November 9, 2013

பல்சுவை கவிதை மொட்டுக்கள் - 2

அரசியல் சினிமா மோகமா 


 பெற்ற தாய் தந்தைக்காக
உன் உயிரைக்கொடுத்து வாழு
உன்னை பெற்றகடனாவது தீரும்
யாரோ அரசியல்வாதி
யாரோ நடிகருக்காக
உயிரை கொடுக்கும் உன் அற்ப
முடிவு எதற்கும் பயன்படாது....
அரசியல், சினிமா மோகம்
கொண்டு வாழும் இளைய
சமுதாயமே கொஞ்சம் விழித்திரு
நீ முட்டாளாகி கொண்டே இருக்கிறாய்....
 --------------------------------------------------------------------------------------------

திருநங்கையராய் பிறத்தல் அரிது

 எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்
வாழ்க்கை கால்வாயில் ஒரு சேர தள்ளப்பட்டோம்
காலத்தையோ விதியையோ பழிக்க விரும்பவில்லை
எங்கள் பிறப்பை ஏற்காத மக்களை பழிக்கின்றேன்
மனிதா, கொஞ்சம் உணரு எங்கள் ஏக்கங்களை
வாழ்க்கை வாழ்வதற்கான எங்கள் கனவுகளை
அன்பிற்கு மட்டும் ஏங்கும் உன்னத பிறவிகள் நாங்கள்
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
அதனினும் அரிது திருநங்கையராய் பிறத்தல்.....
 
 --------------------------------------------------------------------------------------------

 வெற்றியின் கோட்பாடு


வெற்றி ஒன்றும் எளிதல்ல
தோல்வி என்றும் உனதல்ல
இரண்டும் கலந்த அனுபவ பாதை
வகுக்கும் உனக்கோர் உன்னத வாழ்வை

சோர்ந்து மட்டும் போகாதே
வீழ்ந்தால் துவண்டு மாளாதே
உற்சாகம் என்றும் இழக்காதே
தோல்வியின்றி சரித்திரம் கிடையாதே

மனமதை உறுதியாய் மாற்றிவிடு
வரும் தடையை துணிந்து தாண்டிவிடு
சோம்பலை அறவே தள்ளிவிடு
இதுவே வெற்றியின் கோட்பாடு
 
 --------------------------------------------------------------------------------------------

 பேசாத அழைப்பு 


நீ பேசாத போது
நான் அழைக்கும்
ஒவ்வொரு அழைப்பையும்
நீ தவிர்க்கும் போது
என்னிடம் உன் மனது
மறுபடியும் பேச வைக்க
ஓவ்வொரு அழைப்பையும்
உணர்த்தும் இவள்
உனக்காகவே காத்திருக்கிறாள்…..
 
--------------------------------------------------------------------------------------------

 என் அழகான கவிதை நீ

 என் அழகான கவிதை நீ
அதில் எழுத்து பிழையும் நீ
அதன் கரு பொருளும் நீ
அர்த்தம் உணராத வரிகளும் நீ
அதிலுள்ள உயிரும் மெய்யும் நீ
உன்னை எழுதுபவள் மட்டும் தான் நான்... 
வார்த்தைகளன்றி மௌனமாகிறேன்
உன் இதயத்தை தொட்டு விட
எத்தனை தூரம் என்றறியாமல்
நித்தம் காதலுடன் ஆண்டுகள் கடந்து
ஜீவனற்ற வெறுமை கண்களுடன்
செய்வதறியாமல் வெறும் காதல் மட்டும்
மனதில் கொண்டு காத்துருக்கிறேன்...
காதல் செய் இல்லேயேல் கல்லறை செய்...
காதல் முக்தி தேடும் மனமதை
பதிலின்றி இனி கொள்ளாதே...
--------------------------------------------------------------------------

நீயே என் அழகு  

 இதற்கென்று தனி அழகில்லை
நெற்றியில் குங்குமமும்
கழுத்தில் தாலியும்
கைகளில் வளையல்களும்
காலில் கொலுசுகளும்
அழகு பெறுகிறது
என் மனதில் நீ வாழ்வதால்...


  ஆயிஷாபாரூக் 

No comments:

Post a Comment