February 10, 2013

சமூக கவிதைகள்


 

 வாழ்க்கை படிக்கட்டில் உயர
பள்ளி படிக்கட்டு போக
பேருந்து படிக்கட்டில் பயணித்து
அலட்சிய மதிக்கெட்டால்
மரணபடிக்கட்டு செல்லாதே
நாளைய எதிர்காலமே !


 மனிதமும் கழிவே



சாதியைக் காட்டி கழிவு அல்ல சொல்கிறாய்
கழிவை அள்ளவா நாங்கள் அவதரித்தோம்
இந்த நீதியை எவன் நிர்ணயம் செய்தது
நாங்கள் அள்ளினால் கழிவு
நீங்கள் அள்ளினால் சந்தனமா
உன் கழிவை நீயே அகற்று
உன் சாதிப்புத்தி சிதறிப்போகும்
மனிதக்கழிவே ! இங்கே மனிதமும் கழிவே !  


சின்னஞ்சிறு சுமை தாங்கிகள்... 



பிஞ்சு கையில் ரேகை தேய வேலை
பள்ளி புத்தகம் சுமக்கும் வயதில்
குடும்பத்தை சுமக்கும் சுமைதாங்கிகள்
வாழ்கையின் வலிகள் மனதில் வடுகளாய்
கல்வியின் ஏக்கம் மட்டும் கண்களில் கண்ணீராய்
விளையாட்டை மறந்த ஈரமனம்
விடியலை தேடிப்பறக்கும் பட்டாம்பூச்சிகள்
இந்த சின்னஞ்சிறு பிஞ்சு தொழிலாளிகள் !

படிக்க ஆசைத்தான் அடுத்தவேளை உணவிற்கு
பட்டினி பயம் வந்து படிப்பை மறந்த வரலாறாய்
வண்ணமான வாழ்க்கை கருப்பு வெள்ளையாய்
வீடும் வேலையும் மட்டும் சுழலும் காலத்தோடு
தோய்ந்த முகமும் கலைந்த கனவுடன்
தெளிந்த சந்திரனாய் மின்னும் ஆசைகளை
இரவு தூக்கத்தில் சிதறவிட்டு விடிந்ததும்
இரைக்கு பறக்கும் சின்னஞ்சிறு சிட்டுக்குருவிகள்!  

                                                                                                                         ஆயிஷாபாரூக் 

4 comments:

  1. ஒவ்வொரு வரிகளும் மனதை நெகிழ வைக்கின்றன..
    பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி


    சிவாவின் கற்றதும் பெற்றதும்

    ReplyDelete

  2. வணக்கம்!

    என் வலைக்கு வருகைதந்து கருத்தளித்தமைக்கு
    நன்றி! நன்றி!

    முன்பு சிலமுறை உங்கள் கவிதைகளைப் படித்துள்ளேன்!
    சமுகச் சிந்தனைகளைத் தாங்கிய உங்கள் கவிதைகளை வரவேற்று மகிழ்கின்றேன்!

    மீண்டும் வருவேன்

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு

    ReplyDelete
  3. படிக்க ஆசைத்தான் அடுத்தவேளை உணவிற்கு
    பட்டினி பயம் வந்து படிப்பை மறந்த வரலாறாய்...

    கனத்துப்போனது நெஞ்சம்.

    ReplyDelete