திருநங்கை - விழிப்புணர்வு தொடர் (ஒன்று)
அன்புடையீர், வணக்கம்.....
என்னுடைய "திருநங்கை - விழிப்புணர்வு தொடர்" என்கிற விழிப்புணர்வு தொடரை படிக்க
வந்தமைக்கு மிக்க நன்றி. இந்த கட்டுரையை படிக்க என் வலைபதிவிற்கு நீங்கள் வருகை
புரிந்ததே என்னுடைய முதல் வெற்றியாக கருதி மகிழ்ச்சியடைகிறேன்.
"மங்கையானவள் திருநங்கையானவள்
நிழலின் இருளில் சிரிப்பவள்
அன்பின் ஊற்றாய் பிறந்தவள்
வலியின் வலியை தாங்கியவள்
திறமைகளை தீர்க்கமாய் பெற்றவள்
ஆணாகி பெண்ணாகி யாதுமானவள்"
என்ற என் வரிகளில் திருநங்கைகளை புகழ் பாடி தொடங்குகிறேன்.
மனிதன் உருவானது முதல் பலவித
மாற்றங்கள் இவ்வுலகில் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. காலங்கள் மாறினாலும் சில
காட்சிகள் மட்டும் மாறவில்லை, அத்தகைய காட்சிகளில் ஒன்று தான் திருநங்கையை சமூதாயம் ஒதுக்குவது. உங்கள்
வாழ்கையில் திருநங்கைகளை பற்றி அறிமுகப்படாமல் இருந்திருக்க முடியாது. ஒரு
சிலருக்கே திருநங்கைகளை ஏற்கும் மனோபாவம் இருக்கிறது. பலருக்கு திருநங்கைகளை பற்றி
புரிதலோ உணர்தலோ இல்லை. அவர்களின் மனதில் திருநங்கைகளை பற்றி அறியபடாமல் தவறான
கண்ணோட்டமே மேலோங்கி நிற்கிறது. திருநங்கைகள் பற்றி போதிய விழிப்புணர்வு பெரும்பாலான மக்களிடையே இல்லை. திருநங்கைகளை பற்றி படமோ, காட்சியோ, புத்தகமோ
ஊடகத்தில் வெளிவந்தால் கூட ஒரு சில மக்களுக்கு மட்டுமே திருநங்கைகளை தெரிந்துக்கொள்வதில்
ஆர்வம் இருக்கிறது, வரவேற்கிறார்கள். அப்படி ஏன் ஒரு பாலினத்தை பற்றி முழுவதும்
தெரிந்துகொள்ளாமல் ஒதுக்க வேண்டும், நிராகரிக்க வேண்டும். என்னுடைய
இந்த தொடர் கட்டுரையை தயவு செய்து முழுவதும் படியுங்கள், காலம்
காலமாக ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின், பாலினத்தின் அறைகூவல் தான் என்
எழுத்துகளாக உங்கள் கண்முன்னே காட்சியளிகிறது.
பழைய வரலாறு:-
இடைப்பட்ட கற்காலத்தில் திருநங்கைகள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன, 9660 - 5000 கி.மு வில் வரையப்பட திருநங்கை கற்சிற்பம் சிசிலி நாட்டில் கண்டு பிடித்துள்ளனர். வெண்கல காலத்தில் 7000 - 1700 கி.மு வில் வரையப்பட திருநங்கை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
திருநங்கைகள் பாலினம் எப்படி உருவாகிறது ?
ஒரு கரு ஆணாகவோ,
பெண்ணாகவோ, மூன்றாம் பாலினமாகவோ
உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்பது இல்லை, கற்பபையில் கரு உருவாகும் போது
நிறமூர்த்தங்கள் (Chromosomes) தீர்மானிக்கிறது.
XY நிறமூர்த்தங்கள் சேர்ந்தால் அது ஆண் குழந்தையாகவும், XX நிறமூர்த்தங்கள் சேர்ந்தால் அது பெண் குழந்தையாகவும், XXY அல்லது XYY கருவில் சேர பெற்றால் அது மூன்றாம் பாலினமாக குழந்தை பிறக்கிறது. இது மருத்துவ ரீதியான உண்மை.ஒரு சில சமயங்களில் குழந்தை பிறந்த பின்னும் ஹோர்மோன்ஸ் ஏற்ற தாழ்வுகள் உடம்பில் ஏற்பட்டால் சில நேரம் XY நிறமூர்த்தங்கள் கூட மூன்றாம் பாலினமாக மாறலாம்.மூன்றாம் பாலினத்தில் நாம் தற்போது திருநங்கையை பற்றிய கட்டுரையை தான் படித்துகொண்டு இருக்கிறோம்.
