திருநங்கைகளும் ஊடகங்களும்
அன்புடையீர் வணக்கம்,
நல்ல ஒரு துவக்கம் நல்ல பயன்களை தரும்
என்கிற கூற்றுக்கு ஏற்ப நம்முடைய "திருநங்கை - விழிப்புணர்வு" நல்ல துவக்கத்தில் தொடங்கி வெற்றியுடன் பயணிக்கிறது. கடந்த மூன்று தொடர்களில் நீங்கள் கொடுத்த ஆதரவிற்கும் நன்றி என்கிற ஒற்றை சொல் சுருக்கி கூறி முடித்துவிடமுடியாது.
திருநங்கைகளை சமமாக மதிக்கும் உங்களை போன்ற மனிதநேயமுள்ள உள்ளங்கள் உலகத்தில் இருப்பதால் தான் இந்த பூமியில் ஈரம் வற்றமால்
அனைவருக்கும் மழையாக பொழிந்து உலகை நிலை பெறச்செய்கிறது.
மனிதனும் ஊடகமும்
மனிதன் பிறந்தது முதல் அவனுடன் பயணித்த
பல நிலைகளில் ஒன்றுத்தான்
தொடர்புகள். ஒருவரை ஒருவர் உலகில் தொடர்புக்கொள்ள
பல வழிகள் காலந்தொட்டே இருந்து வருகிறது. பண்டைய காலத்தில் புறாக்கள் மூலம் தொடர்புக்கொள்ள ஆரம்பித்து நவீன யுகமான தற்பொழுது இணையத்தளம் வரை மனித தொடர்புகள் தொடர்ந்து முன்னேறி போய்க் கொண்டுறிக்கிறது.
இத்தகைய தொடர்புகளில் ஊடகத்தின் பங்கும் பாதிப்பும் அதன் தாக்கமும் மக்களிடையே அளவிடமுடியாது.
ஊடகம் பல நல்ல நிகழ்வுகளையும் தீய நிகழ்வுகளையும் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த தவறியதில்லை. பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையம் என்று பல்வேறு வடிவங்களில் மக்களிடையே ஒரு தொடர்பு
கருவியாக ஊடுருவும் ஊடகங்கள் காலப்போக்கில் மக்களின் பழக்கவழக்கங்கள், குணாதிசயம், பண்பாடு, கலாச்சாரம் போன்றவையை மாற்றக்கூடிய சக்தியாகவும் விளங்கியது. திருநங்கைகள் மீது ஊடகங்களின் தாக்கம் பெரும்பாலும் நேர்மறை மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு காரணியாகவே அமைந்துள்ளது.
திருநங்கை புரிதலில் ஊடகங்களின் பங்களிப்பு
மேற்கத்திய நாடுகளில் ஊடகங்கள் மாற்றுபாலின
புரிதலை மக்களிடையே எடுத்துச்சென்று பெரிய மாறுதல்களை உருவாக்கியது. மேற்கத்திய நாடுகளின்
பாலியல் புரிதல் வளம்பெறத் தொடங்கியதும் மாற்றுப் பாலினருக்கான அங்கீகாரமும் துளிர்விடத்
தொடங்கியது.பெரும்பாலும் பத்திரிக்கை ஊடகங்களில் திருநங்கைகளை பற்றி மக்களிடையே புரிதலுக்கான
முயற்சியை மற்ற ஊடகங்களை காட்டிலும் அதிகபடியான பங்கை பத்திரிக்கை மேற்கொண்டு வருகிறது. திருநங்கைகள்
பற்றிய செய்திகளை பத்திரிகையில் வெளியிடுவது, அதாவது
திருநங்கைகளின் கூட்டமைப்பின் செயல்பாடுகள், பேரணிகள், திருவிழாக்கள், அழகிப்போட்டிகள், திருநங்கைகளின் பிரச்சனைகள்
போன்றவைகளை தாங்கிய நிகழ்வுகள் அவ்வப்போது பத்திரிகையில் காணமுடிக்கிறது. வானொலியில் திருநங்கைகள் பற்றிய
நிகழ்சிகளின் பங்கு மிகவும் குறைந்த அளவிலே உள்ளது.
