February 18, 2013

மறைந்த ஒன்றைத் தேடி...


கண்ணின் கடைசி தூரப்பார்வை
வரை உன்னை தேடி அலைகிறேன்
செவியின் எல்லை ஒலி வரை
உன் ஓசை கேட்கிறதா என
நுட்பமாக கவனிக்கிறேன்
காடு,கடல்,மலைத் தாண்டி
கால்கள் உன் அடையாளம் காண
தொடர்ப் பயணம் செய்கிறது
வான் தாண்டி மேலே பறந்தாலும்
மண்ணை கீழ் நோக்கி பறித்தாலும்
உன் வாசம் வீசாதா என
நாசி நுகர்ந்து பார்க்கிறேன்
தென்படவில்லை உன் அடிச்சுவடு
ஒருமுறை உன்னை பார்க்கமுடியாதா
தவிப்பில் ஆயிரம் விம்மல்களுடன்
கண்ணீர் தாளை நனைக்கிறது
ஏக்கம் கலந்த உன் நினைவுகளுடன்....


இந்த உலகத்தை விட்டு மறைந்த நம் அன்பு உள்ளங்களை நாம் எங்கே தேடுவது.. எங்கே தேடினாலும் காணமுடியாது... இதோ ஒரு தேடல் கவிதை..

**ஆயிஷாபாரூக்** 

4 comments:

  1. நல்ல தேடல்! அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. அருமையான கவிதை

    ReplyDelete
  3. கண்ணீர் தாளை நனைக்கிறது
    ஏக்கம் கலந்த உன் நினைவுகளுடன்....
    நீண்ட நாட்களின் பின் உங்கள் கவி கண்டு மகிழ்ந்தோம். வாழ்த்துக்கள்.தோழமையுடன் சீலன் -http://vellisaram.blogspot.com/

    ReplyDelete