October 25, 2012

மாண்புமிகு இந்தியர்கள்


 வல்லரசு கனவோடு பயணிக்கும் இந்தியாவில்
எங்களின் பொருளாதார பங்கும் அடங்கும்
நாங்கள் பொறுப்பாக செலுத்திய வரிகளில்
எங்களின் அடிப்படை வசதிகள் குறைந்தது
ஆதிக்கவர்க்கத்தின் அறிவார்ந்த தாக்குதல்
எங்களின் மீதே எங்கும் நடத்தப்படுகிறது
ஏகாதிபத்தியத்தின் அதிகார பண சுரண்டல்கள்
எங்களின் உழைப்பிலிருந்து உறிஞ்சுப்படுகிறது
பணம் உள்ளவர்களின் பலம் அதிகரிக்கப்படுகிறது
ஏழைகளின் வரைமுறைகள் சுருக்கப்படுகிறது
வாழ்கையின் இன்பமும் சொகுசும் இருப்பவர்கே
கலைந்த கனவுகளும் தோய்ந்த முகங்களுடன்
இழக்க எதுவுமின்றி நிர்கதியாக நிர்வாணமாக
அனைத்தும் ஊருவபட்ட நிலையில் நாங்கள்
கையில் திருவோடுடன் மாண்புமிகு இந்தியர்கள் 
 
அன்புடன்
ஆயிஷாபாரூக் 

22 comments:

  1. மிகச் சரி
    படிக்கட்டு வித்தியாசம் அவ்வளவுதான்
    மற்றபடி இந்தியாவில் பிச்சைக்காரர்களும்
    நடுத்தர மக்களுக்கும் அதிக வித்தியாசமில்லை
    படமும் அதற்கான பதிவும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  2. படமும் கவிதையும் நன்று.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  3. படமும் வரிகளும் அருமை....
    தொடருங்கள்

    ReplyDelete
  4. மாண்பு மிகு இந்தியர்கள் திருவொடுடன்... உண்மை வாக்கு. அழகான கவிதை

    ReplyDelete
  5. அனைத்தும் உண்மை!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  6. உண்மைதான். படமும் பொருத்தமான கவிதையும் நல்லா இருக்கு

    ReplyDelete
  7. கையில் திருவோடுடன் மாண்புமிகு இந்தியர்கள் .

    சாட்டையடி வரிகள் சிறப்பு சகோ.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  8. Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  9. இந்தியாவின் இன்றைய நிலை கவிதையில் எதிரொலிக்கிறது! சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  10. இந்தியர்களின் நிலையை மிக நிஜமாக சொல்லி இருக்கிறீர்கள்.
    ஒவ்வொரு வரியும் மனதை தொடுகின்றன.
    பாராட்டுக்கள் ஆயிஷா!

    ஒரு சின்ன வேண்டுகோள்:
    உங்கள் படைப்புகள் எனக்கு இமெயிலில் வரும்படி செய்ய முடியுமா?
    பேஸ்புக் வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி.. சரி அம்மா...

      Delete
  11. இந்தியாவின் வறுமை ஏழ்மை பற்றி அழகா விளகிடீங்க...
    ஆனால் விழிக்கவேண்டிய அரசு தூங்குவதுபோல நடித்துகொண்டிருகிறது....
    நன்றி ஆயிஷா!!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி..

      Delete
  12. ungalin puratchiku enathu valthukal

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி..

      Delete
  13. என்று தனியும் இந்த சமத்துவ தாகம்...

    ReplyDelete