பெண்மையின் பரிசாக
கருவுற்று மாதம் பத்தும்
கருவினை சுமந்து
கடும் வலியுடன்
பிரசவித்து
வேதனையிலும் குழந்தையின்
முகத்தைகண்டு புன்னகைத்த
தாயே உன்னை என் சொல்வேன்
நீயன்றி பெண்தெய்வம் எவரோ!
ரத்தத்தை பாலாக மாற்றி
தன்னுயிர் பசித்தீர
பாலூட்டி
அதைக்கண்டு மனம்
இன்புற்று தன்னலமில்லா
அன்பை பொழிந்து
ஈடுஇணையற்ற உறவாய்
ஆட்கொண்ட அன்புத்தாயயே
உன்னை என் சொல்வேன்
நீயன்றி பெண்தெய்வம் எவரோ!
மனதினில் வேதனைகள்
பலயிருந்தும் மறைத்துவைத்து
அன்பையும் அறிவையும்
நல்ல பண்பையும் புகட்டி
வாழ்வின் ஒளிவிளக்காய்
வழிக்காட்டி களங்கமில்லா
மனம்கொண்ட தேவதையே
உன்னை என் சொல்வேன்
நீயன்றி பெண்தெய்வம் எவரோ!
மீண்டும் ஒரு ஜென்மம்
பிறந்து வந்தால் உன்னை
நான் கருசுமந்து மகளாக்கி
பாராட்டி சீராட்டி அன்புதனை
பொழிந்து என் கடனை
உன் பாதமலரில் சமர்பிப்பேன்
என்னை ஈன்ற அன்புத்தாயயே
நீயின்றி என் தெய்வம் எவரோ!
என்னுடைய நூறாவது படைப்பை என் அன்பு தாய்க்கும், உலகில் உள்ள அணைத்து தாய்மார்களுக்கும், தாயுள்ளம் கொண்ட அணைத்து மாந்தர்களுக்கும் அன்புடன் சமர்பிக்கிறேன். வணங்குகிறேன். தாய் என்பவள் இறைவனை விட மேலான உறவு. நபிகள் பெருமானார் கூறுவது போல அவள் கால் அடியில் சுவர்க்கம் உள்ளது. நாம் என்றும் அவளுக்கு நம் அன்பையும் பணிவையும் செலுத்தவேண்டும்.
தாய்க்கு நிகர் எதுவுமில்லை அருமையான படைப்பு
ReplyDelete100 பதிவுக்கு வாழ்த்துக்கள்
என்னுடைய நூறாவது படைப்பை கண்டு தங்களின் மேன்மையான கருத்தை பதிந்தமைக்கு மிக்க நன்றி.
Deleteதாய்க்கு ஒரு தாலாட்டு ....அருமையான பதிவு
ReplyDeleteஎன்னுடைய நூறாவது படைப்பை கண்டு தங்களின் மேன்மையான கருத்தை பதிந்தமைக்கு மிக்க நன்றி.
Deleteஆத்மார்த்தமான அற்பணிப்பு...
ReplyDeleteஎன்னுடைய நூறாவது படைப்பை கண்டு தங்களின் மேன்மையான கருத்தை பதிந்தமைக்கு மிக்க நன்றி.
Deleteதாய்மைக்கு முதல் வணக்கம். வாழ்த்துக்கள் சகோ.
ReplyDeleteதாய் பற்றிய உங்கள் பகிர்வு மிக அருமை! நூறாவது பதிவிற்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஎன்னுடைய நூறாவது படைப்பை கண்டு தங்களின் மேன்மையான கருத்தை பதிந்தமைக்கு மிக்க நன்றி.
Deleteதாயன்பு பற்றிய உங்களின் கவிதைச் சாரலில் நனைந்து மகிழ்ந்தேன்.வாழ்த்துக்கள்.தொடரட்டும் கவிதை மழை.பெற்ற தாயை சுமையாகக் கருதி முதியோர் இல்லத்தில் விட்டு விடும் கல்மனதுக்காரர்கள் நிச்சயம் படிக்க வேண்டும்.
ReplyDeleteஎன்னுடைய நூறாவது படைப்பை கண்டு தங்களின் மேன்மையான கருத்தை பதிந்தமைக்கு மிக்க நன்றி.
Deleteபிள்ளையின் அன்பை வெளிகாட்டும்
ReplyDeleteஅழகிய கவிதை.
வாழ்த்துக்கள் சகோ.
என்னுடைய நூறாவது படைப்பை கண்டு தங்களின் மேன்மையான கருத்தை பதிந்தமைக்கு மிக்க நன்றி.
Deleteசிறப்பான படைப்பு... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஎன்னுடைய நூறாவது படைப்பை கண்டு தங்களின் மேன்மையான கருத்தை பதிந்தமைக்கு மிக்க நன்றி.
Deleteவாழ்த்துக்கள்
ReplyDeleteதயின் பெருமை சொல்ல உலகத்தின் வார்த்தைகள் போதாது
என்னுடைய நூறாவது படைப்பை கண்டு தங்களின் மேன்மையான கருத்தை பதிந்தமைக்கு மிக்க நன்றி.
Deleteநூறாவது படைப்பை என் அன்பு தாய்க்கும், உலகில் உள்ள அணைத்து தாய்மார்களுக்கும், தாயுள்ளம் கொண்ட அணைத்து மாந்தர்களுக்கும் அன்புடன் சமர்பிக்கிறேன். வணங்குகிறேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள்
என்னுடைய நூறாவது படைப்பை கண்டு தங்களின் மேன்மையான கருத்தை பதிந்தமைக்கு மிக்க நன்றி.
Deleteமனதினில் வேதனைகள்
ReplyDeleteபலயிருந்தும் மறைத்துவைத்து
அன்பையும் அறிவையும்
நல்ல பண்பையும் புகட்டி
வாழ்வின் ஒளிவிளக்காய்
வழிக்காட்டி களங்கமில்லா
மனம்கொண்ட தேவதையே
உன்னை என் சொல்வேன்
நீயன்றி பெண்தெய்வம் எவரோ!//சிறப்பான படைப்பு... வாழ்த்துக்கள்...
தாய்மைக்கு ஈடு இணை உண்டோ?அருமை!
ReplyDeleteஎன்னுடைய நூறாவது படைப்பை கண்டு தங்களின் மேன்மையான கருத்தை பதிந்தமைக்கு மிக்க நன்றி.
Deleteநன்று
ReplyDeleteதாய்மையை பெருமைப்படுத்திய ஒரு மகவின் மிக அற்புதமான கவிதை வரிகளை காண்கிறேன்... தாய்மீதான அன்பினை வரி வரியாக இழையோடும் கனிவினை காண்கிறேன். என்றும் எப்போதும் தாயின் ஆசியில் சந்தோஷத்துடன் சௌக்கியத்துடன் இருக்க மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் ஆயிஷா...
ReplyDeleteநூறாவது படைப்பிற்கும் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்பா...
என்னுடைய நூறாவது படைப்பை கண்டு தங்களின் மேன்மையான கருத்தை பதிந்தமைக்கு மிக்க நன்றி.
Delete