உன் தோளில் முகம் சாய்த்து
விரல்கொண்டு விண்மீன்களை எண்ணி
ஆறத்தழுவும் உன் கைகளில்
சாறுகள் கொய்ந்த அமிழ்தகனியாய்
நழுவிய நறுமண மாலையாய்
உனது பொன்மேனியில் புரண்டோட
அன்பின் பிறப்பிடமாய் நீ அணைத்து
சுகத்தின் ஊற்றாய் இன்பம்தனை
ஊடலுடன் கூடல் விளையாட்டை
நீ என்னுள் ஆடி களைத்திட
சூடான உன் மூச்சு துடிப்பில்
தாகம் தீர்த்திட உயிர்த்துளியாய்
தேனில் விழுந்த மலர் இதழாய்
மனமறியாது மனமயங்கி
பெற்ற சுகம்தனை வையகம்
மறக்க மயங்கினேன் உனது
தோளில் துயில் சாய்ந்தபடியே!....
காமம்
என்பது அனைவருக்கும் பொதுவான உணர்வு, புணர்ச்சி பற்றிய கவிதைகள்
பெரும்பாலும் பெண்கள் எழுதுவது இல்லை, காரணம் ஆணாதிக்கம் படைத்த உலகில்
எழுதினால் விமர்சிக்கப்படுவது கவிதை மட்டும் அல்ல
அந்த பெண் எழுத்தாளரின் குணத்தையும் பற்றி தான். அதை தகர்த்தெறியும்
முயற்சியாக என் கவிதை பெண்கள். திருநங்கைகள் சார்பாக... கவிதை எழுதுபவர்
அணைத்து வித ரசனைகளையும் எழுத வேண்டும்.. உலகில் அனைத்தும்
ரசிக்கபடுப்பவையே..
அன்புடன்
ஆயிஷாபாரூக்
அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் தோழி படைப்பு என்பது பன்முக பட்டது எல்லா தளங்களிலும் செயல்பட வேண்டியது ..........ஆனால் இன்று எழுத்தை படிபதைவிட எழுத்தாளர்களை படிப்பது அதிகரித்து விட்டதால் எழுதுன் தளங்கள் சுருங்கி கிடக்கிறது சமூகம் அங்கீகரிக்கும் தளங்கள் மட்டுமே பேசபடுகிறது அதையும் தாண்டி அகத்தை பற்றியும் அந்தரகதை பற்றியும் வரும் எழுத்துகள் வியாபாரா நோக்கமாக மட்டுமே வெளி வருவதால் அதில் உண்மைகள் நேர்மைகள் அழிக்கப்பட்டு இருக்கிறது ........உங்கள் படைப்பில் உள்ள நேர்த்தி என்னை வியக்கக வைக்கிறது உணவு பரிமாறுவதில் கூட ஒழுங்கு முறை இல்லை எனில் அந்த உணவு கழிவு போல அருவெறுப்பை தந்துவிடும் அப்படி தான் அகம் ,காதல் காமம் கூட எதையும் சொல்லும் விதம் புரிதல் இவைதான் ஆழமான பொருளை பறை சாற்றும் உங்கள் எழுத்திற்கு என் வாழ்த்துக்கள் இன்னும் கூட சமூகத்தின் மறைவில் கிடக்கும் பல உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்டுங்கள்
ReplyDeleteசகோதரியின் சிறப்பான விமர்சனத்திற்கு மிக்க நன்றி... உங்களின் அன்புக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி... காமம் என்கிற பெயரில் அருவறதக்க வரிகளை கொண்டு சிலர் கவிதை எழுதி கவிதைக்கான புனித தன்மையை கெடுகின்றனர். படிக்க முகம் சுளிக்க வைக்கும் வகையில் அது உள்ளது. கவிதை எழுதும் பெண்கள் அனைத்தையும் எழுத முன்வர வேண்டும். எழுதும் முன்பு கவனம் கொண்டு வேண்டியவை மட்டும் கருத்தில் கொண்டு நிதானமாக எழுத வேண்டும்.எழுத்து சுதந்திரத்தை யாரும் தடுக்க முடியாது.
