August 1, 2012

தேடி வந்த வரம்


சுமதி, நேரமாச்சு இங்கே வா... பந்து விளையாடிக்திரிந்த தன் மகளை வெளியே கூட்டிச்செல்ல தயார்படுத்த அழைத்தாள் ஆனந்தி.
 
இரு மம்மி, கொஞ்சம் நேரம் இன்னும் விளையாடுறேன், இப்போ தானே ஸ்கூல் விட்டு வந்தேன்,  ப்ளீஸ் மா...  என்று கொஞ்சும் சிணுங்கள் மொழியோடு பந்தை உதைத்தபடியே அம்மாவின் கேள்விக்கு சுட்டிப்பெண் சுமதி.பதிலளித்தாள்.

அம்மு, உன்னை படிக்கச் வரச் சொல்லி கூப்பிடலடா, நாம அப்பா ஆபீஸ்லேந்து வந்தவுடனே வெளில போகப்போறோம்.. நீ அம்மாவோட வெளிலபோக வரிங்களா இல்லையா, தலைமுடியை பின்னியவாரே மறுபடியும் தன் மகளை அழைத்தாள்.  

சுமதி கால்பந்தை தூர தூக்கி போட்டுவிட்டு , அம்மாவின் அருகில் வந்தாள்...(சுட்டித்தனமாக.ஹையா ஜாலி, நீ ஹோம் வொர்க் எழுதத்தான் கூப்பிட்டுறியோனு நினைச்சேன் மம்மி! ... அம்மாவின் சீலையை கையால் நோன்டியபடியே ஆனந்தி மடியில் தலைசாய்ந்து நாம எல்லாரும் வெளில போகபோறோமா மம்மி....என்றாள். 

கூந்தலில் மல்லிகை பூ வைத்தபிறகு சுமதியை கட்டியணைத்து அம்மா உனக்கு முகம் கழுவி, பவுடர் அடிச்சு, அழகா முடிய சீவி விட்டு அப்பா வரமுன்னாடியே என்னோட குட்டியம்மாவ ரெடி பண்ணிடுவேனா...சரியா... என்று தன் மகளை கொஞ்சியவாறே பின்பக்கமுள்ள குளியலறைக்கு  அழைத்து சென்றாள் ஆனந்தி..
 
வெளியே செல்வது, ஊர் சுற்றுவது என்றால் சுமதிக்கு அதிக விருப்பம், அதனால் மிகவும் மகிழ்ச்சியாக வெளியே செல்லத்தயாரானாள்.
 
சுமதிக்கு இஷ்டமான நீல நிற பிராக் அணிவித்து சந்திரன் போல மலர்ந்திருந்த முகத்தில் அழகாக கண்மையிட்டுபவுடர் அடித்து, பிறை போல மாணிக்ககல் பொட்டு வைத்து தன் மகளை சிற்பச்சிலை போல அழகுப்படுத்தினாள். செல்லம், அழகு குட்டிடா நீ என கொஞ்சியவரே சுமதியின் கன்னத்தில் முத்தமிட்டு மகிழ்ந்தாள்...

எங்கேயும் வெளில போகக்கூடாது  அப்பா வீட்டுக்கு இப்போ வருவாரு, அது வரை இந்த போகோ சேனல பார்த்துட்டு இருங்க.. மம்மி காபி போட போறேன்... என்று கூறி முன்பில் இருந்த தொலைகாட்சியை அமிழ்த்தி தன் மகளுக்கு பிடித்த கார்ட்டூன் சேனலை மாற்றி சமையற்கட்டுக்கு விரைந்தாள்..

சுமதியின் அப்பா கணேஷ், தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக உள்ளார். மாலை ஆறு மணிக்கு வழக்கமாக வேலையை விட்டு வரும் கணேஷ் அன்று ஒரு மணி நேரம் முன்பே வந்துவிட்டார். கணேஷின் பைக் சத்தம் கேட்டவுடன், கார்ட்டூன் பார்த்து கொண்டுருந்த சுமதி வாசல் கதவு அருகில் வந்து நின்றாள்...

