அவசரம்
அவசரம்
எதற்கும்
அவசரம்
எங்கும்
அவசரம்
வண்டி ஒட்டி
வேகமாய்
செல்ல
விரைந்து
பறந்து
மைல்கள்
கடக்க
சாலையில்
சாகச
ஜாலங்கள்
புரிய
சீறினேன்
வண்டியோடு
கவனக் குறைவு
விதிமுறை
மீறல்
அலட்சிய
மனம்
விரைந்த வேகம்
ஆனது விபத்து
தலையும்
சுற்ற
கண்ணும்
மயங்கின
விழித்து
பார்த்தேன்
மயக்கம்
தெளிந்து
காலில்
தலையில்
காயக் கட்டு
வருந்தி
திருந்தி
மனம் கொண்டேன்
விதி மீறல்
பயணம் முடிக்கும்
வாகன வேகம்
வாழ்வை
முடிக்கும்
அவசரம்
வேண்டாம்
இனி சாலையிலே
வாகன விபத்து குறைக்க வேண்டுமெனில் வாகன ஓட்டிகளான நாம் தான் முதலில் முழு ஒத்துழைப்பு கொடுக்க முன்வர வேண்டும். வாகனம் ஓட்டும் போது அலைபேசி பயன்படுத்தக்கூடாது, வேகமான பயணத்தை மேற்கொள்ளக்கூடாது. வாகன விதிகளை கவனமாக பின்பற்ற வேண்டும். வாகன விபத்துகளை குறைக்க முற்படுவோம். மரணம் நம்மை தேடி வர வேண்டும், மரணத்தை நாம் தேடிப் போகக்கூடாது.
அன்புடன்
ஆயிஷாபாரூக்
ஆயிஷாபாரூக்
விழிப்புணர்வு தரும் நல்ல பதிவு.. எதனை முறை யாரை பார்த்தாலும் திருந்தாத மக்கள் இருக்கும் வரை விழிப்புணர்வுகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.. போலீஸ் இல்லை என்றால் சிக்னல் மதிக்க கூடாது என எழுத படாத சட்டம் உள்ளது போலும்!! ஏதோ போலீஸ்-காக விதிமுறை வகுக்கப்பட்டதாக மக்கள் கருதுகிறார்கள் அதில் சுய தற்காப்பு இருப்பதை உணர்வதில்லை...
ReplyDeleteநன்றி ஆயிஷா!!
ஆமாம் எல்லாத்திலும் எல்லோருக்கும் அவசரம்தான் நல்லதொரு பதிவு!
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி
Deleteநிச்சயமாக அவசியமான விழிப்புணர்வு கவிதை
ReplyDeleteநல்ல பகிர்வு... விபத்துகளைத் தவிர்க்க நமது பங்கும் நிச்சயம் இருக்கிறது. பாராட்டுகள்.
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி
Deleteஉண்மை!வேகம் விவேகம் அல்ல!நல்ல பகிர்வு
ReplyDeleteநல்லதொரு விழிப்புணர்வு பகிர்வு...
ReplyDeleteநன்றி...
விழிப்புணர்வு எல்லோருக்கும் அவசியம் என்று
ReplyDeleteஅறிவுறுத்தும் பதிவு.
நல்வாழ்த்து சகோதரி.
வேதா. இலங்காதிலகம்.
நல்ல விழிப்புணர்வு கவிதை...! நன்றி... !!
ReplyDelete- இப்படிக்கு அனீஷ் ஜெ...
உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி
Deleteவேகத்தில் கவனம் தேவைதான்.
ReplyDeleteநல்ல பதிவு.