Deleteநல்ல முயற்சி உங்கள் முயற்சியினை தளராது தொடருங்கள் இலக்கிய உலகில் நிச்சயமாக மாற்றம் வரும் +வளரும்
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் விமர்சனத்திற்கும் மிக்க நன்றி...
Deleteஇன்றைய உலகம் ஆணாதிக்கம் நிறைந்தது ஆனாலும் சில கட்டுப் பாடுகள் பெண்களுக்கே விதைக்கப் பட்டு அறுவடை செய்வது ஆண்களே . ஏன் பெண்கள் காமத்தை பேசக்கூடாத என்ன சிறப்பு எழுதுங்கள் பாராட்டுகள் .....
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் விமர்சனத்திற்கும் மிக்க நன்றி... காமம் என்கிற பெயரில் அருவறதக்க வரிகளை கொண்டு சிலர் கவிதை எழுதி கவிதைக்கான புனித தன்மையை கெடுகின்றனர். படிக்க முகம் சுளிக்க வைக்கும் வகையில் அது உள்ளது. கவிதை எழுதும் பெண்கள் அனைத்தையும் எழுத முன்வர வேண்டும். எழுதும் முன்பு கவனம் கொண்டு வேண்டியவை மட்டும் கருத்தில் கொண்டு நிதானமாக எழுத வேண்டும்.எழுத்து சுதந்திரத்தை யாரும் தடுக்க முடியாது.
Deleteபுணர்வின்பத்தை எழுதுகிறேன் என்ற பேரில் ஆபாசத்தை விதைப்பவர்கள் மத்தியில் உங்கள் கவிதை அற்புதமாக இருந்தது!
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் விமர்சனத்திற்கும் மிக்க நன்றி...
Deleteகளவியல், கற்பியல் - இவைகளில் இல்லாததா...? தொடருங்கள்...
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் விமர்சனத்திற்கும் மிக்க நன்றி...
Deleteபெண்கள் மிகச் சரியாக ஆண்களால்
ReplyDeleteபுரிந்து கொள்ளப்படாமல் போவதற்கான
காரணங்களில் அவர்களின் உணர்வுகளை
மிகச் சரியாக வெளிப்படுத்த சமூகம் அனுமதிக்காததே
என்பதே எனது கருத்தும்
இந்தக் காலச் சூழலில் அவசியம் அனைவரும்
பாராட்ட வேண்டிய பதிவிது
தொடர வாழ்த்துக்கள்
அய்யா... உங்களின் வரிகள் எனக்கு நல்ல உற்சாகம் ஊட்டுகிறது... பெண்கள் எழுதும் எழுத்துக்கு ஆண்கள் கட்டுப்பாடு விதித்து தங்களின் ஆணாதிக்க தன்மையை அன்று தொட்டே நிலை நிறுத்தி வருகின்றனர், அதனால் தான் பெண்களின் கற்பனை குறைந்து எழுத்தும் சுருங்கியது. உங்களின் வருகைக்கும் விமர்சனத்திற்கும் மிக்க நன்றி...
Delete///காமம் என்பது அனைவருக்கும் பொதுவான உணர்வு, புணர்ச்சி பற்றிய கவிதைகள் பெரும்பாலும் பெண்கள் எழுதுவது இல்லை, காரணம் ஆணாதிக்கம் படைத்த உலகில் எழுதினால் விமர்சிக்கப்படுவது கவிதை மட்டும் அல்ல அந்த பெண் எழுத்தாளரின் குணத்தையும் பற்றி தான்...///
ReplyDeleteமேலே சொன்னது இந்தியா வரைக்கும் உண்மை...மேலை நாடுகளில் அவ்வாறு அல்ல. காதலில் ஆண் பெண் சமம்.