சுமதி குட்டி... ரெடியா இருக்கிங்க போல... கணேஷ் தன் மகளை கட்டியணைத்து வீட்டிற்குள் நுழைந்தார்.

தான் வாங்கி வந்த சாக்லேட், நொறுக்கு தீனி, பழங்கள், ரொட்டிகள் என்று ஒரு பெரிய கைப்பை நிறைய உள்ள பொருட்களை தன் மனைவியுடன் கொடுத்து சுமதிக்கு என்ன பிடிக்குமோ, அதை அவளுக்கு திங்க கொடு ஆனந்தி என்று கூறிக்கொண்டே வெளியே செல்ல தயாராக விரைந்தார்.  செல்லத்துக்கு ஸ்கூல் விட்டு வந்தோன நொறுக்கு தீனி கொடுத்துட்டேன், நீங்க சீக்கிரம் ரெடி ஆகுங்க,  காபி  டம்ளர் கையுமாக கணேஷ்  முன்பு வந்தாள் ஆனந்தி.

மூவரும் வீட்டை விட்டு வெளியே வந்தனர். பைக் ஸ்டார்ட் செய்து தன் மனைவி, குழந்தையுடன் புறப்பட்டார் கணேஷ்.

நம்ம வாழ்க்கைல வசந்த வீச காரணம் நம்ம சுமதி குட்டி தான், அவ மட்டும் இல்லேனா...பெருமூச்சு விட்டப்படி தழுத்த குரலில் பைக்கின் பின்னிருக்கையில் அமர்ந்துக்கொண்டு சொல்ல ஆனந்தியின் கண்களில் கண்ணீர் வார்த்தது. எல்லாத்துக்கும் விடிவு காலம் உண்டு, நம்ம மகள் நமக்கு கிடைச்ச அப்புறம் நம்ம வாழ்க்கையே அர்த்தம் உள்ளதா மாறிடுச்சு  அழுகாதே ஆனந்தி என சமாதனம் படுத்தினார் கணேஷ். வறண்ட பாலைவனம் போல இருந்த நம்ம வாழ்க்கைய சோலைவனம் போல மாத்தினது சுமதி தான், இதே போன வருஷம் என்னோட பேரு ஆனந்தி இல்லை மலடி, சொந்தங்கள் கூட நம்மள விலக்கி வெச்சுது. இப்போ நான் ஒரு குழந்தைக்கு தாய். அந்த பெருமை, அங்கிகாரம் கொடுத்தது சுமதி தான்.. நம்மை தேடி வந்த வரம் சுமதி, நிம்மதி, சந்தோஷம், வாழ்க்கைல நமக்கு உள்ள பிடிப்பு எல்லாம் வர நம்ம சுமதி தாங்க காரணம்.. போன ஜென்மத்துல அவ நமக்கு பிறந்து இருப்பா அதுனால தான் இந்த  ஜென்மத்துலயும் நம்ம மகளா நம்ம கூட சேர்ந்திட்டாள் என்று ஆனந்தியின் பேச்சை கேட்டு கணேஷ் கண்களிலும் கண்ணீர் வார்த்தது..  

எல்லாம் நல்ல நேரம் தான் ஆனந்தி, சுமதி வந்த நேரம் நமக்கு நல்ல மகிழ்ச்சி கொடுத்திருக்காள் என இருவரின் உரையாடல் முடிய தெரேசா ஹோம் வந்தது. ஹோமில் உள்ள மதர் சுப்பீரியர் கணேஷ், ஆனந்தி, சுமதி ஆகியோரை வரவேற்றார். மதர் நலம் விசாரித்த பிறகு,  மதரிடம் எங்க சுமத்திய நீங்க தான் கொடுத்திங்க, அதுக்கு நானும் என்னோட மனைவியும் என்ன கைமாறு செய்ய போறோம்னு தெரியல... இந்த கூடை நிறைய ஸ்வீட்ஸ், ஸ்நாக்ஸ் எல்லாம் இங்க இருக்குற எல்லா குழந்தைக்கும் கொடுங்க என கணேஷ் கூற ஆனந்தி கையில் உள்ள கூடையை மதரிடம் கொடுத்தாள். 