தமிழ் திரைப்படங்களில் திருநங்கைகளின் அவல நிலை
தமிழில் வெளிவந்த பல திரைப்படங்கள்
திருநங்கைகளை கேலிக்கான காட்சியாக மட்டுமே பயன்படுத்தி எங்களின் உணர்வுகளை
காயப்படுத்தி அன்றுத்தொட்டு தன் கடமையாக சிறப்பாக செய்து வருகிறது. மீசை மழித்து முரட்டு ஆண்களை திருநங்கைகள்
போல வேடமிட்டு நடிக்கவைத்து திருநங்கைகளை தோற்றத்தில் கூட அவமானம் படுத்திய இயக்குனர்கள்
பலர் உண்டு. நகைச்சுவை என்கிற போர்வையில் அவமான பேச்சுக்கள், இரட்டை அர்த்த ஆபாச வசனங்கள், பாலியல் ரீதியான காட்சி அமைப்புகள் என்று திருநங்கைகளை
திரைப்படங்கள் அலங்கோலம் படுத்தின.
பல
திரைப்படங்களில் பாடல் காட்சிகளில் திருநங்கைகள் போல வேடமிட்ட ஆண்களை காணும் போது முகம்
சுளிக்க வைக்கும்.போக்கிரி, சிவகாசி, கட்டபொம்மன், துள்ளாத மனமும் துள்ளும்,
திருடா திருடி,
பருத்தி வீரன்,
கில்லி, உள்ளம் கொள்ளை போகுதே,
வேட்டையாடு விளையாடு,
சில்லுன்னு ஒரு காதல்,
ஈரமான ரோஜாவே,
லீலை, முரட்டுக்காளை போன்ற திரைப்படங்கள்
திருநங்கைகளை கேவலமான முறையில் சித்தரித்துள்ளது. அந்த படங்களில் ஒரு நகைச்சுவை காட்சியிலோ
இல்லை பாடல்களிலோ திருநங்கைகளை அவமதிக்கும் செயல்கள் அரங்கேறியுள்ளது. நகைச்சுவை என்கிற பெயரில் எங்களை நீங்கள் இழிவபடுதுவதை நிறுத்துங்கள். வேண்டாம் இனி திருநங்கைகளை அவமானபடுத்தும்
வகையில் கேவலமான காட்சிகள் தமிழ் திரைப்படங்களில். தமிழ் திரையுலகமே திருநங்கைகளை இனி கண்ணியமான முறையில் திரைப்படங்களில் காட்டுங்கள். எங்களின் உணர்வுகளோடு உங்கள் வேடிக்கை வேண்டாம். இத்தகைய காட்சிகளை படத்தில் காணும் போது எங்கள் மனம் நோகுகிறது, மிகவும் தர்மசங்கடமான வருத்தமான சூழ்நிலை எங்களுக்கு ஏற்படுகிறது. உங்களுக்கு திருநங்கை போன்ற
காட்சி அமைப்புகள் கொண்ட கதாபாத்திரம் வேண்டும் என்றால் திருநங்கைகளையே அந்த கதாபத்திரத்தில்
நடிக்க வையுங்கள், எதற்கு அகோரி தோற்றம் உள்ள ஆண்களை திருநங்கைகள் போல வேடமிட்டு நடிக்க வைக்கிறீர்கள்? ஒரு தனிமனிதனையோ,
சமூகத்தையோ,
இனத்தையோ இழிவாக பேசுவதை
சென்சார் அனுமதிக்க கூடாது என்பது விதி. திரைப்படங்களில் மிருகத்தை சித்திரவதை செய்வது
கூட அனுமதிக்காத சென்சார் எப்படி ஒரு மனித இனத்தை திருநங்கைகளை இழிவாக பேச, மட்டமாக காட்சி அமைக்க அனுமதிக்கிறார்கள்
என்று புரியவில்லை.
தமிழ் திரைப்படங்களில் மேன்மையான போக்கு
சில தமிழ் இயக்குனர்கள் திருநங்கைகளை
கண்ணியமான முறையில் அருமையான கதாபாத்திரங்கள் கொடுத்து பெருமைபடுத்தி சிறப்பித்துள்ளனர்.அந்த வரிசையில் சில படங்கள்....
