February 28, 2013

தமிழின் இன்றைய நிலை


தமிழை அமுதமென நினைப்போரும் உண்டு
தேனினும் மொழியாளை ரசிப்போரும் உண்டு
செந்தமிழை நாபாடி மகிழ்வோரும் உண்டு
சிந்தையிலே சிலையாக்கி வணங்குவோரும் உண்டு

அறம் பொருள் இன்பம்தனைக் கொண்டு
திருக்குறளை என்றும் நினைப்போரும் உண்டு
அகம் புறம் கொண்ட வாழ்வியல் நானூறை 
படித்து ரசிப்போரும் உண்டு

தமிழை நவீன காலத்திற்கு வடிவமைத்து
இணையவழி தமிழை வளர்போரும் உண்டு
எந்த மாற்றம் காணினும் அதற்கேற்றார் போல
தமிழை நவீனபடுத்தும் சிற்பியும் உண்டு

தமிழின் சிறப்பை அறியாத மாக்களும் உண்டு
அவள் மொழி மறந்த அறிவிலிகளும் உண்டு
பிறமொழி மோகம் கொண்ட முண்டங்களும் உண்டு
இத்தனையும் கடந்து வாழும் தமிழ் என்றும் உண்டு

அழிவில்லாத வரம் தமிழுக்கு என்றும் உண்டு
இன்றைய நிலையிலும் இளமையாக வாழ்வுண்டு
பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு
வாழும் வல்லமை நம் தமிழுக்கு என்றும் உண்டு

பழமைக்கு பழமையாக புதுமைக்கு புதுமையாக திகழும் நம் தமிழ் மொழி பல யுகங்கள் கடந்து திகழ்பவள். தமிழன் தமிழை மறந்து என்றும் வாழக்கூடாது. இன்றைய தமிழின் நிலையை உணர்ந்து தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்வதே அணைத்து தமிழனின் முதல் கடமையாக இருக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள். 

ஆயிஷா பாரூக் 

5 comments:

  1. என்றும் தமிழ் நிலைத்து வாழும்! அருமையான படைப்பு! நன்றி!

    ReplyDelete
  2. கண்டிப்பாக உங்களை போன்ற கவிகளால் தமிழ் வளரும் சகோ ...

    ReplyDelete
  3. அருமையான கவிதை.
    அதைவிட அருமையான வேண்டுகோள்.
    வாழ்த்துக்கள் ஆயிஷா.

    ReplyDelete
  4. அருமையான கருத்துக்கள் கொண்ட கவிதை... வாழ்த்துக்கள்....

    ReplyDelete