September 25, 2012

மை படிந்த கை


தமிழ் தாயே வணக்கம், உனக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கம் தான் இந்த கட்டுரையின் தொடக்கம். தமிழ் என்கிற அற்புதமான மொழி, பல சிறப்புக்களை தன்னகத்தேக்கொண்டு பழமைக்கு பழமையாகவும் புதுமைக்கு புதுமையாகவும் காலத்தின் மாறுதல்களை எதிர்கொண்டு செம்மொழியாக பல நூறாண்டுகள் காலம் கடந்து பவனி வருபவள். அவளை நானும் தாலாட்ட சீராட்ட பாராட்ட விரும்பி கடல்போல பரப்பை கொண்ட அவளின் இடத்தில ஒரு சின்னஞ்சிறிய முத்தாக நானும் எனக்கு தெரிந்த வகையில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் போன்றவற்றை படைத்து அவளின் பொன்மேனியில் வாசம்கொண்ட மலர்மாலையில் ஒரு சிறிய மலராகவாவது இருக்க விரும்பி நான் எடுத்த முயற்சி தான் இந்த ஆயிஷாபாரூக் வலைத்தளம். நான் என்னை வளமைப்படுத்த இந்த தளம் எனக்கு ஒரு நல்ல வாய்பாக அமைந்துள்ளது.

என்னுடைய எழுத்து ஆக்கபூர்வமாக பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதே என் எழுத்தின் நோக்கம்.  ஒடுக்கப்பட்ட மக்களுக்காக  என் எழுத்துக்கள் ஒலிக்க வேண்டும் என்பது என் ஆசை. பெரும்பாலும் சமூக அவலங்களை முன்னிலைப்படுத்தி என் படைப்புகள் எழுதியுள்ளேன். உங்களின் அன்பான ஆதரவோடு என் எழுத்துக்கள் இன்னும் மிளிரும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனந்த விகடனில் உள்ள வளையோசை என்கிற பக்கத்தில் என்னுடைய வலைதளமும் வந்துள்ளது மகிழ்ச்சி, அதை என் அன்பு உள்ளங்களான உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி, (முன்னேறு, பிறரையும் முன்னேற்று!) நீங்கள் எனக்கு கொடுத்த ஊக்கம் என்றுமே மறக்க முடியாது, நான் தற்போது என்னுடைய நூறாவது படைப்பை நெருங்கியுள்ளேன்.

கல்வியறிவு எனக்கு தந்திட்ட என் குடும்பத்தார்க்கும், தமிழறிவு தந்த என் ஆசிரியர் அவர்களுக்கும், என்னை என்றும் ஊக்குவிக்கும் அன்பு உள்ளங்களான உங்களுக்கும் என் நன்றியை கூற கடமைப்பட்டுள்ளேன்.
நான் வலைதளத்திற்கு அறிமுகமான சமயம் என்னை ஊக்கபடுத்திய நண்பர் சதீஷ் மாஸ் அவர்கள் என்னை முதன் முதலாக அவருடைய நட்பு வட்டத்தில் அறிமுகம் செய்தார், அதன் பின் நண்பர் இக்பால் செல்வன் அறிமுகம் செய்தார் இன்று ஆனந்த விகடன் வளையோசை மூலாமாக நான் பலருக்கு அறிமுகமாகி உள்ளேன். அறிமுகம் அனைவருக்கும் தேவை தான், இல்லையென்றால் இன்று எந்த ஒரு சிறந்த கலைஞரும் வெளிச்சத்திற்கு வந்திருக்க முடியாது.

சகோதரி எஸ்தர், ராஜிபிரியா, சசிகலா, ஹேமா, அதிசயா, சரளா அக்கா ஆகியோர்க்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

ரமணி அய்யா, சென்னை பித்தன் அய்யா, மதுமதி அய்யா, சகோதரர்கள் திண்டுக்கல் தனபலான், சிட்டுக்குருவி, தளிர் அண்ணன், சீனா, வெங்கட் நாகராஜ், இரவின் புன்னகை, ராம்குமார் கோபால், செய்தாலி, நண்டு@நொரண்டு, சுவனப்ரியன், அருணா செல்வம், கோவி ஆகியோர் தங்களின் கருத்துக்களை என் வலையில் பதிந்து ஊக்கம் கொடுத்தனர் மற்றும் இங்கு வரும் நல்ல அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் என் நன்றியை அன்புடன் தெரிவிக்கிறேன்.