"நர்த்தகி" படத்தில் கல்கி சுப்ரமணியம், "தெனாவட்டு" படத்தில் ரேவதி, "கருவறை பூக்கள்" படத்தில் லிவிங் ஸ்மைல் வித்யா ஆகிய திருநங்கை சகோதரிகள் திரைப்படங்களில் தங்களுக்கு கொடுத்த கதாபத்திரத்தை அருமையாக திறம்பட செய்தனர்.
பல்வேறு சமூக காரணங்கள் மற்றும் மிருகங்கள் பாதுகாப்புக்கு குரல் கொடுக்கும் திரை நட்சித்திரங்கள், திருநங்கைகள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு குரல் கொடுத்தால் அந்த கருத்து மக்களுக்கு நல்ல விதமான முறையில் சென்று அடையும்.
- மதக்கலவரத்தில் உள்ளவர்களை தடுத்துநிறுத்தி உயிரின் மதிப்பையும் உறவின் பெருமையையும் ஒரு திருநங்கை மூலம் கருத்தை பதிவு செய்த பாம்பே படத்தில் திரு.மணிரத்தினம் அவர்கள்,
- திருநங்கையின் வலிமையை பெருமையை உணர்த்திய "காஞ்சனா" படத்தில் ராகவ லாரன்ஸ் அவர்கள்,
- திருநங்கையின் அன்பையும் பரிவையும் சிறப்பையும் வாழ்வியல் முறையை அழகாக கூறிய "நர்த்தகி" படத்தில் புன்னகை பூ கீதா அவர்கள்,
- திருநங்கையின் உணர்வுகள், பாலியல் தடுமாற்ற சூழ்நிலை உணர்த்திய "நவரசா" படத்தில் திரு.சந்தோஷ் சிவன் அவர்கள்,
- தங்களை நம்பி வரும் காதல் ஜோடிகளை அரவணைத்து உதவி செய்து உயிரை விடும் திருநங்கையின் தியாகத்தை தெளிவுபடுத்திய "தெனாவட்டு" படத்தில் திரு.கதிர் அவர்கள்,
- வீட்டில் இருந்து வெளியேற்றபட்ட திருநங்கை சமுதாயத்தில் முன்னேறி சாதித்த விதத்தை அழகுபடக் கூறிய "கருவறை பூக்கள்" படத்தில் திரு.சேவியர் IPS அவர்கள்,
"நர்த்தகி" படத்தில் கல்கி சுப்ரமணியம், "தெனாவட்டு" படத்தில் ரேவதி, "கருவறை பூக்கள்" படத்தில் லிவிங் ஸ்மைல் வித்யா ஆகிய திருநங்கை சகோதரிகள் திரைப்படங்களில் தங்களுக்கு கொடுத்த கதாபத்திரத்தை அருமையாக திறம்பட செய்தனர்.
பல்வேறு சமூக காரணங்கள் மற்றும் மிருகங்கள் பாதுகாப்புக்கு குரல் கொடுக்கும் திரை நட்சித்திரங்கள், திருநங்கைகள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு குரல் கொடுத்தால் அந்த கருத்து மக்களுக்கு நல்ல விதமான முறையில் சென்று அடையும்.
இணையத்தில் திருநங்கைகள்
இணையத்தில் திருநங்கைகள் பற்றி பரவலான கட்டுரைகள், குறும்படங்கள், படக்காட்சிகள் வலைபதிவிலும், சமூக தளங்களான FACEBOOK, TWITTER, YOUTUBE போன்ற தளங்களில் பார்க்கலாம். திருநங்கைகள் பற்றி பல இணையதளங்கள்களில் குறிப்பாக www.sahodari.org,www.orinam.net திருநங்கை பற்றிய செய்திகளை காணலாம். பல எழுத்தாளர்கள் திருநங்கைகள் பற்றி வலைபதிவிலும் தங்களின் கருத்தையும் ஆதரவையும் இணையம் மூலமும் வெளிபடுத்தியுள்ளனர்.
