தபடி நல்ல சிந்தனையுடன், நல்ல செயலுடன் உங்கள் விருப்பத்திற்கு வாழ பழகுங்கள், உங்கள் வாழ்கை உங்களுடையது, வாழ்வது ஒரு முறை ஆனாலும் மனநிறைவோடு மனதார வாழ பழகுங்கள்.. வாழ்கை மிகவும் இனிமையானது நண்பர்களே...

அழகு முகத்தில் இல்லை நடத்தையில் இருக்கிறது.
காதல் அறிவில் இல்லை அன்பில் இருக்கிறது.

பொறுமை வார்த்தையில் இல்லை செயலில் இருக்கிறது
பிராத்தனை வரிகளில் இல்லை பக்தியில் இருக்கிறது.
வாழ்கை பிறரிடம் இல்லை நம் கையில் இருக்கிறது.

முற்பொழுதும் உன் கற்பனைகள்

இமைகள் மூடி ஒரு கணம் உறங்கிய பின்னும் உன் ஞாபகங்கள் வருடுகிறது,
கண்விளித்து பார்த்தாலும் காதலன் உன் நினைவுகள் மனதினில் அலைபாய்கிறது, என்னை ஆட்கொண்ட உன்னை விட இந்த உலகில் உயர்ந்தது எதுவென வினவினேன், பதிலும் நியே ஆனாய் ஆருயிர் கள்வனே,உன்னிடம் இழந்துவிட்ட என்னை மீட்பர் யாரும் இல்லையடா,வாழ்ந்தாலும் மடிந்தாலும் உன்னுடனே என்று நினைத்து துயில் ஆனேன் இமை பொழுதிலேயே...

உணர்வாய என் காதலை

நீ பார்த்தபோது எல்லாம்
பொழுதுபோக்குக்கு என தெரிந்தும்
சிரித்தேன் உன்னை நான்
விரும்புகிறேன் என உணர்த்தவே

நீ பேசியது எல்லாம்
பொய் என தெரிந்தும்
உரையாடினேன் உன்னை நான்
நம்புகிறேன் என உணர்த்தவே

நீ பழகியது எல்லாம்
உண்மையில்லை என தெரிந்தும்
பழகினேன் உன்னை நான்
காதலிக்கிறேன் என உணர்த்தவே

எங்கே செல்கிறது தமிழகம்?






"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
 பண்பும் பயனும் அது". 

மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே என்று கூறிய திருவள்ளுவர் வாழ்ந்த பூமி நம் தமிழ் நாடு.

இல்லறம் நல்லறமாக அமைய நம்முடைய தலைமுறையினர் நமக்கு கூறிய அறிவுரைகள் வழிகாட்டுதல்கள் ஏராளம். கூட்டு குடும்பதிற்கும், தாம்பத்திய வாழ்விற்கும் சிறந்த எடுத்துக்காட்டாய் தமிழர்கள் விளங்கினார்கள். அனால் இன்று உள்ள நிலைமை உங்களுக்கு தெரியுமா? இந்தியாவில் 2010ம் ஆண்டில் கணவன் அல்லது மனைவி இழந்தோர், விவாகரத்து ஆனவர்கள் மற்றும் பிரிந்து வாழ்பவர்கள் பட்டியலில் 8.8 சதவீதத்துடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. வியப்பாக இருந்தாலும் இது தான் இன்றைய நிலவர உண்மை.

கணவன் மனைவியிடம் பரஸ்பர புரிந்துணர்வு, விட்டுகொடுக்கும் மனப்பான்மை, பொறுமை, அன்பான அனுசரணை, தாம்பத்திய உறவில் குறைவு ஆகியவை குறைந்ததால் தான் இந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்பொழுது அதிகம் சம்பாத்தியம் கொண்ட தம்பதியர்கள் மிகுதியாக உள்ளனர். அவர்கள் குடும்பத்திற்காக அதிக நேரம் ஒதுக்காமல், வேலை மற்றும் பணம் சம்பாதிப்பதில் கூறியாக உள்ளனர்.இன்றைய இளைய சமுதாயம் காதல் என்ற பெயரில் பருவகால மோகத்தில் மயங்கி ஒருவரை ஒருவர் சரியாக புரிந்துகொள்ளாமல் திருமணம் செய்துகொண்ட பிறகு கருத்துவேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்கிறார்கள்.