என்னை எழுத ஊக்குவித்த என் தாயார், என் அன்பு கணவர் பாரூக் அலி, சகோதரி காரைக்குடி சரோ, மீனாட்சி ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

வாழ்க தமிழ், வாழ்க வையகம் என்று கூறி இந்த நன்றி கட்டுரையை இனிதே முடிகின்றேன். கரை படிந்த கை கொண்ட அரசியல்வாதிகள் இல்லை நாம் மை படிந்த கை கொண்ட எழுத்தாளர்கள் நாம் என்பதில் பெருமைப்படுவோம் தோழர் தோழிகளே! எழுதுவோம், ஒன்றுபடுவோம்.

அன்புடன்
ஆயிஷாபாரூக்

13 comments:

  1. தொடர்ந்து எழுதுங்கள்... எங்களின் ஊக்கம் எப்போதும் உண்டு...

    ஆனந்த விகடனில் வந்தமைக்கும், மேன்மேலும் சிறக்கவும் வாழ்த்துக்கள்...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தனபாலன் அண்ணா, உங்களின் தொடர் அன்புக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி.. மிக்க மகிழ்ச்சி

      Delete
  2. உங்களுக்கு தமிழன்னையின்
    ஆசி பரிபூரணமாக உள்ளது
    திறனும் உள்ளது
    விடா முயற்சியும் உள்ளது
    சிகரம் தொட வேறென்ன வேண்டும்
    உச்சம் தொட மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ரமணி அய்யா, வணக்கம்... உங்களின் தொடர் அன்புக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி.. மிக்க மகிழ்ச்சி

      Delete
  3. விடாது எழுதுங்கள் அக்கா...

    மாந்தர்க்கு இழிவில்லை என காட்டுவோம்..

    தமிழ் காப்போம் தமிழ் வளர்ப்போம்...

    ReplyDelete
    Replies
    1. என் அன்பு தோழியும் சகோதரியுமான எஸ்தர்... உங்களின் தொடர் அன்புக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி.. மிக்க மகிழ்ச்சி

      Delete
  4. தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி என்றும் வாழ்த்துக்களுடன் உங்களுடன் நானும்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு நல்ல சகோதரியாய் என்னை என்றும் ஊக்கபடுத்தும் சசிகலா அவர்களின் அன்புக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி.. மிக்க மகிழ்ச்சி...

      Delete
  5. தமிழ்தாய் உங்களுக்கு தன் நல்லருள் தரட்டும்... உங்களை போன்ற நல்லுள்ளம் படைத்தோரால் தமிழ்த்தாயின் உள்ளம் குளிரட்டும்... வாழ்க தமிழ்... வளர்க ஆயிஷா அக்காவின் செம்பணி... " 'கரை படிந்த கை கொண்ட அரசியல்வாதிகள் இல்லை,
    நாம் மை படிந்த கை கொண்ட எழுத்தாளர்கள். ' என்பதில் பெருமைப்படுவோம் தோழர் தோழிகளே!! "

    ReplyDelete
    Replies
    1. என் அன்பு சகோதரியாய் என்னை என்றும் ஊக்கபடுத்தும் ராஜி அவர்களின் அன்புக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி.. மிக்க மகிழ்ச்சி...

      Delete
  6. முதல் முறையாக உங்களின் தளத்திற்கு வந்து இருக்கின்றேன் ....முழுமையாக படித்து விட்டு வருகின்றேன்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் முதல் வருகையை இனிதே அன்புடன் வரவேற்கிறேன் தோழரே!

      Delete
  7. ungalal suthamagatum intha boomi

    ReplyDelete