ஊடகத்துறை தோழர்களே உங்களால் முடியாதது எதுவுமில்லை!
நாட்டின் தலைவிதியை வரலாற்றை மாற்றும்
சக்திகள் நீங்கள். மக்களிடையே அணைத்து தகவல்களையும் ஆராய்ந்து அலசி நடுநிலையாக உண்மையாக
செய்திகளை கொண்டுச்சேர்க்கும் பணி உங்களுடையது. ஊடகத்தின் உதவிகள் இல்லாமல் எந்த ஒரு
வெற்றியும் இன்றைய காலச்சுழ்நிலையில் அடைவது
கடினம். ஒடுக்கப்பட்ட எங்களின் சமுதாயத்திற்கு அதரவாக குரல் கொடுங்கள், மக்களிடம் திருநங்கைகள் பற்றிய விழிப்புணர்வு புரிதலை
ஏற்படுத்த முற்படுங்கள். திருநங்கைகள் பற்றிய எதிர்மறையான எண்ணங்கள் கொண்ட மனிதர்களின்
மனதை மாற்ற, திருநங்கைகள் பற்றி மூட நம்பிக்கை
அகல, அறிவு கண்ணை திறந்திட உங்களின் செயல்களால்
ஊடகம் மூலமாக மாற்றம் ஏற்படுத்தமுடியும்.
ஊடகத்தில் திருநங்கைகளுக்கு வாய்ப்புக்கொடுங்கள்
மேற்கத்திய நாடுகளில் திருநங்கைகளின்
நிகழ்ச்சி, பங்களிப்பு அதிகஅளவில் உள்ளது.
இந்தியாவில் ஹிந்தி மொழிகளில் வரும் ஊடகங்களில் கூட கணிசமான திருநங்கைகளின் பங்களிப்பு
உள்ளது. சகோதிரி கல்கி சுப்ரமணியம் அவர்கள் "சகோதிரி" என்கிற பத்திரிக்கை நடத்தி
சிறப்பாக செயல்புரிந்து பத்திரிகை ஆசிரியாராக தன் திறமையை நிரூபிக்க செய்தார். ரோஸ்
வெங்கடேசன் தொலைகாட்சி மற்றும் வானொலியில் தன் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். விஜய் தொலைகாட்சியில் வெளிவந்த
"இப்படிக்கு ரோஸ்" கலைஞர் தொலைகாட்சியில் "இது ரோஸ் நேரம்" மக்களிடம்
நல்ல வரவேற்பை பெற்றது."ரோசுடன் பேசுங்கள்" என்ற நிகழ்ச்சி மூலம் நிகழ்ச்சி
தொகுப்பாளர் ஆகவும் திகழ்ந்தார். சமீபத்தில் "CHENNAI IN AND OUT MAGAZINE" ஆசிரியர் திரு விஜயகுமார் அவர்கள் எனக்கு அவருடைய பத்திரிகையில் எழுத வாய்ப்புக்கொடுத்தார். "விடியலை தேடி திருநங்கைகள்" என்கிற தலைப்பில் நான் எழுதினேன். நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. திறமையான திருநங்கைகளுக்கு வாய்ப்பும் கொடுங்கள் எங்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு குரலும் கொடுங்கள் ஊடக தோழர்களே!
உங்களின் கருத்தும் விமர்சனமும் வரவேற்கிறேன்....
அன்புடன்
ஆயிஷா பாரூக்
ஆயிஷா பாரூக்
arumaiyaana thodar...nanri..thodarnthu eluthungal
ReplyDeleteThanks for comments...
Deletearumaiyaana thodar...nanri..thodarnthu eluthungal
ReplyDeletewhatever support , you reqd, we all wth u....
DeleteThanks saravanan and Mk.. For your kind support and comments.
Deleteவாழ்த்துக்கள் தோழி ,..நிச்சயம் உங்கள் விழிப்புணர்வுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்...
ReplyDeleteமகிழ்சிகள் தோழி, உங்களின் ஆதரவிற்கு மிக்க நன்றி!
DeleteGOOD NEWS
ReplyDeleteThanks for comments surya..