பாரதி கண்ட புதுமை பெண்ணாக இன்று பல பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேறி உள்ளனர். ஆனால் ஒரு சில பெண்கள் ஆண்களை அடக்கி ஆள்வது தான் புதுமை பெண்ணியத்தின் பொருள் என்று தவறாக நினைகிறார்கள். அவர்கள் ஆணவம், திமிருடுன் கணவனை கூட மதிப்பது இல்லை. பெண்கள் வீரமாக இருக்க வேண்டும் தங்களை காப்பதில்; கணவனை அடக்கி ஆள்வது தான் வீரம் என்று தவறாக நினைகிறார்கள். அது பெண்மை இல்லை. பெண்மை என்றால் அன்பு, அடக்கம், நாணம்,பொறுமை, அரவணைப்பு கலந்தது. குடும்பத்தை அன்புடன் நிதானமாக சாதுரியமாக அனைவரும் மகிழும்படி வழிநடத்தி செல்வதில் தான் புதுமை பெண் வெற்றி அடைகிறாள்.

ஆண்களும் பெண்களுக்கு உரிய அன்புடன் சமவாய்ப்பும், மதிப்பும், மரியாதையும் கொடுக்க வேண்டும். அப்போது தான் ஆண்கள் பெண்களிடம் உண்மையான பெண்மையை அவர்கள் உணர முடியும். குடும்பம் ஒரு கோவிலாகும், அதை இனிமையாக சிறப்பாக வழிநடத்தி கணவனும் மனைவியும் செல்லவேண்டும். அன்பான ஒற்றுமையான கட்டுக்கோப்பான குடும்பத்தை மேற்கொள்ள இருவரும் முயற்சிக்க வேண்டும். வாழ்கை ஒருமுறைதான் அதை அழகாக மாற்றுவது நம் கையில் உள்ளது. வாழ்க வளமுடன்!

தனிமை தாகம்

உடலின் சூடு தென்றல் வீசினாலும் குளிராது
உன் அணைப்பின் சூடு தீ பட்டாலும் எரியாது!
உன் மூச்சு காற்று பட ஆடைகள் கனமானது 
ஆண்மகன் நீ தொட்ட பின் உணர்வுகள் சுரக்க
உணர்ச்சிகள் பொங்கி இமைகளும் மயங்க
எனை மறந்து மகிழ்ந்து நிறைந்த சில துளிகளில்
வானில் உள்ள நிலவின் தனிமை தாகம்
என்னை மிகவும் வேதனை படுத்தியது!

May 12, 2012

செம்மொழியான எங்கள் தமிழ்மொழி

பழமைக்கு பழமையும்
புதுமைக்கு புதுமையும்
இனிக்கும் செம்மொழி
காலம் கடந்தாலும்
காட்சிகள் மாறினாலும்
மாறாதவள் தமிழ்மொழி
உலகபுகழ் திருக்குறளும்
வான்புகழ் காப்பியங்களும்
அற புற நானூருகளும்
நெடுந் குறுந் துகைகளும்
ஒருக்கே பெற்ற தேன்மொழி
சங்கத்தமிழ் கண்டவளாய்
யுகம் யுகமாய் யுவதியாய்
சேர சோழ பாண்டியர்களின்
வைர மணிமகுடம்மாய்
எத்திசையிலும் புகழ்மணக்கும்
தமிழே வாழ்க! வாழ்க!

 

வண்ணத்துபூச்சி

வண்ணங்களின் கோர்வையாய்
இறைவனின் ஓவியமாய்
மலர்களின் தோழனாய்
இயற்கையின் படைப்பாய்
வானில் சுதிந்திர காற்றாய்
ரசித்திடும் உயிராய்
பறக்கும் வண்ணபூவாய்
மிளிரும் வண்ணத்துபூச்சியே
உன் அழகில் மயங்கிடா
மானுடன் இப்பூவுலகில் எது?
சிறிய நாட்களில்
அழகிய வாழ்க்கையாய்
நிறைவுடன் வாழ்கிறாய்
வண்ணமயமாக...