நம் ஆட்கள் பாட்டுகளில் மட்டும் தான் சமத்துவும் காட்டுவார்கள்!
ஒரு பாடல் வரிகள் மறந்து விட்டது...இதோ...
"காதல் எனபது பொது உடமை; யார் கேட்டாலும் இளைமைக்கு பெருமை." ...இந்த வரிகள் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பொய் பித்தலாட்டம்...
பெண்கள் எழுதும் எழுத்துக்கு ஆண்கள் கட்டுப்பாடு விதித்து தங்களின் ஆணாதிக்க தன்மையை அன்று தொட்டே நிலை நிறுத்தி வருகின்றனர், அதனால் தான் பெண்களின் கற்பனை குறைந்து எழுத்தும் சுருங்கியது. உங்களின் வருகைக்கும் விமர்சனத்திற்கும் மிக்க நன்றி...
Deleteபசி, கோபம், என்பது போல காமம் என்பதும் பொதுவான உணர்வே .. உயிர்கள் எல்லாவரிடமும் காம உணர்வு புதைக்கப்பட்டுள்ளது. காம உணர்வுகளைத் தமிழர்கள் என்றும் மறைத்தது இல்லை, இலக்கியம், வாழ்வியல், வழிப்பாடு எல்லாவற்றிலும் காமம் இடம் பெற்றுள்ளது .. அந்த வகையில் புணர்ச்சி சார்ந்த கவிதைகளை பெண்கள் எழுத முற்பட வேண்டும், மன உணர்வுகளின் வெளிப்பாடே கவிதைகள் என்பதால், அவற்றுக்கு தடைகள் போடுவதை நான் ஏற்பதில்லை ..
ReplyDeleteநல்லதொரு அருமையான கவிதை. தொடர்க சகோதரி
பெண்கள் எழுதும் எழுத்துக்கு ஆண்கள் கட்டுப்பாடு விதித்து தங்களின் ஆணாதிக்க தன்மையை அன்று தொட்டே நிலை நிறுத்தி வருகின்றனர், அதனால் தான் பெண்களின் கற்பனை குறைந்து எழுத்தும் சுருங்கியது. உங்களின் வருகைக்கும் விமர்சனத்திற்கும் மிக்க நன்றி...
Deleteசரியாக சொன்னீர்கள் அன்பரே
Deleteserapinum serapu
ReplyDeleteஉங்களின் முதல் வருகையை இனிதே வரவேற்கிறேன்... உங்களின் பதிவிற்கு மிக்க நன்றி
Deleteஆபாசம் இன்றி மிக அழகாக எழுதியுள்ளீர்கள்...
ReplyDeleteதொடருங்கள் தோழி...
ungaludaya muyarchikku parattukkal...aabasamillamal arumaiyaga vadivamaikkappatta...arputha kavithai...
ReplyDeleteகாமம் என்பது அனைவருக்கும் பொதுவான உணர்வு, புணர்ச்சி பற்றிய கவிதைகள் பெரும்பாலும் பெண்கள் எழுதுவது இல்லை, ....உண்மை உண்மை முக்கியமாக பலர் புணர்தல்தொடர்பில் ஆபாசப்புணர்ச்சியாகவே கவிதைகளைவடித்துள்ளார்கள்...ஆனால் உங்கள் கவிதை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல கவிதை ஒரு திருநங்கையாக எவ்வாறு பெண்கள் தொட தயங்கும் விசயத்தை கையாண்டுஇருக்கிறீர்கள் என்று அறிந்துகொள்ளவே படித்தேன்.நீங்கள் ஆரம்பித்து இருக்கும் இந்த விசயம் எப்படி செல்கிறது என்று பார்ப்போம்
ReplyDeleteகாமம் என்பது இழிவன்று. உடலும் மனமும் ஒத்து துய்க்கப்பட வேண்டிய ஒன்று.
ReplyDelete