XY நிறமூர்த்தங்கள் சேர்ந்தால் அது ஆண் குழந்தையாகவும், XX நிறமூர்த்தங்கள் சேர்ந்தால் அது பெண் குழந்தையாகவும், XXY அல்லது XYY கருவில் சேர பெற்றால் அது மூன்றாம் பாலினமாக குழந்தை பிறக்கிறது. இது மருத்துவ ரீதியான உண்மை.ஒரு சில சமயங்களில் குழந்தை பிறந்த பின்னும் ஹோர்மோன்ஸ் ஏற்ற தாழ்வுகள் உடம்பில் ஏற்பட்டால் சில நேரம் XY நிறமூர்த்தங்கள் கூட மூன்றாம் பாலினமாக மாறலாம்.மூன்றாம் பாலினத்தில் நாம் தற்போது திருநங்கையை பற்றிய கட்டுரையை தான் படித்துகொண்டு இருக்கிறோம்.
திருநங்கை எனப்படுவோர் பிறப்புறுப்பால் ஆண் என்று அடையாளப்படுத்தப்பட்டு பின்னர் தம்மை பெண்ணாக உணர்ந்து பெண்களாக வாழ முற்படுவோர்களைக் குறிக்கும்.
பலருக்கு உள்ள பொதுவான சந்தேகம் திருநங்கைகள் பிறக்கும் போது ஆண்குறியுடன் பிறப்பார்களா இல்லை பெண் குறியுடன் பிறப்பார்களா என்பது. திருநங்கை என்பவள் ஆண் குறிகொண்ட குழந்தையாகத்தான் பிறக்கிறாள். ஆனால் அந்த குழந்தைக்கு தெரியாது தன் உடலில் பெண்ணிற்கான குணாதிசியங்கள், நிறமூர்த்தங்கள் இருக்கிறது என்று, அந்த குழந்தை வளர வளர அந்த ஹோர்மோன்ஸ், நிறமூர்த்தங்களின் செயல்பாடு வெளிப்பட ஆரம்பிக்கும்.
திருநங்கையான அந்த
சிறுவனுக்கு 13 வயது அல்லது பருவ வயது (ஹோர்மோன்கள் சுரக்கும் தருணம்) ஆரம்பிக்கும் பொழுது உடலில் தன்னையே அறியாமல் பெண்மைக்கான
குணாதிசயங்களை உணர முடியும். பெண்களை போல பேசுவது, பெண்களை போல நடப்பது, பெண்களை போல செயல்கள்
புரிவது போன்றவை மனதளவிலே அரும்புவிட ஆரம்பிக்கிறது. அப்போது தான் அந்த சிறுவனுக்கு
பாலியல் தடுமாற்றம் ஆரம்பிக்கும் தருணம். அந்த சிறுவன் தான் ஆண்மகனா இல்லை பெண்மகளா என்று தனுக்குள் சந்தேகம் ஏற்படும். அந்த சிறுவன் தன்னுடன் உள்ள சக சிறுவர்களை
போல தன்னை ஆணாக உணராமல் பெண் குழந்தையாக உணரும். அந்த குழந்தை படும்பாட்டை,
குழப்பத்தை உணராத
சுற்றும் அந்த குழந்தையை கேலியும் கிண்டலும் புரிந்து மனதை காயபடுத்துவர்.
அந்த சுழலில் தனுக்கு உண்டான பாலியல் மனமாற்றம் பற்றி என்ன செய்வது யாரிடும் போய் இதை
கூறுவது என்பது கூட புரியாது, தெரியாது. சொன்னால் யாரும் தன்னை தவறாக நினைத்துவிடுவார்களோ
என்று மனதிற்குள் பயந்து அழுது அந்த குழந்தை வாழும் அத்தருணம் மிக கொடுமையானது.
163 நாடுகளில் திருநங்கைகளை அங்கிகாரம் செய்துள்ளனர், இவை பெரும்பாலும் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் ஆகும்.
163 நாடுகளில் திருநங்கைகளை அங்கிகாரம் செய்துள்ளனர், இவை பெரும்பாலும் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் ஆகும்.