புரிந்துகொள் என் காதலனே!

சொர்கத்திற்கும் நரகத்திற்கும்
கருப்புக்கும் வெள்ளைக்கும்
சிரிப்புக்கும் அழுகைக்கும்
வானிற்கும் பூமிக்கும்
இரவுக்கும் பகலுக்கும்
மகிழ்ச்சிக்கும் துயரத்திற்கும்
வாழ்வுக்கும் சாவிற்கும்
உள்ள வித்தியாசம் தான்
அருகில் நீ இருக்கும்போது
தொலைவில் நீ போகும்போதும்
புரிந்துகொள் என் காதலனே!!!

போர் குற்றங்கள் - இனத்தின் ஒரு சாட்சி

இலங்கையில் வாடும் எனது தமிழ் இனத்தின் உடன் பிறப்புகளுக்கு இதை சமர்பிக்கிறேன்....

ஒளிவீசும் கதிரவனை காலையில் பார்க்க கண்கள் கூசும், அனால் எங்களுக்கு அநீதி செய்த இந்த மனிதர்களை பார்க்கும் போது கண்கள் கூசுகிறது. இன்னும் எங்கள் வாழ்வில் இருள் சூழ்ந்து கொண்டு இருக்கிறதே என்று நெஞ்சம் துடிக்கிறது. போர் முடிந்து இரண்டு வருடங்களாகியும்   இன்னும் நான் போர்கள குற்றவாளி போல தான் இங்கு நடத்தபடுகிறேன்.

என் இனமே அழிந்து விட்டது இன்னும் இந்த உயிர் உடலில் எதற்கு? காலையில் எழுந்தவுடன் எனது அம்மாவை கட்டிபிடித்து முத்தம் கொடுப்பேன், எப்பொழுது எங்கே தேடுவேன் எனது தாயின் அரவணைப்பையும் அந்த பாசத்தையும் இந்த இரத்த பூமியில், கூப்பிடும் தூரத்தில் கூட  இல்லை அவள். கண்ணீர் வார்த்தபடி நான் ஏக்கத்துடன் கடைசியாக என் அன்னை கன்னத்தில் முத்தமிட்டு நெகிழ்ந்ததை நினைத்து கொண்டேன்.

என்னுடன் இருந்தவர்கள் எனக்கு இப்போது   காணகனவாக இருக்கிறார்கள், அவர்களின் நினைவாக நான் மட்டுமே இருக்கிறேன். இங்கே பாடி திரியும் குயில்களின் ஓசையைவிட உயிர்களை காவு வாங்கும் குண்டின் சத்தமும் துப்பாக்கி தோட்டாக்களின் சத்தமமும்தான்  அதிகம் கேட்டேன். யாராவது எங்களுக்கு உதவ மாட்டர்களா என்று நாங்கள் இறைவனிடத்தில் தொழாத நாட்கள் இல்லை... 

எனது இனத்தின் உறவுகள் அண்டை நாட்டில் இருந்தும் எந்த பலனும் இல்லை. எல்லாம் முடிந்து விட்டது இன்று. எஞ்சியது சடலங்கள் தான் மண்ணோடு.. எனது உறவுகள் பலர் போர் என்ற பெயரில் அநியாயமாக துன்புறத்தபட்டு   கொல்லப்பட்டனர்..

நான் மாட்டும் ஏன் உயிர் பிழைத்தேன்? இனி நான் மட்டும் ஏன் உயிரோடு இருக்கவேண்டும் என  நினைத்தேன்... எனது இனம் என்னை சாட்சியாக விட்டு சென்றுள்ளது.. ஆம் நான் உயிரோடு இருந்தால் தான் என் கண்முன்னே நடந்த அணைத்து அக்ரமங்களும்,கொலை குற்றங்களும், பாலியல் வல்லுருகள், கொடூர செயல்கள் அனைத்துக்கும் சாட்சியாக என்றாவது சர்வதேச நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுப்பேன் என்று!

