புன்னகைத்த பூக்கள் காதலை மறுத்ததால்
புன்னகைத்த பூக்கள்
காதலை மறுத்ததால்
அமிலத்தால் பொசிங்கன
உயிரும் கருகின
பெண்ணாக பிறந்ததால்
இந்த நிலைமையோ
அந்த பேதையின்
கண்ணீரை அறிவீரோ
இந்த வலியின்
கொடுமை உணர்வீரோ
பெற்றோர் படும்பாட்டை
எதைக்கொண்டு களைவீர்
எதை சாதித்தீர் அந்த
உயிரை மாய்த்து
வெறிபிடித்த பிண்டமே
உன் ஆணவத்தை அழிக்க
உன் ஆண் குறியில்
அமிலம் ஊற்றினால்
அழிந்துவிடும் உன்
பெண் மோகம்
பின்பு எந்த பூவும்
இனி கருகாது..........
நேற்று வினோதினி,இன்று வித்யா நாளை யாரோ ? எத்தனை கொடுமையான நிகழ்வு ஒரு உயிரை அமிலம் ஊற்றி சாகடிப்பது... வேண்டாம் இது போன்ற கொடுமைகள், வைக்க வேண்டும் இதற்க்கு முற்று புள்ளிகள்.. என் கவிதை மிகுந்த ஆக்ரோஷமாக தோன்றலாம் பலருக்கு. இப்படி பட்ட தண்டனை
நிறைவேற்றபட்டால் நாளை எந்த ஆணும் துணிந்து பெண் மீது அசிட் ஊற்ற மாட்டான்.
**ஆயிஷாபாரூக்**
vethanai...!
ReplyDeleteஉண்மைதான்! இப்போதெல்லாம் ஆசிட் வீச்சுக்கள் அதிகமாகிவிட்டன. கடுமையான தண்டனை வழங்க வேண்டும்!
ReplyDeleteவேதனையின் உச்சகட்டம் இந்த அமிலவீச்சு சம்பவங்கள்
ReplyDeleteஇதுபோன்ற மனிதர்களின் மனநிலை எப்போதுதான் மாறுமோ
ReplyDelete:(
சிவாவின் கற்றதும் பெற்றதும்