உடல் ஊனம்
என்றால் குழந்தை பிறந்த பின் தெரிந்து கொள்ளலாம், பாலியல் ஊனத்தை வெளிப்படையாக பெரியவர்களே
தயங்கி பேசும் போது அந்த சிறுவனால் தான் ஆண் இல்லை என்றும் பெண்மை உணர்வுகள் கொண்ட
திருநங்கை என்பதை எப்படி கூற முடியும், அப்படி கூறினால் வீட்டில் உள்ள பெற்றோர் குழந்தை
விளையாட்டாக கூறுகிறது என்று சும்மா விடுவர் இல்லையேல் அந்த குழந்தையை அடித்து துன்புறுத்தி
மாறச்சொல்லுவார்கள், எப்படி மாற்ற முடியும் தன் உள்ளே இயற்கையாக உருவான குணாதிசயங்களை சற்று சிந்தியுங்கள்... அத்தகைய தருணத்தில் செய்ய வேண்டியது என்ன...
இத்தகைய
தருணத்தில் பெற்றோர் என்ன செய்யலாம்?
உடலூனம் உள்ள குழந்தை பிறந்தால் பெற்றோர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்களோ அதை போல இந்த பாலின அடையாளம் கோளாறு அல்லது பாலின அடையாள குழப்பம், பாலினம் பதட்டநிலை என்று பல்வேறு பெயர்களால் அறியப்படும் மாற்று பாலின குழந்தைகளை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். 30,000 ஆண்களில் ஒருவருக்கு இந்த பாலின கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- பொதுவாக பெற்றோர்களுக்கு திருநங்கை குழந்தை பற்றி போதிய அறிவின்மை மற்றும் தெளிவின்மையே இதற்கு முக்கிய காரணம்.
- தங்கள் குழந்தை எத்தகைய மனநிலைமை கொண்டு இருக்கிறது என்பதை பெற்றோர் முதலில் தெரிந்துக்கொள்ளவேண்டும். தங்கள் குழந்தையை பற்றி நன்கு புரிதல் வேண்டும்.
- 13 அல்லது பருவ வயது சிறுவன் பெண்களை போல செயல்கள், நடவடிக்கை கொண்டு இருந்தால் அந்த குழந்தையை துன்புறுத்தாமல் பயமுறுத்தாமல் அவனுடைய நடவடிக்கைகளை சற்று கூர்ந்து கண்காணிக்க வேண்டும். அக்குழந்தையின் செயல்கள் இயற்கையாக உள்ளதா என்று ஆராய்ந்து பார்க்கவும்.
- அந்த குழந்தையிடம் மனம்விட்டு பேசவும்.
- தோழமையுடன் பழகவும்.
- பெற்றோர்கள் ஆதரவாக இருப்பதை அந்த குழந்தைக்கு உறுதிபடுத்தவும்.
- மனநல மருத்துவர், பாலியல் மருத்துவரிடம் தங்கள் குழந்தையை பற்றி கலந்து ஆலோசித்து அந்த குழந்தை பாலின குறைபாடுடன் பிறந்து இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும்.
- மருத்துவர் குழந்தைக்கு பாலியல் குறைபாடு உள்ள மூன்றாம் பாலினம் என்று உறுதிப்படுத்தினால் பெற்றோர்கள் முதலில் அதை நன்கு புரிந்துக்கொண்டு தங்கள் குழந்தையை மனதார ஏற்றுக்கொள்ள முன்வரவேண்டும். இதுவும் ஒரு வகை குறைபாடு தான், ஊனம் போல.
- உங்களின் குழந்தை திருநங்கை என்று நீங்கள் அறிந்தால் தயவு செய்து மனதார ஏற்றுக்கொள்ளுங்கள், புறக்கணிக்க வேண்டும். அவமானப்படும் விஷயம் இல்லை திருநங்கை. சராசரி ஆண் பெண் குழந்தைகளைவிட திருநங்கை குழந்தைகள் பல்வேறு திறமைகளை, சிறப்பு இயல்புகள் பெற்றவர்கள்.
- பெற்றோர்களே ஒன்றும் அறியாத அக்குழந்தையை துன்புறுத்தாமல், அக்குழந்தையை அவமானமாக கருதாமல் மனிதநேயத்தோடு அக்குழந்தைக்கு உறுதுணையாக இருக்க பழகுங்கள்.