போர் என்ற போர்வையில் எனது இனத்தின் அப்பாவி உயிர்களை காவு வாங்கிய இரத்த வெறி பிடித்த கொடூர மனிதர்களை நீதியின் முன்னால் நிறுத்தாமல் எனது உயிர் இளைபாராது.... இன்றைய நாளாவது நீதிக்கு வழிவுகுக்கும் நேரம் வரும் என்ற நம்பிக்கையில் படுக்கையை விட்டு மனஉறுதியுடன் எழுகிறேன் இந்த நொண்டி காலுடன்... இந்த உலகத்தின் கடைசி நாள் வரை நீதி சாகாது!

அன்பு தோழி வாடி ... ஆடி தான் பார்போம்




விட்டு விடு சோகத்தை உன்னை விட்டு
சுடர் விடு ஒளியாய் மனம் விட்டு
வெற்றியோட வாழ பல வழி உண்டு
நின்றிடு தன்நம்பிக்கையால் வென்றிடு
மோதிடு கஷ்டங்களை சினம் கொண்டு

பிறந்திட்டோம் இங்கே வாழ்ந்து தான் பார்போம்
இல்லாத பாதையை அமைத்து தான் போவோம்
அன்பு தோழி வாடி ஆடி தான் பார்போம்
வாழ்கை விளையாட்டில் வெற்றி காண்போம் 

நலமுடன் பிறந்த மனிதனே மனதளவில் வளரவில்லை
நம்மை எண்ணி சிரிக்கும் மடமை ஓயவில்லை
சோதனைகள் இல்லாமல் இங்கு யாரும் இல்லை
சோர்ந்துவிட நீயும் நானும் கோழை இல்லை

திருநங்கையாக பிறந்தது உன் குற்றம் இல்லை
தைரியமாக வாழ்ந்துவிட்டால் பயம் இல்லை
வேதனையை மறந்துவிட்டால் துயரம் இல்லை
முன்னேறி நடந்துவிட்டால் தோல்வி இல்லை

அன்பு தோழி வாடி ஆடி தான் பார்போம் !!!
வாழ்கை விளையாட்டில் வெற்றி காண்போம் !!!

யார் உண்மையான அரசியில்வாதி?

ஆங்கிலேயரை எதிர்த்து சிறைக்கு சென்றார்கள் அன்றைய அரசியில்வாதிகள்
ஊழலில் பிடிபட்டு சிறைக்கு சென்றார்கள் இன்றைய அரசியில்வாதிகள்!

ஊருக்காக உழைத்தார்கள் அன்றைய அரசியில்வாதிகள்
தங்கள் குடும்பத்திற்காக உழைக்கிறார்கள் இன்றைய அரசியில்வாதிகள்!

பொதுநலமனம் படைத்தவர்கள் அன்றைய அரசியில்வாதிகள்
சுயநலமனம் படைத்தவர்கள் இன்றைய அரசியில்வாதிகள்!

ஏழையின் சிரிப்பில் மகிழ்ந்தார்கள் அன்றைய அரசியில்வாதிகள்
ஏழையின் அழுகையில் மகிழ்கிறார்கள் இன்றைய அரசியில்வாதிகள்!

உயிர்த்தயாகம் செய்து சுதந்திரம் வாங்கித்தந்தார்கள் அன்றைய அரசியில்வாதிகள்
ஏழைகளின் வைதெறிச்சலில் சுதிந்திரவாழ்கை வாழ்கிறார்கள் இன்றைய அரசியில்வாதிகள்!

நாடும் நாட்டுமக்களும் வளம் பெற உழைத்தார்கள் அன்றைய அரசியில்வாதிகள்
வீடும் வீட்டில் உள்ளவரும் வளம் பெற உழைக்கிறார்கள் இன்றைய அரசியில்வாதிகள்!

மானம்காத்த வீரமான தலைவர்கள் அன்றைய அரசியில்வாதிகள்
மானம்கெட்ட கேவலமான தலைவர்கள் இன்றைய அரசியில்வாதிகள்!

படித்த இளைய சமுதாயம் இன்றைய அரசியலில் எடுபடவேண்டும். ஊழல் இல்லா தலைவர்களாக, இந்திய மக்களின் நலன் கருதும் சுயநலமற்ற அரசியில் தலைவர்கள் வேண்டும். மக்களும் ஊழல் எதிர்ப்பில் விழிப்புணர்வுடன் செயல்பட்டு ஊழல் இல்லா தேசமாக உருவாக்க வேண்டும்.

