February 14, 2013

காதலர் தினக் கவிதைகள்


 உன் காதலில் உயிர் வாழும்
ஒவ்வொரு நாளும்
எனக்கு காதலர் தினம்
தானடா பின்பு தனியாக
எதற்கு பிப்ரவரி 14 ?

♥ ஆயிஷாபாரூக் ♥


 உன் ஐந்து அடி
கவிதையாக நானிருக்க
உன்(மை) கொண்டு
பொய்(மை) எழுதுவாயோ
காதலில் பொய்மையும்
ஓரழகு தான்
மனம் காயப்படாதவரை...

♥ ஆயிஷாபாரூக் ♥




புற அழகைக் கண்டு
ஆசையுற்று வந்த
காதல் சில புணர்தலில்
மறைந்து போகும்
ஈர்ப்பின் ஆயுளும் சிறிது

அக அழகைக் கண்டு
மனமுவந்து வந்த
காதல் புனர்தலின்றியும்
நிலைத்து நிற்கும்
ஈர்ப்பின் ஆயுளும் பெரிது

தற்போது உள்ள காலச்சூழ்நிலையில் சில காதல் ஜோடிகள் காதலை கொச்சைப்படுத்தும் விதமாக காதல் என்கிற போர்வையில் தங்களுடைய இச்சைகளை தனித்து விட்டு காதலும் இல்லை கத்திரிக்காயும் இல்லை என்று பிரிந்து விடுகின்றனர். இதற்கு பெயர் காதல் இல்லை பச்சையாக சொல்லப்போனால் .......................

♥ ஆயிஷாபாரூக் ♥ 

 
உன்னையே சுத்தி வரவத்தான்
உன் அன்புக்காக ஏங்குறவத்தான்
சித்தம் கலங்கி உன் நினைப்புல
செத்து செத்து புளைக்கிறவத்தான்
என் சாமி நீயே தான்
வாழ்க்கை வரம் தாறாயோ
பாவி மகள் படும்பாட்டை
ஒரு நிமிஷம் பாராயோ.....

♥ ஆயிஷாபாரூக் ♥
 



காதலுக்காகவும் காதலனுக்காகவும் உயிர் நீத்த பல திருநங்கை சகோதரிகளுக்கு இதை சமர்பிக்கிறேன். 
  காதலுக்காக ஏங்கினாள் ஒரு நங்கை
நினைத்ததுப்போல காதல் அரங்கேறியது
காதலனும் வாழ்கையில் வசந்தம் தருவானன
நினைத்து நங்கையவள் பூரித்தாள்
காதல் விலையாக மனம் இழந்தாள்
பணம் இழந்தாள் கற்பும் இழந்தாள்
காதலன் கடைசியில் சொன்னான்
நம்மை ஊர் ஏற்காது உறவும் ஏற்காது
நீ கருவுறும் பூவும் அல்ல
உன்னை மணக்க நான் மகான் அல்ல
அனைத்தும் இழந்த மங்கை உயிரும்
துறந்தால் திருநங்கை யாதலால் !

♥ ஆயிஷாபாரூக் ♥ 

3 comments:

  1. உண்மை உணர்ந்தால் உலகம் பூங்காதான் கடைசி வரிகள் நெஞ்சை தைக்கிறது இப்படியும் இருக்கிறார்களே வேதனை மிகுகிறது அந்த தோழிக்காக என் இரங்கலும் இந்த வேளையில்

    ReplyDelete
  2. சிறப்பான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  3. காதல் காலத்தின் சூழலில்
    உருவாகும் நெருப்பு!
    எட்டே இருக்கும் வரையில்
    இதமாக இருக்கும்!
    கிட்டே சென்று தொட்டாலோ
    சுட்டு வடிவாகிவிடும்!

    கவிதை அருமை தோழி.

    ReplyDelete