February 8, 2013

உழவை காப்போம்


வயலும் வயல் சார்ந்த மருதமும்
மண் பிளந்து வறண்டு பாலையானதே
மரங்கள் குறைந்து வானம் பொய்த்து போனதே
காவிரியும் நிலம்தாண்டி தடுக்கப்பட்டதே
நஞ்சையும் புஞ்சையும் வீட்டு மனையானதே
அருவாளும் கலப்பையும் உழவின்றி உறங்கியதே

கடன்சுமை தற்கொலைக்கு வழி வகுத்ததே
எலிக்கறியே ஒருவேளை உணவானதே
உழைக்கும் வர்க்கம் கவலையால் தோய்ந்ததே
உதவிக்கரம் கேட்டு கண்ணீர் வழியுதே
உழவனும் உழவும் உயிர்பிக்க வழி விரைந்தே
பசுமை புரட்சி வேண்டி உள்ளம் நாடுதே

உழுத்தொழில் செழிக்க புரட்சி வேண்டும்
உழவனின் நிலை இங்கே மாற வேண்டும்
கொள்முதல் விலையை ஏற்ற வேண்டும்
விலைநிர்ணயம் விவசாயி செய்யவேண்டும்
இயற்கை உரம் பெருக்கி நிலம் மேன்படவேண்டும்
விவசாய மானியங்களை அரசு பெருக்க வேண்டும்

உழவின்றி உணவிற்க்கு வழி ஏது?
உழவனன்றி உழவிற்கு ஆள் ஏது?
கற்றவரும் உழுத்தொழில் செய்ய வேண்டும்
உழவை அழிவிலிருந்து காக்க வேண்டும்
நம் உணவிற்கும் உயிருக்கும் உழவனே உடமை
உழவையும் உழவனையும் காப்பதே நம் கடமை

ஆயிஷாபாரூக் 

7 comments:

  1. There is NO WAY we can survive in the land without agriculture! So, we must!

    Nice poem, A :)

    ReplyDelete
  2. நம் சிந்தை ஒன்றி இருக்கிறது சகோ. அனைவரும் உணர வேண்டும்.

    ReplyDelete
  3. ரொம்ப அழகான கவிதை.. உண்மையில் உழவு தொழிலுக்கு ஒப்பானதொரு தொழில் உலகில் இல்லை!!
    அது நலிந்து கொண்டு வருவது உலகம் அழிவதற்கு உதாரணம்!!

    ReplyDelete
  4. http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_22.html
    இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.மிக்க நன்றி.

    ReplyDelete
  5. வணக்கம் தோழி!

    உழவின்றி வாழாது உயிர் இந்த
    உண்மையை உணர்ந்து நீ உயர்...

    உங்கள் வலைப்பூவினை இன்றைய வலைச்சரம் மூலம் அறிந்து வந்தேன்.
    அருமையான கவி இங்கு காண்கிறேன் தோழி!
    ரசித்தேன். வாழ்த்துக்கள்!

    ReplyDelete