உன் காதல் அடையாளமாக நீ
கொடுத்த ரோஜா மலர் வாடினாலும்
வாடாத மலராக என் மணமுள்ளது
உன் காதலை சுமந்துகொண்டு!
----***----
வாசமுள்ள மலருக்கு
என் மேல் கோபம்
வாசமில்லா மலரான
என் மீதுள்ள உன் காதலால்!
----***----
ரோஜாவே! நீயே அழகித்தான்
ஆனால் என்னவள் வெட்கத்தின்
முன் உன் அழகும் தோற்றது
----***----
முள்ளில்லா ரோஜாவும்
கட்டுபாடுயில்லா பெண்ணும்
பாதுகாப்பற்றது!
----***----
உன்னை சுற்றிய வண்டும்
என்னை சுற்றிய காதலனும்
இல்லையென்றால்
நாம் பூத்தது வீண்!
----***----
மகிழ்ச்சியான மஞ்சள்நிற ரோஜா
மென்மையான இளஞ்சிவப்புநிற ரோஜா
உண்மையான வெள்ளைநிற ரோஜா
பெருமையான ஆரஞ்சுநிற ரோஜா
கௌரவமான லாவெண்டர்நிற ரோஜா
உயிர் காதலுக்கு சிவப்பு ரோஜா
இத்தனை ரோஜா நீ கொடுத்தாலும்
என் ராஜா உன் அன்பின்முன்னால்
எல்லாம் மனமிழந்து போகிறது
மனம் கவர்ந்தவனின் அருகில் உள்ளபோது!
----***----
ஆயிஷாபாரூக்
முள்ளில்லா ரோஜாவும்
ReplyDeleteகட்டுபாடுயில்லா பெண்ணும்
பாதுகாப்பற்றது!//
அழகான அருமையான சிந்தனை
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்
உங்களின் கருத்தின் பதிவிற்கு மிக்க நன்றி! மகிழ்ச்சி!
Deleteமுள்ளில்லா ரோஜாவும்
ReplyDeleteகட்டுபாடுயில்லா பெண்ணும்
பாதுகாப்பற்றது!
உண்மையில் அருமையான வரிகள் !!!
உங்களின் கருத்தின் பதிவிற்கு மிக்க நன்றி! மகிழ்ச்சி!
Deleteஎல்லாம் மனமிழந்து போகிறது. அழகு சகோ.
ReplyDeleteதோழி, உங்களின் கருத்து பதிவிற்கு மிக்க நன்றி
Deleteஅருமையான கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள் தோழி.
உங்களின் கருத்து பதிவிற்கு மிக்க நன்றி
Delete