- மருத்தவரின் ஆலோசனைப்படி பெற்றோர்,(திருநங்கை)சிறுவனின் விருப்படி 18 வயதிற்கு மேல் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம்.அந்த பாலியல் அறுவை சிகிச்சை முடிந்தவுடன் அச்சிறுவன் திருநங்கையாக மாறுவாள். வீட்டில் உள்ள பெற்றோர் குழந்தையின் மனநிலையை நன்கு புரிந்துகொண்ட பின் முடிவுஎடுக்கவேண்டும்.
பெற்றோர்க்கு கேள்வி ?
பெற்றோர்களே சற்று சிந்தியுங்கள்:
- பிறப்பால் பாலின கோளாறுடன் பிறந்த குழந்தை செய்த தவறு தான் என்ன?
- ஏன் அந்த குழந்தையை நீங்கள் புறக்கணிக்க வேண்டும், உங்களை விட்டால் அந்த குழந்தைக்கு ஏது போக்கிடம் என்று சிந்தித்து இருக்கிறிர்களா?
- சொந்த பெற்றோரே அந்த குழந்தையை புறக்கணித்தால் அதன் வாழ்வியல் வழி தான் என்ன?
- ஏன் அந்த குழந்தையை ஏற்க மனம் வரவில்லை?
- அந்த குழந்தையை ஏன் அவமானமாக நினைக்கவேண்டும்?
அது இயற்கையின் பிழை என்பதை புரிந்துகொள்ளுங்கள். அவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.
பெரும்பாலும் திருநங்கைகள் பெற்றோர்களால் ஒதுக்கப்படுகின்றனர். அப்படி ஒதுக்கப்பட்ட திருநங்கைகளுக்கு திருநங்கை சமூதாயம் மட்டுமே ஆதரவு தருகிறது.
1991 இல் வந்த Bombay digest மற்றும் 2009 இல் வந்த PINK PAGES மூன்றாம் பாலினத்திற்காக வந்த இதழ்கள் ஆகும்.
- பருவவயதை அடைந்தவுடன் ஆணாக இருந்தால், உங்களுக்கு பெண்கள் மேல் ஈர்ப்பு வரும். அதே (திருநங்கை) குழந்தையாக இருந்தால் பெண்ணின் மேலே ஈர்ப்பு இல்லாமல் சக ஆண்கள் மேலே ஈர்ப்பு வரும். உங்களுக்கு அத்தகைய சக பாலினர் மீது ஈர்ப்பு இருந்தால், இது இயற்கையின் நிகழ்வு.
- உங்களுக்கு பெண்களை போல ஒப்பனை செய்ய ஆர்வம் இருக்கும். பெண்களின் செயல்கள் அனைத்தும் செய்ய தானாகவே விருப்பம் மனதில் தோன்றும். நீங்கள் உங்களை பெண்ணாக உணருவீர்கள். உங்களுக்கு ஆணுடலும் மனது பெண்மையும் கொண்டது.
- இது ஒரு உடலியல் குறைபாடே, அவமான செயல் இல்லை என்பதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்.
- உங்களின் மனதை திடப்படுத்தி கொள்ளுங்கள், தைரியிமாக இருக்கவும்.
- உங்களின் வாழ்கையை நினைத்து கவலை கொள்ளவேண்டாம். பிறந்து விட்டோம் வாழ்ந்து விடுவோம் என்று நினைக்கவும். தன்னம்பிக்கையை வளர்க்கவும். வாழ வழியுண்டு மனமுடைய வேண்டாம்.
- உங்கள் வீட்டில் யார் அதிகமான அன்புடன் இருப்பார்களோ, அவர்களிடம் தயங்காமல் உங்களின் மனதில் உள்ள விஷயங்களை கூறவும்.
- மனம் விட்டு உங்களின் உணர்வுகளை வெளிப்படையாக கூறவும். கூச்சமோ தயக்கமோ பயமோ வேண்டாம்.
- வீட்டில் உள்ள பெரியவர்களிடம் முறைப்படி கலந்து ஆலோசித்து, அவர்களின் சம்மதம் பெற்று மருத்துவரிடம் தகுந்த அறிவுரையின் பெயரில் தனக்கு விருப்பம் இருந்தால் பாலின மாற்று சிகிச்சை செய்துக்கொள்ளலாம்.
வரும் சனிக்கிழமை...
சமூக விழிப்புணர்வு தொடரும்....
சமூக விழிப்புணர்வு தொடரும்....
