October 1, 2012

காதல் கரை சேர

காதல் கரைசேர கலந்துவிடு 

உன் விழிப்பார்வை  உயிர் வரை  பாயுமே
உன் இதழ் புன்னகை என் உயிரை காக்குமே
காதல் சொல்ல காத்திருந்தேன்
காலம் போனதை உணரவில்லை
வாழும் நாளை பார்த்திருந்தேன்
வசந்தம் போனதை அறியவில்லை
உன்னை சேரும்வரை தவமிருப்பேன்
வயது போவதில் கவலையில்லை
காதலின் ஆழம் கண்டுவிட்டேன்
உன் மனதின் ஆழம் காணவில்லை
வாழ்வதும் மடிவதும் உன் பதிலில் தான்
காதலும் துயரமும் ஒரு சாபம் தான்
கல்லறை சேரும் வரை இது
தொடரும் காதல் கதைத்தான்
காலங்கள் கடந்து போனாலும்  
நீங்காது  நினைவுகள்  தான்
என்னுயிரே ஆருயிரே உணர்ந்துவிடு
நம் காதல் கரைசேர இணைந்துவிடு
இல்லையென்றால் உனதுயிரை எடுத்துவிடு
அன்புடன் 
ஆயிஷாபாரூக்