தமிழ்வழிக்கல்வி
தமிழ் மொழியுணர்வு பிள்ளைக்கட்கு வேண்டும்
தமிழ் நாகரீகம் வாழ்வியல் வழியை அறிவிக்கும்
தமிழ் பண்பாடு நடைமுறை இன்பம் சுவைக்கும்
தமிழ் கலாச்சாரம் உறவுகளின் பலம் பெருக்கும்
தமிழ் வழிக்கல்வி
கற்றதலை சுலபமாக்கும்
உயிரும் மெய்யும் சேர்ந்த உணர்வுள்ள தமிழை
வாழ்க்கை சிறப்புக்கான வாழ்வழிக் பொக்கிஷங்கள்
ஆத்திசூடி, திருக்குறள், எட்டுத்தொகை,பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியங்கள்
இப்படி இன்னும் எத்தனை தமிழா அமிர்தமாய்
தேனினும் செந்தமிழின் அறிவுச்சுவை சுவைக்க
தாய்மொழி பயின்றோர் உயர்ந்த சரித்திரம் பலயிருக்க
தமிழ்வழிக் கல்விக்கொண்டு சரித்தரம் படைப்போம்.
வீட்டில்
தொழுவத்தில் கறந்த தூய்மையான பாலும் கடையில் வாங்கிய தண்ணீர் பாலும்
சுவையும் பயனும் வேறுபடுவது போல கலப்படம் கலந்தது இன்றைய அந்நிய மொழி கலந்த
கல்விமுறை. கலப்படமற்ற மலைத்தேன் போல தமிழ், தமிழ்வழிக்கல்வி தமிழனுக்கு
கண்டிப்பாக வேண்டும். இன்றைய தொழிற்போட்டி காலச்சூழலுக்கு அந்நிய மொழிகள்
தமிழுக்கு அடுத்தபடியாக பயில்வது தவறு கிடையாது. அதற்காக தன் தாய்மொழி
தமிழை துச்சமாக நினைத்து தமிழ் கற்காத தமிழரை தமிழ் சமூகம் ஏற்க கூடாது.
ஆயிஷாபாரூக்
தமிழ் வழிக் கல்வி வேண்டும் தான்! நடைமுறைப்படுத்தவில்லையே அரசு! நல்லதொரு பகிர்வு! நன்றி
ReplyDeleteதமிழ் வழிக் கல்வியே வேண்டும். அரசு உணருமா ?
ReplyDeleteசிறப்பான வரிகளைப் போல் நடந்தால் சிறப்பு... நடக்கும்... நடக்க வேண்டும்...
ReplyDeleteஅருமையான பதிவு !
ReplyDeleteஎன்னால் இயன்றது
ReplyDeletehttp://uyirnutpam.blogspot.de/
Budete příjemně překvapeni rozmanitostí her, bonusovými nabídkami a dostupností výběru! online ruleta
ReplyDelete