சேர்ந்திடும் நீர்த்துளிகள்
கடலாக மாறாலாம்
அடைந்திடும் தோல்விகள்
அனுபவ பாடமாகலாம்
துணிந்திடும் இதயம்
பயத்தை விரட்டலாம்
உடைந்த மனம்
எதையும் தாங்கலாம்
அடைந்த அவமானங்கள்
சகிப்பை வளர்க்கலாம்
காணுற்ற அலட்சியங்கள்
பொறுமையை அளிக்கலாம்
தீயக் குணங்கள்
தீமையை தரலாம்
பேராசை மனம்
பேரழிவை வழங்கலாம்
வஞ்சக எண்ணம்
அமைதியை பறிக்கலாம்
போராடும் குணம்
பலவற்றை வெல்லலாம்
தோல்விகளின் வரவு
வெற்றிகளை பெருக்கலாம்
வாழ்வின் பயணம்
உண்மையை உணர்த்தலாம்
சேர்த்திடும் சேமிப்பு
வறுமையை விரட்டலாம்
பயின்றிடும் கல்வி
காலத்திற்கும் உதவலாம்
நல்ல எண்ணங்கள்
நல்வாழ்வை கொடுக்கலாம்
எனது வரிகள்
மனமதை திறக்கலாம்
உணர்த்திடும் பொருள்
அறிவினை உயர்த்தலாம்
விரைந்திடும் செயல்
புதியப்பாதையை காட்டலாம்
இன்றைய இளைய சமுதாயம் தோல்வியை தாங்கும் மனதை இழந்து வருகிறது, தாங்கள் செய்யும் செயலில் தோல்வி அடைந்தால் உடனே அதிலிருந்து
பின்வாங்கின்றனர். முதல் முயற்சியால் வெற்றியை கண்டவர் வெகுச்சிலரே, அடுத்தடுத்த முயற்சியில் வெற்றியை கண்டவர்கள் இங்குப்பல
கோடியுண்டு, தோல்வியால் முயற்சியிலிருந்து
பின்வாங்கி விதியை குறைகூறுபவர் மூடரே! துவள வேண்டாம் அன்பர்களே! வெற்றி உங்கள் அருகில்!!!
அன்புடன்
ஆயிஷாபாரூக்
ஆயிஷாபாரூக்
அருமை ஆயிஷா ...
ReplyDeleteதோழரின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி
Deleteதோல்விகளின் வரவு
ReplyDeleteவெற்றிகளை பெருக்கலாம்
வாழ்வின் பயணம்
உண்மையை உணர்த்தலாம்
சிறந்த தன்னம்பிக்கை வரிகள்..! கவிதை மனதை கவர்ந்தது..!!
பகிர்வுக்கு நன்றி!!
தோழரின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி...
Deleteதெளிவூட்டிப் போகும்
ReplyDeleteநம்பிக்கையூட்டிப் போகும்
அருமையான கவிதை
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
நன்றி அய்யா! உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி
Deleteஒவ்வொரு வரியும் மிக நம்பிக்கை தரும் வரிகள்..பள்ளி புத்தகங்களில் வாழ்க்கைக்கு உதவாத பழம் கவிதைகளை போடுவதற்கு பதிலாக இந்த கவிதையை பள்ளி புத்தகங்களில் சேர்க்கலாம். மிக தரமான கவிதை பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி சகோ! உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி
Deleteநைஸ்
ReplyDeleteஅருமை...அருமை...
ReplyDeleteநன்றி சகோ! உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி
Deleteஉங்கள் வரிகள் எங்கள் மனதினைத் திறந்து,
ReplyDeleteவெற்றியின் வழியைக் காட்டியுள்ளுது...
வாழ்த்துகள்...
இந்த கவிதை வாழ்வின் எதார்த்தம்... இதை ஏற்றுகொண்டால்... துன்பம் என்பது மேகம் போல கலையும்... கானல் நீர் போல விலகும்...
ReplyDeleteநன்றி சகோ! உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி
Deleteஅழகான கவிதையும் அழகான ஆலோசனையுடன் கூடிய விளக்கமும்.நிச்சயமாக சிலர் இப்படியும் கூறிக் கொள்கிறார்கள்
ReplyDelete"என்னால் முடியும் நான் ஒரு வெற்றியைக் கண்டவனல்ல ஆயிரம் தோல்விகளைக் கண்டவன்"
நன்றி சகோ! உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி
Deletenalla
ReplyDeletevarikal!
நம்பிக்கை தரும் வரிகள் தொடருங்கள் சகோ.
ReplyDeleteநன்றி சகோ! உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி
Deleteசிறப்பான தன்னம்பிக்கை வரிகள்... விரும்பிப் படித்தேன்... நன்றி...
ReplyDeleteமிகசிறந்த இடுகை பாராட்டுகள்
ReplyDeleteஉங்களின் முதல் வருகையை இனிதே வரவேற்கிறேன், உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.
Deleteஇப்படி நம்பிக்கை கொடுக்க இருந்தாலே போதுமே !
ReplyDeleteஉங்களின் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி. தோழி ஹேமா....
Deleteசூப்பர் நண்பா
ReplyDeleteமன்னிக்கவும் சூப்பர் நண்பி.. ஓ கே...
Deleteஉங்களின் முதல் வருகையை இனிதே வரவேற்கிறேன், உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.
Deleteஅருமையான தன்னம்பிக்கையைத் தூண்டும் கவிதை.
ReplyDeleteபாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!
வணக்கம் அம்மா, உங்களின் முதல் வருகையை இனிதே வரவேற்கிறேன், உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.
Deleteஅருமையான கவிதை டீ....
ReplyDeleteதேங்க்ஸ் டி...எஸ்தர்!
Deleteஅன்புள்ள ஆயிஷா,
ReplyDeleteஉங்களின் பதிவுகளை இன்றைய வலைச்சரத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
இணைப்பு இதோ:
http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_12.html
வருகை தருக, ப்ளீஸ்
அம்மா, உங்களின் பகிர்வுக்கும் அறிமுகத்திற்கும் மிக்க நன்றி.. மகிழ்ச்சி..
Deleteஎனது வரிகள்
ReplyDeleteமனமதை திறக்கலாம்
அருமையான கவிதை.. பாராட்டுக்கள்..
அன்பின் ஆயிஷா ஃபாருக் - தன்னம்பிக்கைக் கவிதை - செயல்க்ளின் முடிவு என்ன என்பதனை அழகாக கவிதை ஆக்கியது நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete