July 29, 2012

உன்னை நீயே கொல்லாதே...









போராளே, போராளே
போற வழி திரும்பாம
போகும் நேரம் வரும்முன்னே
பொறுமையின்றி போராளே
பட்ட கஷ்டம் கொஞ்சமல்ல
பார்த்திறாத துன்பமில்லை
மனசுக்குள்ள புழுங்கிச்செத்து
அழுதுதீர்த்த நாளுமில்ல
எந்த கஷ்டமும்  வேணாமுன்னு
மண்ணைவிட்டு போவதென்ன
வாழவழித் தேடி
வாழாமல் போனதென்ன
வேண்டாமடி செல்லக்கிளி
சொல்லுறத நீ கேளு
விட்டுவிடு உன் முடிவ
நீயே உன்னை கொல்லுவத
சாகவழி உள்ளபோதும் 
வாழவழி நூறு உண்டு
சோதனைகள் இல்லாம
பூமியில்ல யாருமில்ல
விட்டுவிடு சோகத்தை
துணிந்துவிடு எதுவும் எதிர்கொள்ள
போராடி வென்றுவிடு
வரலாறு நீ எழுது
வாழ்ந்து பாப்போம் வாடி பெண்ணே 

வாழ்க்கை என்பது போராட்டம் தான், ஆனால் ஒரு திருநங்கைக்கு சராசரி ஆண், பெண்ணை விட வாழ்க்கை பன்மடங்கு போராட்டமாக உள்ளது. அவமான சொற்கள், வீட்டிலும் வெளியிலும்  புறக்கணிப்பு, ஒடுக்குமுறை, ஏளனம், கேலி, கிண்டல், சமஉரிமை இல்லாமை,காதல் தோல்வி என்று பல ஏவுகணைகள் திருநங்கைகளை
மனச்சிதைவு, மனஅழுத்தம், கவலை என்று ஏற்படுத்தி கடைசியில் பல திருநங்கைகள் இதில் இருந்து தப்பிக்க தற்கொலையை நாடி செல்கிறார்கள். திருநங்கைகளின் தற்கொலையை தடுக்க அவர்களை அன்புடன் சமமாக அனைவரும் அங்கீகரிக்க வேண்டும் மனித சமுதாயம்.  நீங்கள் ஒருமுறை திருநங்கையை கூறிய ஒரு அவமான சொல் அல்லது புறக்கணிப்பு கூட ஒரு திருநங்கையின் தற்கொலைக்கு காரணமாக இருக்காலம்.. சிந்திப்பீர் தோழர் தோழிகளே!
அன்புடன் ஆயிஷாபாரூக்

10 comments:

  1. உண்மைதான்! சிந்திக்க வேண்டியதுடன் கடைபிடிக்க வேண்டியதும் கூட!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்து பதிவிற்கு மிக்க நன்றி! மகிழ்ச்சி!

      Delete
  2. வேண்டாமடி செல்லக்கிளி
    சொல்லுறத நீ கேளு
    விட்டுவிடு உன் முடிவ
    நீயே உன்னை கொல்லுவத
    சாகவழி உள்ளபோதும்
    வாழவழி நூறு உண்டு /

    வாழாமல் போனதென்ன
    வேண்டாமடி செல்லக்கிளி
    சொல்லுறத நீ கேளு
    விட்டுவிடு உன் முடிவ
    நீயே உன்னை கொல்லுவத
    சாகவழி உள்ளபோதும்
    வாழவழி நூறு உண்டு

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்து பதிவிற்கு மிக்க நன்றி! மகிழ்ச்சி!

      Delete
  3. சோதனைகள் இல்லாம
    பூமியில்ல யாருமில்ல
    விட்டுவிடு சோகத்தை
    துணிந்துவிடு எதுவும் எதிர்கொள்ள
    போராடி வென்றுவிடு ............
    இந்த வரிகளுக்குமேலாக எதையும் சொல்லமுடியாது
    உறவுகளை தேற்ற ...........
    ஒவ்வொருவரும் உணர்ந்து மாறிக்கொள்ளவேண்டியது மனிதம் வாழும் சமுதாயத்தின் தேவையாகும்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்து பதிவிற்கு மிக்க நன்றி! மகிழ்ச்சி!

      Delete
  4. பெண்களிடமிருந்து திருநங்கைகளை பிரித்து பார்ப்பது எனக்கு பிடிக்காது திருநங்கைகளும் பெண்கள்தானே....

    அருமையான கவி

    ReplyDelete
    Replies
    1. கர்ப்பம் அடைதலில் பெண்மை நம்மை விட மாறுப்படுகிறது. மற்றபடி நாமும் பெண்களே!

      Delete
  5. " வாழ்க்கை என்பது போராட்டம் தான், ஆனால் ஒரு திருநங்கைக்கு சராசரி ஆண், பெண்ணை விட வாழ்க்கை பன்மடங்கு போராட்டமாக உள்ளது. "

    உண்மை தான்

    " திருநங்கைகளின் தற்கொலையை தடுக்க அவர்களை அன்புடன் சமமாக அனைவரும் அங்கீகரிக்க வேண்டும் மனித சமுதாயம்.. "

    சில திருநங்கையர் புரியும் அசிங்கமான செயல்களால் எல்லோரையும் முக சுளிக்கவும் திருனங்கையரை கேவலமாக பார்க்கும் சூழ் நிலையம் உள்ளது .

    முதலில் திருநங்கையர் அசிங்கமாக நடந்துகொள்ளும் முறை மாற்றபட்டால் ,அவர்கள் மேல் மரியாதை தன்னால் வரும் என்பது என் கருத்து சகோதரி .

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்துக்கு நன்றி! அசிங்கங்கள் எங்கும் உள்ளது.. அது ஆண்களிடத்தும், பெண்களிடத்தும், திருநங்கைளிடத்தும் உள்ளது. ஒரு சிலரின் செயலால் அணைத்து தரப்பு திருநங்கைகளை குறை சொல்ல வேண்டாம். அதற்காக சிலர் புரியும் அநாகரிக செயல்களுக்கு நான் அதரவு கொடுக்கவில்லை.. முடிந்தவரை மாற்றம் செய்யலாம்.

      Delete