சுதந்திரம், குடியரசு தினங்கள் விடுமுறைக்கு மட்டுமே பிரயோஜனமானது இன்று -  என்று வறுமையில்லா, ஊழல் இல்லா தேசமாக இந்தியா மாறுமோ அன்று தான் எங்களுக்கு உண்மையான சுதந்திரமும், குடியரசும்....

இப்படிக்கு இந்திய குடிமகள்

முகநூல்

முகம் அறியாமல் முகநூளில்
வாழ்த்துக்கள் கூறி
நட்பை பரிமாறி
அன்பை வெளிக்காட்டி
கருத்தை வரவேற்று
பாசமான வட்டத்தில்
தோழியாய் சகோதிரியாய்
உறவு கொண்டாடி
முகம் அறியச்செய்த முகநூலே!

வின்ணிலும் மண்ணிலும்

என் கணவனின்
 தோளில் சாய்ந்தபடி
பயணிக்க வேண்டும் 
முடிவில்லா பயணத்தில்
இரவிலும் பகலிலும்
வின்ணிலும் மண்ணிலும்...

நீயே குடை

வானம் குடையானது பூமிக்கு
நீல நிற போர்வையால்
நீ குடையனாய் எனக்கு
நிறைவில்லா அன்பான அணைப்பால்...

தாமரை இலை தண்ணீர் போல்...

தாமரை இலையில் ஒட்டாத தண்ணீர் போல
உன் மனம் என்னோடு ஒட்டாமல் போனாலும்
நீர் இலையை விட்டு விலகாதது போல்
நானும் உன்னை விட்டு விலகுவதில்லை

சூரியகாந்தியும் நானும்..

சூரியனை பார்த்தவுடன்
மலர்ந்தாய்யடி நீ - நான்
என்னவனை பார்த்தவுடன்
மனம் மகிழ்ந்தேன் தோழி!!!

கதிரவன் போனவுடன்
குவின்தாய்யடி நீ – நான்
காதலன் பிரிந்தவுடன்
உயிர் துறந்தேனடி தோழி !!!

மலர் நீ வாடினாலும்
மங்கை நான் வாடினாலும்
நாம் கொண்ட காதல்
என்றும் வாடாதடி தோழி!!!

இரவில் நீ குவிந்தாலும்
காலை புலரும் போது
நீ மலர்வாய் தோழி!!!
பிரிவில் நான் தவித்தாலும்
என்னவனை காணும் போது
நான் மலர்வேன் தோழி!!!

அணைப்பு...

யாரும்மில்லா நேரத்தில்
பார்வையால் சில நிமிடங்கள்
மௌனமாய் உன் இதயத்துடிப்பின்
ஓசையை கேட்டபடி மார்பில்சாய
இறுகிய உன் அணைப்பில்
குளிர்ந்த இடமும் சூடாக மாறியது....

தாயும் தமிழும்

போட்டியில் வெற்றிபெற தாய் என்ற கட்டுரையை தமிழில் எழுதினேன் பரிசு எனக்கு இல்லை ஆங்கிலத்தில் எழுதிய மதர் என்ற கட்டுரைக்கு கிடைத்தது. விடை அறியாமல் அழுதேன், நீ எழுதிய கட்டுரையை படித்து காட்டு என்றால் அம்மா,  நான் படித்து முடித்த பின் என் தாய் அணைத்து முத்தம் கொடுத்தாள்.அந்த அன்பான முத்தத்திற்கு  இவ்வுலகில் ஈடு வேறேது? தமிழை போல தாயும் இனிமையானவள்  என்பதை  உணர்ந்தேன்.


