August 26, 2012

வேண்டாம் தூக்குகயிறு
இறைவன் படைத்த உயிரை எடுக்க எந்த மனிதருக்கும் உரிமை கிடையாது. ஆனால் இங்கு மனிதன் மனிதனையே அழிக்கிறான். மனிதனே மனிதனுக்கு எதிராக குற்றங்களை விளைவிக்கிறான்.மனிதன் செய்யும் குற்ற செயல்களை கட்டுப்படுத்த மனிதனே வகுத்தது தான் விதிகளும், தண்டனைகளும். மரண தண்டனைகள் மூலமாக சமூகத்தில் குற்றங்கள் குறைக்கப்படும் என்றால் ஏன் குற்றங்கள்  அதிகரித்தக்கொண்டே வருகிறதுகாந்திய கொள்கையான அஹிம்சா வழியை கடைபிடிக்கும் இந்தியாவில் மரண தண்டனை நீக்கப்பட வேண்டும் என்பது பல கோடி இந்தியர்களின் விருப்பம். உலகில் தற்போது ஐம்பத்தி எட்டு நாடுகள் மரண தண்டனையை சட்டப்படி தண்டனையாக வைத்துள்ளது. தொனுற்றி ஏழு நாடுகள் மரணதண்டனையை நீக்கிவிட்டன. பல நாடுகளில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்ட நிலையிலும், மிகுதியான மக்கள் தொகை கொண்ட நாடுகளான மக்கள் சீன குடியரசு, இந்தியா, அமெரிக்கா மற்றும் இந்தோனேஷியா நாடுகளில் மரண தண்டனை செயலில் உள்ளது. 

அரிதான நிகழ்வுகளில் மிக அரிதாக மட்டுமே மரணதண்டனை வழங்கிட வேண்டும் என்று 1983 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இந்தியாவில் மரண தண்டனை தூக்கில் இட்டு கொல்வது மூலம் நிறைவேற்றப்படுகிறது. ஏப்ரல் 27, 1995 ஆட்டோ சங்கர்  சேலம், தமிழ்நாடு மாநிலத்தில் தூக்கிலிடப்பட்ட பின்பு 1990 ல் ஒரு பள்ளி மாணவியை கற்பழிப்பு செய்து கொலை செய்த குற்றத்திற்காக தனன்ஜாய் சாட்டர்ஜி, என்பவருக்கு ஆகஸ்ட் 2004 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதன் பிறகு இன்று வரை மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் யாருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை.

இந்திய சட்டத்தின் கீழ், மரண தண்டனை கீழ் வரும் நிகழ்வில் உள்ள குற்ற செயல்களுக்கு விதிக்கப்படுகிறது:-
  • கொலை.
  • கொள்ளையுடன் சேர்த்து கொலை.
  • ஒரு குழந்தை அல்லது மனநலம் பதித்த நபரின் தற்கொலைக்கு உடந்தையாக செயல்பட்டது.
  • அரசாங்கத்திற்கு எதிராக போர் தொடுத்தது.
  • ஆயுத படைகளின் உறுப்பினராக இருந்து கலகத்திற்கு உடந்தையாக இருந்தது.
  • தற்போது பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது மரணதண்டனை விதிக்கபடுகிறது. 
நான்கு வகையான நபர்கள் மரணதண்டனையிலுருந்து விலக்க உட்பட்டவர்கள்.
  • 15 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகள் 
  • கர்ப்பிணி பெண்கள்,
  • மனநல நோயாளிகள்
  • 70 வயது கடந்தவர்கள். 
மரணதண்டனை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடுகள் செய்தப்பிறகு நிராகரிக்கப்பட்ட நிலையிலும் ஜனாதிபதியிடம் தண்டனை விலக்க கோரி கருணை மனு அளிக்கலாம். அவரின் முடிவே இறுதியானது. இந்திய ஜனாதிபதியாக இருந்த பிரதீபா பாட்டீல் தனது ஐந்து ஆண்டு பதவி கால இறுதியில் அதாவது ஜூன் 2012, முப்பத்தி ஐந்து மரணதண்டனை கைதிகளை ஆயுள் தண்டனையாக மாற்றியமைத்தார். வீரப்பன் வழக்கு, ராஜீவ் காந்தி கொலை வழக்கு, மும்பை தாக்குதல், டெல்லி நாடாளுமன்றம் தாக்குதல் என்று இதில் ஈடுபட்ட குற்றவாளிகளின் முடிவுகள் உட்பட இருபத்தி ஆறு கருணை மனுக்கள் இந்திய ஜானதிபதி அவர்களின் கருணைக்காக நிலுவையில் உள்ளது.

இந்திய குற்றவியல் நடைமுறை சட்ட படி பல்வேறு குற்றங்கள் எட்டு பிரிவுகள் (121, 132, 194, 302, 303, 305, 307, மற்றும் 396) கீழ் மரணதண்டனை அங்கீகரிக்கிறது.

அடிப்படை மனித உரிமையான "மனிதன் வாழும் உரிமையை" பறிப்பதாகும்.  தூக்கு தண்டனை மூலம் குற்றவாளிகள் தங்களின் தவறை உணர வாய்ப்பு இல்லை. தண்டனை நிறைவேற்றப்படும் காலம் வரை வருந்தி அதை உணர்ந்து திருந்தி வாழவும் வாய்ப்பு கிடைக்காது. மேலும் அந்த குற்றத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இவர்களின் மரணத்தால் இந்த பயனும் கிடையாது. குற்றவாளிகளின் உறவுகளுக்கும் இவர்களின் இழப்பு பாதிக்கும். மரணம் என்பது குற்றவாளிகளின் தவறிலிருந்து விரைவாக தப்பிக்க வைக்கக்கூடும். ஆயுள் தண்டனை மூலம் தங்களின் தவறை உணர்ந்து குற்றவாளிகள் திருந்தி வாழ வாய்ப்பு உள்ளது. மரணத்தை விட கொடியது ஒருவர் சிறையில் தனிமையில் பல காலம் தண்டனை அனுபவிப்பது என்பது என் கருத்து. மரணதண்டனை ஆயுள் தண்டனையாக மாற வேண்டும் என்பது என்னை போன்ற பலரின் விருப்பம்.
 
அன்புடன்
ஆயிஷாபாரூக்