அன்புடன்
ஆயிஷா பாரூக்
மூன்றாம் பாலினம் என்னும் மூடத்தனம் என்று ஒரு சில முஸ்லிம்கள் முட்டாள்களாக எழுதியதைப் படித்திருக்கிறேன், நீங்களும் ஒரு முஸ்லிம் திருநங்கையர் பற்றி சிறப்பாக எழுதியுள்ளீர்கள், பாராட்டுகள்
ReplyDeleteஎல்லா மதத்திலும் முட்டாள்களும் அறிவாளிகளும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கிறார்கள். ஒவ்வொரு மதத்திற்கும் மனிதனுடைய வாழ்கையை பற்றி வேறு வேறு கண்ணோட்டங்கள் உள்ளன, மதங்களை மனிதன் உருவாகினான், இறைவன் பூமியில் அணைத்து உயிர்களையும் உருவாகினான், ஏன் மனிதனை தவிர மற்ற உயிர்கள் தங்களை இந்த மதம், இந்த ஜாதி என்று கூறுகிறதா? ஆகையால் மதங்கள் மனிதனுக்கு அடையாளம் மட்டுமே, அவனுடைய எண்ணங்களையும் கருத்தையும் அதனுள் திணித்து அதற்கு ஒத்துவரும் மக்களை குழுவாக ஏற்படுத்தி பல மதங்களை உருவாகினான். எனக்கு மதங்களின் கண்ணோட்டத்தில் ஆர்வம் இல்லை, இறைவன் ஒருவன் மட்டுமே..நாம் செய்யும் நல்லது கெட்டது பொருத்து நம் வாழ்க்கை அமையும். மதங்களை பற்றி சொல்ல எதுவும் இல்லை..
Deleteஉங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி தோழரே! உங்களின் ஆதரவு என்றும் எதிர்பார்கிறேன்.
Deleteஇறைவனின் படைப்பில் அனைவரும் ஒன்றே என்பதில் எந்த வித மாற்றம் இல்லை.திருமங்கைகள் பற்றி மிக தெளிவாகவும் அழகாகவும் விளக்கி இருக்கிறீர்கள்.பாராட்டுகள்
ReplyDeleteஆண் பெண் என்ற படைப்புகள் மட்டும்தான் இறைவன் படைப்பு என்று கூறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டிக்கிறேன்.
இறைவன் படைப்பில் அனைவரும் ஒன்றே, மனிதன் தான் மதம், ஜாதி, இனம், மொழி என்று பிரித்து தன்னை தானே அழித்துக்கொள்கிறான். உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி தோழரே! உங்களின் ஆதரவு என்றும் எதிர்பார்கிறேன்.
Deleteஆயிஷா,
ReplyDeleteமிகவும் சிறப்பான விளக்கக் கட்டுரை.
ஒரு சந்தேகம்:
தான் திருநங்கையென உணர்ந்துக் கொண்ட ஒருவர் உறுப்பு மாற்று சிகிச்சை அவசியம் செய்து கொள்ளத்தான் வேண்டுமா?
உணர்வுகள் அனைத்தும் பெண்மையாய் இருக்கையில் உறுப்பு மட்டும் ஆணுக்கு போல் இருப்பதால் அது மன உளைச்சலை ஏற்படுத்தும் காரணமா?
பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்வது அவரவர் விருப்பம்,அவரின் மனநிலை சூழ்நிலையை பொருத்து, அதை யாரும் கட்டாயபடுத்த கூடாது. பெண்ணாக மாறுவதே பெரும்பாலும் ஆசை, கனவு.. பெண்னாக மாறாவிட்டால் அந்த ஏக்கம் என்றும் மனதில் இருந்துகொண்டே இருக்கும்.. உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி தோழரே! உங்களின் ஆதரவு என்றும் எதிர்பார்கிறேன்.
Deleteஅன்பின் ஆயிஷா - திரு நங்கைகள் பற்றிய பதிவு அருமை. போதுமான விளக்கங்களும் அறிவுரைகளும் நிரம்பிய பதிவு. தொடர்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஉங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி தோழரே! உங்களின் ஆதரவு என்றும் எதிர்பார்கிறேன்.
Delete//மருத்துவர் குழந்தைக்கு பாலியல் குறைபாடு உள்ள மூன்றாம் பாலினம் என்று உறுதிப்படுத்தினால் பெற்றோர்கள் முதலில் அதை நன்கு புரிந்துக்கொண்டு தங்கள் குழந்தையை மனதார ஏற்றுக்கொள்ள முன்வரவேண்டும். இதுவும் ஒரு வகை குறைபாடு தான், ஊனம் போல.//
ReplyDeleteஆண் பெண் என்ற பாலின வேறுபாட்டைப் போல் இதுவும் மூன்றாவதாக ஒரு பாலினம்தானே.. அப்படியிருக்க இதனை ஒரு குறைபாடாக எப்படிக் கருதமுடியும்?
