October 15, 2012

இரவின்றி பகலில்லை


தோல்வியின்றி மனமில்லை
மனமின்றி எண்ணமில்லை
எண்ணமின்றி நம்பிக்கையில்லை
நம்பிக்கையின்றி முயற்சியில்லை
முயற்சியின்றி தடையில்லை
தடையின்றி செயலில்லை
செயலின்றி வெற்றியில்லை
வெற்றியின்றி மனிதனில்லை 

உலகில் வெற்றி பெற்ற மனிதர்களை பார்த்து வியக்கிறோம்! எப்படி இவர்களால் மட்டும் வெற்றி பெற முடிந்தது, ஏன் நம்மால் வெற்றி பெற முடியவில்லை என்று சிந்தித்து பார்க்கிறோம். பலருக்கு வெற்றி பெற்ற மனிதர்களின் வாழ்கையை புரட்டி பார்த்தால் சில வியப்பான உண்மைகள் நமக்கு புலப்படும். ஆம், அவர்கள் அத்தனை  சீக்கிரத்தில் வெற்றியை சுவைத்தவர்கள் கிடையாது. நம்மை விட பல தோல்விகளையும் சறுக்கல்களையும் சந்தித்தவர்கள். தடைகளை கடந்து சாதித்தவர்கள்.இந்த உண்மையை அனைவரும் உணர்ந்தால் போதும், வாழ்க்கை மிகவும் வெற்றி உள்ளதாக அமையும். தோல்வியை சந்திக்காத நபர்கள் யாரும் இந்த உலகில் கிடையாது, மனம் இருந்தால் மார்க்கம் உண்டு, நல்ல எண்ணம் இருந்தால்  நல்ல வழியுண்டு, அதற்க்கு முதலில் மனதில் நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை என்பது மனிதனின் பலம், அதுவும் தன்னம்பிக்கை இருந்தால் வெற்றிக்கான வழி சுலபமாக கிடைக்கும். நாம் செய்யும் செயலில் நம்முடைய முழு முயற்சி கொண்டு தடைகள் பல வந்தாலும் நம்முடைய செயலில் இருந்து பின்வாங்க கூடாது. வெற்றியின்றி மனிதனும் இல்லை தோல்வியின்றி வெற்றியும் இல்லை என்பதே உண்மை. 

அன்புடன் 
ஆயிஷாபாரூக் 

14 comments:

  1. மனதில் உறுதி வேண்டும்.
    எனும் பாரதியார் பாடலே நினைவுக்கு வந்தது. அருமை சகோ.

    ReplyDelete
  2. முயற்சி திருவினையாக்கும் .. வள்ளுவர். நல்ல பதிவு. :)

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய பதிவிற்கு வந்து தங்களின் மேன்மையான கருத்தை பதிந்தமைக்கு மிக்க நன்றி!

      Delete
  3. வணக்கம் சகோ,

    நல்ல பதிவு. விடாமுயற்சிக்கு ஓர் வித்து!!!!!!

    நன்றி.....

    இனியவன்...

    ReplyDelete
  4. வணக்கம் சகோ,

    நல்ல பதிவு. விடாமுயற்சிக்கு ஓர் வித்து!!!!!!

    நன்றி.....

    இனியவன்...

    ReplyDelete
  5. சரியா சொன்னீங்க

    நம்பிக்கைதான் வாழ்க்கை - நன்றி பகிர்வுக்கு

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய பதிவிற்கு வந்து தங்களின் மேன்மையான கருத்தை பதிந்தமைக்கு மிக்க நன்றி!

      Delete
  6. உண்மைதான் ஆயிரம் முறை தோல்விகளைக் கண்டவர்கள்தான் பின் நாட்களில் உலகம் போற்றுபவர்களானார்கள்
    நல்ல பதிவு

    ReplyDelete
  7. Replies
    1. என்னுடைய பதிவிற்கு வந்து தங்களின் மேன்மையான கருத்தை பதிந்தமைக்கு மிக்க நன்றி!

      Delete
  8. சிறப்பான பகிர்வு... வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்... நன்றி..

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய பதிவிற்கு வந்து தங்களின் மேன்மையான கருத்தை பதிந்தமைக்கு மிக்க நன்றி!

      Delete
  9. மனிதனின் தொடக்கமும்.... அதன் தொடர்பாய் முயற்சியும், நம்பிக்கையோடு தொடரும் செயல்களில் வெற்றியும் வெற்றி இல்லையேல் அனுபவம் என்னும் பாடம் கிடைத்து இன்னும் தன்னை மெருகேற்றிக்கொள்ளும் அருமையான வழிகளும் மிக சிறப்பாக பகிர்ந்திருக்கீங்கப்பா ஆயிஷா..

    மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா தன்னம்பிக்கை வரிகள் பகிர்வுக்கு....

    ReplyDelete
    Replies
    1. தங்களின் மேன்மையான கருத்தை பதிந்தமைக்கு மிக்க நன்றி.

      Delete