February 13, 2013

திருநங்கையும் காதலும்

 
திருநங்கையும் காதலும் ♥.....
என்னங்க பண்றது எத்தனையோ கஷ்டத்துலயும் கொஞ்சம் மனசுக்கு இதமா இருக்கறது இந்த காதல் தான், அழகான தென்றல் பூக்களை வருடுவது போல இந்த காதல் மனசுக்கு ஒருவித இதமான உணர்வு, ஒரு மெல்லிய இசை காதோரம் பயணிக்கும் போது எப்படி நம்மள மறந்து இசையை ரசிப்போம் அது போல தான் இந்த அழகிய உணர்வு.

திருநங்கைகளை ஆண்கள் விரும்ப முன்வந்தாலும் சில ஆண்கள் மட்டுமே உண்மையா ஆத்மார்த்தமா நேசிக்கிறாங்க, பலர் காதல் போர்வையில் ஏமாத்து வேலை தான்.. அதிகபட்சமா உடல் சுகம் வேண்டி கண்ணே மணியே அப்படின்னு கொஞ்சுறது, சிலர் பணத்துக்காக பொருளுக்காக பாசமா பேசுறது இப்படின்னு பல தினுசுல காதல் என்கிற போர்வையில் உண்மை காதலை தேடி பல திருநங்கைகள் வாழ்க்கை முழுவதையும் தொலைத்து உள்ளோம். சில பேரு காதல் ஏமாற்றம் தாங்கமுடியாம தற்கொலை செய்து கொள்ளும் அவலங்களும் கண்டு உள்ளோம். ஒட்டுமொத்த ஆண்களையும் குறை சொல்லல...

அதிகபட்சமாக திருநங்கைகள் எதிர்ப்பார்க்கறது உண்மையான அன்பை மட்டுமே.. என்ன பண்றது பாழாபோன மனசு காதலிக்க ஆசைப்படுது.. எத்தனை காதல் தோல்வி வந்தாலும் எத்தனை வயசானாலும் திருநங்கைகளில் சிலர் காதலை விடுவதாய் இல்லை.. நான் சொல்ல மாட்டேன், எங்களை காதலித்த ஆண்கள் நன்கு அறிவார்கள் எங்கள் காதலின் உண்மையும் ஆழமும் அர்பணிப்பும்…காதல் எங்களுக்கு அழகிய வலி... திருநங்கைகளுக்கு காதல் என்பது வரத்தை விட சாபமாக தான் என் கண்ணுக்கு தெரிகிறது.. இருந்தாலும் காதல் புடிச்சுருக்கு... 

♥ ஆயிஷாபாரூக் ♥

4 comments:

  1. என்ன தான் காதல் புடிச்சிருக்கு என்று சொன்னாலும், அந்த வரியில், வலிகள் ஆயிரம் உள்ளதை உணர முடிகிறது..

    ReplyDelete
  2. உண்மையான காதல் குறைந்துவிட்டது இப்போதெல்லாம் அழகிர்க்க்காகவும் ஆசைககவும்தான் பெரும்பாலானோர் காதலிக்கின்றனர்

    சிவாவின் கற்றதும் பெற்றதும்

    ReplyDelete
  3. வலிகள் நிறைந்த வார்த்தைகள்! அழுத்தமான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  4. சில ஆண்களுக்கு காதல் எனபது ஒரு விளையாட்டு.. அவர்கள் எதிர்பாலரின் மனங்களை ரணமாக்கிவிட்டு தான் செல்வார்கள்...

    ReplyDelete