சிறு சந்தேகம்
மூன்றாம் பாலினம் என்பது மிகச்சரியான விஷயம்.. நிறமூர்த்தங்கள் மற்றும் ஹோர்மோன்ஸ் குறைபாடினால் நிகழ்வதால் அப்படி கூற வேண்டி உள்ளது.. உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி தோழரே! உங்களின் ஆதரவு என்றும் எதிர்பார்கிறேன்.
Deleteவணக்கம் அக்கா நம் திருநங்கைகள் பற்றி அழகான விளிப்புணர்வு கட்டுரை.. வாழத்துக்கள் நாங்கள் (திருநங்கைகள்) எவரும் திருநங்கையாக வாழ விரும்புவதில்லை பெண்ணாக வாழவே விரும்புகிறோம். பெண் என்ற அங்கீகாரத்தையே கெஞ்சுகிறோம்.
ReplyDeleteஎன்னை பொறுத்த மட்டில் திருநங்கைகளை மூன்றாம் பாலினம் என்று அழைக்க நான் விரும்புவதில்லை என்னை நான் சாதாரண பெண்ணாகவே எண்ணுகிறேன். அது போல் சகல திருநங்கைகளும் திருநங்கை என்ற உலகம் தந்த வட்டத்தை விட்டு டிபண் என்ற நம் நிஜமான வட்டடத்துக்குள் வரவேண்டும் இதுவே என் விருப்பம். இது என் தனிப்பட்ட கருத்து மாத்திரமே சகோதரி....
அன்பு சகோதிரி எஸ்தர், உன்னுடைய அளவுகடந்த பாசத்திற்கும் அன்பிற்கும் நன்றி! நாம் மூன்றாம் பாலினம், திருநங்கை. பெண்னாக வாழ்பவள்! ஆனால் நாம் பெண்னாக முடியாது! ஒரே ஒரு விஷயத்தில் மட்டுமே - கருத்தரிப்பது பிரசவிப்பது! இது இயற்கையின் உண்மை. ஏற்றுகொள்ள வேண்டும் சகோதிரி!உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி தோழரே! உங்களின் ஆதரவு என்றும் எதிர்பார்கிறேன்.
Delete"மங்கையானவள் திருநங்கையானவள்
ReplyDeleteநிழலின் இருளில் சிரிப்பவள்
அன்பின் ஊற்றாய் பிறந்தவள்
வலியின் வலியை தாங்கியவள்
திறமைகளை தீர்க்கமாய் பெற்றவள்
ஆணாகி பெண்ணாகி யாதுமானவள்" arumai ungal vilipunarvu thodaratum kanmodithanamana manithargalidam manithabi manathi piraka seiyugal tholi
உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி தோழரே! உங்களின் ஆதரவு என்றும் எதிர்பார்கிறேன்.
Deleteமிகக்கொடுமையான விஷயம் இவர்களை புரிந்து கொள்ளாமல் துன்புறுத்துவது அல்லது கேலி செய்வது.நாய்,பூனை போன்ற விலங்குகளை எல்லாம் மடியில் வைத்து கொஞ்சுகிறோம்.ஆனால் குறையுடன் பிறந்த சகோதிரிகளை ஏனோ ஏற்க மறுக்கிறோம்.சிவன் பாதி சக்தி மீதி கொண்டோ சிலையை அர்த்தநாரீஸ்வரர் என்று கை கூப்பி வணங்குகிறோம்.அனும பெண்ணுமாய் இருக்கும் இவர்களை அவமானம் தான் செய்கிறோம்.எங்களுடைய "மனவளக் கலை" பல்கலை கழக சான்றிதல் கல்வியில் ஒரு திருநங்கையும் பயின்றார்கள்.அனைவரிடமும் நட்புடனும் இனிமையாகவும் பழகினார்கள். 4௦௦ பேர் உள்ள அருளரங்கில் அவள் எந்த வழியும் இன்றி மன அமைத்யுடன் இருந்தாள்.