DeleteFollowing up
ReplyDeletekeep rocking
Thanks Mr.Guru for reading and supporting me...
DeleteThanks for reading and supporting me...
ReplyDeleteதிருநங்கைகளை பற்றிய சிறப்பான பார்வை! சிறப்பான தொடர்!
ReplyDeleteஉங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி! நண்பரே!
Deleteஅவர்களும் மனிதர்களே என்பதை உணர்த்தும் பகிர்வு தொடருங்கள் தோழி தொடர்கிறோம் .
ReplyDeleteதோழியின் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள்!
Deleteஉங்களை நிச்சயம் படிக்கிறேன்...தொடரவும் செய்கிறேன் இன்னும் நிறைய எழுதுங்கள் ..உலகம் ஒரு நாள் மாறும் இல்ல நாமே மாற்றி விடலாம்
ReplyDeleteஉலகம் மாறும் ஒரு நாள் நாங்கள் அனைவரும் வெல்வோம் என்கிற நம்பிக்கையில் என் எழுத்துக்கள் தொடர்கிறது! உங்களின் அன்புக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி தோழரே!
Deleteபெண்களின் உரிமைகளுக்காக போராடுபவர்களும் இது போன்ற போராட்டத்தில் களப் போரளியாக வாழ்ந்துக் கொண்டிருப்பவர்களும் சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம்...
ReplyDeleteபாலியல் என்பது இரு பாலினருக்கும் பொதுவான ஒன்று அல்ல. ஆண்,பெண் சமத்துவ போராட்டத்தில் திருநங்கைகளின் அடிப்படை உரிமைகளை விவாதம் செய்ய மறந்துவிட்டோம்.
மேலும்,இந்த சமூகத்தில் அரங்கேறிவரும் பாலியல் வன்முறைகளின் அடிப்படை கூறுகளை புரிந்துக்கொள்ள பாலியல் பற்றிய கூட்டுவிவாதத்தை தொடங்கித்தான் தீர வேண்டும். அதில் பாரபச்சமின்றி அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும்.
அடிப்படை தேவைகளே இல்லாமல் நாங்கள் தவிக்கிறோம், எங்களின் படிப்பிக்கும் திறமைக்கும் ஏற்ற வேலை எங்களுக்கு வழங்க அணைத்து நிறுவனங்கள் முன் வர வேண்டும்! அப்போது தான் எங்களின் வாழ்வின் தரம் மேன்படும்! உங்களின் கருத்துக்கு நன்றி! தோழரே
Deleteசூப்பர் அக்கா தொடர்ந்து காதல் திருமணமும் இடம் பெறும் என நினைக்கிறேன்.. வாழ்த்துக்கள்...
ReplyDeleteThanks my sister... Keep reading and support dear
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteIt is nice and appriciate you to bring out the inner thoughts, and how the medias are taking part in the case of insulting the Respectable TG's(Thirunagai) in the socity.My openion is,we have to keep figting for TG's and support them,make arrange opertunity to come forward to show their real ebility and talents to the Socity as well as the Gvt.
ReplyDeleteSure Brindha, Thanks for your comments. To create awareness about Transgenders i m writing more articles and poems. You can go through all my works.. Keep supporting and reading
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteTransgenders will become trendsetters if right opportunity is offered to them. Society should change it's outlook and support them to lead a normal life by giving oppotUnity in day today life. Good job and keep it up!
ReplyDeleteThanks for kind comments and keep supporting and reading. Sure Society is changing now and encouraging Tg's. If we have good opportunity we too do far better, in other areas also.
Deletevery good attempt to create an awareness on an integral part of Humanity. May your tribe increase!
ReplyDeleteThanks Inigo Sir, for your kind support and keep reading my articles.
DeleteTheruvil ulla naikal avarkalin sailkalai, Thotrathai kindal panumpothu ANTHA MANITHARKAL avarkali kaondukola matarkal.
ReplyDeleteSernthu Nadapoom,Serthu Nadapom
VAANAM- Thiraipadathil Heroein Thirunakaiku Kiss kodupathupola oru kathchi -It is first time in Cinema Heroien Kissing the Thirunagaikal..Hats of to Director.