January 11, 2014

ஆயிஷாபாரூக் கவிதைகள்

இது சமநிலை சமூகமா
நீயா நானா
என்று போட்டியுடன்
முட்டி மோதிக்கொண்டு
பிறரை ஏறிமிதித்து
ஓடும் சமூகத்தில்
கால் இழந்தவரும்
மனம் பிறழ்ந்தவரும்
மாற்று பாலினர்களும்
இயலாதவர்களும்
இன்னும் ஆரம்ப புள்ளி
கோட்டிலே உள்ளனர்
இது தான்
சமநிலை சமூகமா ? 
கர்ப்பமானேன் 
நான் விரும்பி
நினைத்ததை
என்னுள்
நிறைத்தாய்
கர்ப்பமானேன்  
 மனமே ஆபாசம்  
கவிதைகளில் ஆபாசமில்லை
படிக்கும் மனங்களில்
ஆபாசம் உள்ளது
கவிதையை கவிதையாக
உணர்வது அழகு
விரசமாக பார்த்தால்
கவிதை பொறுப்பாகாது
உங்கள் மனம்
மட்டுமே அதற்க்கு பொறுப்பு  
 காதல் தொடரும்...
இரவில் தெரியும்
நட்சத்திரத்தை
எண்ணி முடி
அது வரை
என் காதல்
உன்னிடம் தொடரும்...
அலையும் ஆன்மா
மோட்சம் தேடி
அலையும் ஆன்மா
வாழும் போது
நல்லதை செய்யவில்லை
  
 
இறைவனே அன்னை
இறைவனை
தொழ நினைத்தேன்
கண் முன்னே
அன்னை
இறைவனை
மறந்துவிட்டேன்...
 
குரங்கிடம் சிக்கிய பூ மாலை
குரங்கிடம் சிக்கிய
பூ மாலைப்போல
காமுகர்களிடம் சிக்கும்
அப்பாவி பெண்கள்
கொய்து எறியப்படுகின்றது....
அர்த்தங்களை தேடி
அர்த்தங்களை தேடி
அகராதியை தொலைத்தேன்
சொல் மட்டும் என்னுடன்
தீராத காமம்
நடுநிசியிலும் பசிக்கிறது
போதும் என்று சொல்லிவிட
முடியாத தீராத காமம் ஒன்று
  
கை ரேகை
கை ரேகையை பார்த்து
ஆயுள் கூறினாய்...
கையிழந்தவன் நேற்றோடு
நூறு தாண்டினான்...
 
 
அழகு நிலையம் 
அழகு இருப்பவர்களுக்கு
அழகு நிலையங்கள்
அதிகம் தேவைப்படுவதில்லை...
 இறைவனும் சட்டப்படி கயவனே
பிரம்மன் படைத்தானோ அல்லது
அந்த இறைவன் படைத்தானோ
படைத்தலில் பிழை இருந்தால்
இறைவனும் சட்டப்படி கயவனே 
 நாதியற்று நிக்கிறேன் நடுத்தெருவுல….
விருப்பமில்லாத இளவயசு திருமணம்
அப்பனுக்கு கழிச்சுக்கட்டுறதே எண்ணம்
சிறுவயதில் சுகம் அறியா பருவத்தில்
பிடித்தும் பிடிக்காமலும் கட்டிலில் யுத்தம்
பத்து மாதத்தில் குழந்தை சத்தம்
ஊட்டசத்து ஏதுமில்லை பால் கொடுக்க
பாவி மனுஷன் ராவான உசுரு எடுக்க
கூலிக்கு மாரடித்த காசை அனுதினம்
குவார்டர்க்கு ஊறுகாயும் மிச்சம் போக
சரகடிச்சு போதையிலே வரப்போக
போதையற்று பசியினால நான்கிறு கிறுக்க
நாதியற்று நிக்கிறேன் நடுத்தெருவுல….
ஆயிஷாபாரூக்  
ஆயிஷாபாரூக்