சுமதி, மை சைல்ட் எப்படி இருக்கீங்க என்று கூறி கன்னத்தில் முத்தமிட்டு தன் அன்பை வெளிப்படுத்தினார் மதர். சுமதியே அவ பிரிண்ட்ஸ் எல்லாருக்கும் ஸ்வீட்ஸ் கொடுக்கட்டும்... என்று தன் அருகில் இருந்த சிஸ்டரிடம் சுமதியையும் ஆனந்தியையும் உள்ளே அழைத்து செல்ல கூறினார்.

ஹொவ் இஸ் சுமதி என்று மதர் கணேஷிடம் கேட்க மிகுந்த மகிழ்ச்சியோடு எங்ககூட ரொம்ப சந்தோஷமா இருக்கா, அவள நாங்க பத்திரமா பார்த்துக்கிறோம், என்று கூறி சட்டை பையில் இருந்து ஐம்பது ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை மதரிடம் ஹோமின் நன்கொடைக்கு கொடுத்தார். காட்! பிளஸ் மை சைல்ட் என்று கூறி அந்த காசோலையை புன்னகைத்து மதர் பெற்றுக்கொண்டார்.

பெற்றால் தான் குழந்தையா, எனக்கு இங்க இருக்குற எல்லா குழந்தைகளும் என் குழந்தைங்க தான்.. நாம எல்லோரும் இறைவனோட குழந்தைங்க. பாவம், இந்த குழந்தைங்க எல்லாம் ஆதரவற்ற பிள்ளைங்க.. அவங்க பெற்றோர் யாருனே அவங்களுக்கு தெரியாது, இப்போ நீங்க தான் சட்டப்படி சுமதிக்கு பெற்றோர், உங்கள மாறி நல்ல உள்ளங்கள் கொடுக்குற நிதியில் தான் நாங்க இந்த குழந்தைகளுக்கு நல்ல கல்வி, உடை, உணவு எல்லாம் கொடுக்குறோம் கணேஷ் வியாபாரமா இல்லாமல் கர்த்தருக்கு சேவையா இத செய்றோம், ப்ள்ஸ் தி லார்ட் என்று கூறி வெளியே வந்தனர். 

சுமதியும், ஆனந்தியும் மகிழ்ச்சியுடன் வெளியே வர, அப்பா....என்னோட பிரிண்ட்ஸ் மது, பாலா, நீலா எல்லாரையும் பார்த்தேன் பா என்று கணேஷை கட்டி பிடித்து..  நாங்க சாக்லேட் சாபிட்டோம்..விளையாடினோம் என மழலை மொழியில் அப்பாவிடம் நடந்த அனைத்தையும் ஒப்பிவித்தாள், மதரிடம் விடை பெற்று வெளியே வந்தனர், மகிழ்ச்சியுடன் மதரும் வழி அனுப்பி வைத்தார்.

ஏங்க... மூணு வருஷம் கழிச்சு எனக்கு ஒரு குட்டி பையன் வேணும்...என்று கணேஷிடம் ஆனந்தி கூற...நோ ப்ராப்ளம்... ஹோம்ல வந்து ஒரு குட்டி பையன எடுத்துகிட்டா போச்சு ஆனந்தி.. சிரித்தவாரே கணேஷ் பைக்க ஸ்டார்ட் செய்தார். 