ReplyDeleteஅன்பு சகோதிரி உமா, உங்களை போன்ற அணைத்து பெண்களும் எங்களை புரிந்துக்கொண்டு ஏற்றுக்கொண்டால் நாங்கள் மகிழ்வோம். மிருகங்களுக்கு வதைபதற்கு கூட சட்டம் உள்ளது, எங்களுக்கு இல்லை எந்த பாதுகாப்பு சட்டமும் வேலியும் இந்த சமுதாயத்தில்! சகோதிரி உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி, என்றும் உங்களின் ஆதரவை எதிர்பார்க்கும் தோழி ஆயிஷா... வாழ்க வளமுடன்!
Deleteanbulla akkavirku,
ReplyDeleteungale polave yellarume manasule thannambikkaiyoda irukkanum..... manasu thane yellathukkum kaaranam.... ungale nenacha romba santhosama irukku, yen name priya.... wish u all very best in your best future bright life....... take care
நான் மிகுந்த தன்னம்பிக்கை உடையவள், சமூகத்தை விளித்து எழுப்ப என் நங்கைகளும் தன்னம்பிக்கையுடன் வாழ வழி கூறவே இந்த கட்டுரையை எழுதுகிறேன், என்னுடைய எழுத்து ஏதவாது ஒரு நல்லது செய்யும் என்ற நம்பிக்கையுடன் எழுதுகிறேன் சகோதரி. உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி!
Delete//மூன்றாம் பாலினம் என்னும் மூடத்தனம் என்று ஒரு சில முஸ்லிம்கள் முட்டாள்களாக எழுதியதைப் படித்திருக்கிறேன், //என்னடா நம்ம கருத்து கந்தசாமி கருத்து சொல்லவில்லையே என்று நினைத்தேன். வாந்தி எடுத்துருச்சு. நண்பா க க. நேர்மை உள்ளவர் ஆசிகின் பதிவில் தானே கேள்வி கேட்கணும். அதை விட்டு இங்கு வந்து...............
ReplyDeleteஎல்லா மதத்திலும் முட்டாள்களும் அறிவாளிகளும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கிறார்கள். ஒவ்வொரு மதத்திற்கும் மனிதனுடைய வாழ்கையை பற்றி வேறு வேறு கண்ணோட்டங்கள் உள்ளன, மதங்களை மனிதன் உருவாகினான், இறைவன் பூமியில் அணைத்து உயிர்களையும் உருவாகினான், ஏன் மனிதனை தவிர மற்ற உயிர்கள் தங்களை இந்த மதம், இந்த ஜாதி என்று கூறுகிறதா? ஆகையால் மதங்கள் மனிதனுக்கு அடையாளம் மட்டுமே, அவனுடைய எண்ணங்களையும் கருத்தையும் அதனுள் திணித்து அதற்கு ஒத்துவரும் மக்களை குழுவாக ஏற்படுத்தி பல மதங்களை உருவாகினான். எனக்கு மதங்களின் கண்ணோட்டத்தில் ஆர்வம் இல்லை, இறைவன் ஒருவன் மட்டுமே..நாம் செய்யும் நல்லது கெட்டது பொருத்து நம் வாழ்க்கை அமையும். மதங்களை பற்றி சொல்ல எதுவும் இல்லை..
Deleteஉங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி தோழரே! உங்களின் ஆதரவு என்றும் எதிர்பார்கிறேன்.
Deleteஅன்பு சகோதரி ஆயிஷா,
ReplyDeleteமிகவும் சிறப்பான விளக்கக் கட்டுரை.
ஆண் பெண் என்ற படைப்புகள் மட்டும்தான் இறைவன் படைப்பு என்று கூறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டிக்கிறேன்.
அன்பின் ஆயிஷா -ஆண் பெண் என்ற படைப்புகள் மட்டும்தான் இறைவன் படைப்பு என்று கூறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டிக்கிறேன். திரு நங்கைகள் பற்றிய பதிவு அருமை. போதுமான விளக்கங்களும் அறிவுரைகளும் நிரம்பிய பதிவு. தொடர்க - நல்வாழ்த்துகள் அன்புடன் சேட்டுபெருமாள்
ReplyDeleteஉங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி தோழரே! உங்களின் ஆதரவு என்றும் எதிர்பார்கிறேன்.
Deleteபெற்றோரை நோக்கி விடப்பட்டிருக்கும் சிறந்த கேள்விகளும் நீங்கள் தந்திருக்கும் விளக்கங்களும் பாராட்டபட வேண்டும்...தொடர்ந்து உங்கள் எழுத்துக்களுகாக காத்திருக்கிறோம்.
ReplyDeleteமுதலில் பெற்றோர்கள் தங்களின் சிறப்பு பாலின குழந்தைகளை ஏற்று கொள்ள முன்வரவேண்டும், அவர்களின் ஆதரவு மிகவும் முக்கியம். உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.உங்களின் ஆதரவு என்றும் எதிர்பார்கிறேன்.
Deleteபாராட்டுக்கள் கருத்துக்கள் திருநங்கைகளின் பற்றிய உங்கள் கட்டுரை அவர்கள் படும் துயரங்களையும் எழுதுங்கள் ..
ReplyDeleteபின்வரும் தொடர்களில் காணலாம்... உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி தோழி! உங்களின் ஆதரவு என்றும் எதிர்பார்கிறேன்.
Deleteaanbu thozhli,
ReplyDeleteungaal pathivu mulaam silaa vatraai nan arigireen.....nan ungalukku uthavaa mudiyamaal irukalam ...aanal ungalukku support aagaa irukka aasaai padigureen
உங்களின் வருகைக்கும் பதிவு அளித்தமைக்கும் மிக்க நன்றி தோழரே!
Deleteவணக்கம் அக்கா.இன்று தான் இத்தொடரை முழுதாக வாசித்து முடித்தேன்.எத்தனை கனமான விடயம் இது.இதை பற்றி பேசியமைக்காக தங்களை வணங்கிப்பணிகிறேன்.
ReplyDeleteஇப்படி எழுத்துக்கள் விடுதலை பெறும் போது,அடிமைப்பட்ட சமுகங்களும் விடுதலை பெறும் சொந்தமே!!
மனம் நிறைவாக இருக்கிறது பதிவுலகில் இருப்பதை எண்ணி!
அன்பு சகோதரியின் வருகைக்கும் பதிவு படித்து கருத்து அளித்தமைக்கும் நன்றி! திருநங்கை பற்றிய புரிதல் ஏற்பட வேண்டி நான் செய்யும் சிறு முயற்சி இது.
Deleteஅருமையான சமூகத்திற்கு தேவையான தொடர். தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பதிவு அளித்தமைக்கும் மிக்க நன்றி தோழரே!
Deleteமதிப்பிற்குரிய அம்மா ஆயிஷாபாரூக் அவர்களுக்கு ..என் வணக்கம் ..முதலில் திருநங்கைகளை பற்றி எழுதியமைக்கு வாழ்த்துக்கள் .சமூகத்தில் நம்மோடு பிறந்தவர்களை ஒதுக்கி வைத்து அவர்களுக்கு ..வேறு ஒரு பெயரிட்டு ....!நம்மோடவே வைத்து இருந்தால் இப்படி சமூகம் புறக்கணிக்கும் அளவுக்கு அவர்கள் சென்று இருக்க மாட்டார்கள் ..!எத்தனை திருநங்கைகள் இருக்கிறார்களோ அத்தனை பேருக்கும் அவர்களை பத்து மாதம் பெற்ற தாய் இருக்கத்தானே செய்வாள் ...தாய்க்கு எப்படி வெறுத்து ஒதுக்க மனசு வந்தது ..?உங்களின் இம்மாதிரியான கட்டுரைகள் படிக்கும் வாசகர்களின் மனதில் திருனங்ககளை பற்றின சிந்தனைகள் மேம்படும் என்பது உறுதி ...!வாழ்க வளர்க உங்கள் பணி .வாழ்க வளமுடன் !
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் என்னுடைய கட்டுரையை படித்து கருத்துரை வழங்கியமைக்கு மிக்க நன்றி சகோ! என்னுடைய மற்ற திருநங்கை தொடர்களையும் படிக்கவும்!
DeleteThe parents should be educated regarding this hormo imbalances
ReplyDeleteஉடலால் மட்டும் மாறுபட்டு உள்ளத்தால் ஒன்றுபட்டவர்கள் திருநங்கைகள். காக்கை குருவி எங்கள் சாதி. திருநங்கைகள் மட்டும் இல்லையா? நல்ல கட்டுரை. தொடர்ந்து உங்கள் வலைக்கு வர வைக்கும் கட்டுரையும். தொடரட்டும் தோழி.
ReplyDeleteதங்களது விழிப்புணர்வு கருத்துக்கள் கட்டுரைகள் அனைத்தும் அருமை சகோதரி வளர்க உங்கள் பணி
ReplyDelete