விபச்சாரி

விபத்தாய் நிகழ்ந்த நிகழ்வு
விபச்சாறமானது என் பிழைப்பு
பூ சூடி சிவப்பு நிற பொட்டு வைத்தேன்
வாசலில் சிவப்பு விளக்கு எரிந்தது
காமுகன் பலர் கைவைக்க
குரங்கு கையில் பூவானேன்
வந்தவன் போனவன் கணவனான்
கணவனோ எனக்கு மாமா ஆனான்
அழுது புரள உடலில் தெம்பு இல்லை
கைகுழந்தையை வளர்க்க வேறுவழியில்லை
கற்பை விற்று காசாகினேன்
சுகத்தை கொடுக்கும் கருவியானேன்
உணர்ச்சி அற்ற உடலானேன்
இனி ஒரு ஜென்மம் வேண்டாம் என்றேன்
ஒரு முறை மீண்டும் வேண்டும் என்றான்
உள்ளம் அழுவதை யாரும் காணவில்லை
வந்தவன் கேட்கிறான் உனக்கு என்ன விலை?
ஏன் இந்த பிழைப்பு என்று ஏளனம் செய்தார்கள்
நல்ல பிழைப்பை எனக்குத்தற மறுக்கிறார்கள்
சிரித்தபடி பூச்சுடி வாசலில் நின்றேன்...

அமைதி தழைக்கட்டும்....


இறைவன் மனிதனை படைத்தான், மனிதன் ஜாதி, மதம்,மொழி,இனம் ஒருவாக்கி பல வேற்றுமைகளை உருவாக்கினான். அதனால் இன்று மனிதர்களிடம் பலதரப்பட்ட வேறுபாடுகள், அதனால் பிரச்சனைகள், குழப்பங்கள் பல. ஒரு சூரியன், ஒரு பூமி, ஒரே காற்று இன்று அனைத்து மனிதர்களுக்கும் இறைவன் பாகுபாடு இல்லாமல் கொடுத்தான், மனிதானகிய நாம் செய்யும் எல்லா செயல்களிலும் பாகுபாடு ஏற்படுத்தி கொண்டோம். நிலையில்லா நாம் நிலையான மண்ணிற்காக சண்டைபோடுகிறோம்.

அமைதி என்பதை வேண்டும் என்றே தொலைத்து விட்டு தேடுகிறோம். நிம்மதி இல்லாமல் தவித்து மனம் கலங்கி அலைகிறோம். வேற்றுமையை கலைந்து ஒற்றுமையாக வாழ்ந்தால் நமக்கு நிம்மதி கிடைத்து மகிழ்ச்சி பொங்கும்.. மானுடம் இல்லேயேல் அழிந்து போகும் சூழ்நிலை உருவாகும். மனிதர்கள் நமக்கு எது வேண்டும் என்பதை தீர்மானம் செய்ய அறிவு கொடுத்து இருக்கிறான், அனால் நாம் அறிவை நல்ல வழியில் பயன்படுத்தாமல் தீய வழிகளில் பயன்படுத்தி நம்மையும் நம்மை சுற்றி உள்ளவரையும் அழிக்கிறோம். உலகம் அமைதி பொங்க நாம் ஒற்றுமையாக, நட்புடன் அனைவரையும் அனுசரணையுடன் பழகினால் அதுவே நாம் இறைவனுக்கு செய்யும் நன்றி ஆகும்.. அமைதி தழைக்கட்டும்..


தூது போ கிளியே...

மனதுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சி
பற பற என்று பறந்திட…..
சத்தம் இல்லாமல் ஸ்வரங்கள் ஏழுய்
சரிகம என்று பாடிட……
வாழ்கை இப்போ ரொம்ப
புதுசா போச்சே….
மனசு இப்போ ரொம்ப
இளசா ஆச்சே….
ஆடிடும் பாடிடும் பூங்குடி..
தாளமும் ராகமும் சேரடி..
கிளியே இளம்கிளியே  கேளடி..

சூரியன சந்திரன தூது விட்டேன்
மாமனோட ஜோடி சேர பூத்துருக்கேன்
காலமெல்லாம் காதலோட நானுருப்பேன்
ஏழு ஜென்மம் இன்னும் வேற காத்துருப்பேன்
கனவோடும் நினவோடும் கூடருப்பேன்
கண்ணுக்குள்ள உன்னை வெச்சு பாத்துக்குவேன்
நெஞ்சுக்குள்ள உன்ன பூட்டி காவல்ருப்பேன்
கண்ணா உன்னை தினம் காதலிப்பேன்
பஞ்சவர்ணகிளியே போய் சொல்லு
மாமன்கிட்ட நாள் கேட்டு வந்து சொல்லு
தூதுபோன இளம்கிளியே பதில் சொல்லு...