(சுபம்)
--ஆயிஷாபாரூக்-- 

14 comments:

  1. ஏங்க... மூணு வருஷம் கழிச்சு எனக்கு ஒரு குட்டி பையன் வேணும்...என்று கணேஷிடம் ஆனந்தி கூற...நோ ப்ராப்ளம்... ஹோம்ல வந்து ஒரு குட்டி பையன எடுத்துகிட்டா போச்சு ஆனந்தி.. சிரித்தவாரே கணேஷ் பைக்க ஸ்டார்ட் செய்தார்.//

    இந்த மன நிலை அனைவருக்கும்வந்தால்
    உலகில் அனாதைகள் என்று நிச்சயம் யாரும்
    இருக்க வழியில்லையே
    மனம் தொட்ட கதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இயல்பான நடையில் சழூக சிந்தனை விளக்கிச் செல்லும் வரிகள் அருமை சகோ.

    ReplyDelete
    Replies
    1. குழந்தை தத்து எடுப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த தான் இந்த சிறுகதையை எழுதினேன். அதற்கு நல்ல விமர்சனமும், மிகுதியான ஆதரவு கண்டதில் மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்து பதிவிற்கு சிறுகதை படித்தமைக்கு மிக்க நன்றி!

      Delete
  3. சிறப்பான சிறுகதை! அருமை! பகிர்வுக்கு நன்றி!

    இன்று என் தளத்தில் வெற்றி உன் பக்கம்! தன்னம்பிக்கை கவிதை! http:// thalirssb.blogspot.in

    ReplyDelete
  4. சிறந்த கருத்து... சிந்தனைதனை ஓடவிட்டு, தத்து எடுத்த குழந்தையினை தரமாக வளர்க்கும் கணேஷ் - ஆனந்தி தம்பதியினரின் குடும்பத்தில் நடக்கும் ஒரு சிறிய நிகழ்வினை.. சிறப்பாக .. பேச்சு வழக்கு இயல்புடன் அமைத்து எழுதிய நடை சிறப்பு. ஒரு முகமதிய பெண் எழுத்தாளர் .. இந்து மத குடும்பத்தில் நடந்த ஒரு நிகழ்வு.. தத்து எடுத்த குழந்தையோ.. ஒரு கிருத்துவ குழந்தை காப்பகத்தில் இருந்து.... அருமை.. அருமை... பாராட்டுக்கள் எழுத்தாளர் ஆயிஷாவிற்கு.

    அன்புடன்..
    ஆர். ஏ. பாண்டியன் /புது டில்லி

    ReplyDelete
    Replies
    1. குழந்தை தத்து எடுப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த தான் இந்த சிறுகதையை எழுதினேன். அதற்கு நல்ல விமர்சனமும், மிகுதியான ஆதரவு கண்டதில் மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்து பதிவிற்கு சிறுகதை படித்தமைக்கு மிக்க நன்றி!

      Delete
  5. நம்ம வாழ்க்கைல வசந்த வீச காரணம் நம்ம சுமதி

    நம்ம மகள் நமக்கு கிடைச்சஅப்புறம் நம்ம வாழ்க்கையே அர்த்தம் உள்ளதா மாறிடுச்சு

    நம்ம வாழ்க்கைய சோலைவனம் போல மாத்தினது சுமதி தான், இதே போன வருஷம்என்னோட பேரு ஆனந்தி இல்லை மலடி
    இந்த வரிகல் மூலம் குலந்தைகல் அனதை இல்லை கனவன் மனைவிக்கு குல்லந்தை இல்லை என்ரால் அவர்கல்தான் அனாதை குழந்தைதான் வாழ்கை

    உன்மையாக குழ்ந்தை இல்லாதவர்கல் தத்து எடுபதால் இந்தகுழந்தயின் நிலை மாரும்
    ஆனால் குலொனிங் என்ரமுரையெய் கன்டுபிடித்து இதர்க்கு ஒரு முட்ரு புல்லி வைத்துவிட்டார்கல்

    ReplyDelete
    Replies
    1. குழந்தை தத்து எடுப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த தான் இந்த சிறுகதையை எழுதினேன். அதற்கு நல்ல விமர்சனமும், மிகுதியான ஆதரவு கண்டதில் மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்து பதிவிற்கு சிறுகதை படித்தமைக்கு மிக்க நன்றி!

      Delete
  6. Thanks for reading and comments.. :)

    ReplyDelete