July 7, 2012

அன்பின் முகவரி


தன்னிகரற்ற தொண்டின் மூலம் உலகிலுள்ள மனிதநேயம் தலைத்தோங்கிட தேவைபடுவோர்க்கு உதவிகள் பலச்செய்து, மக்களின் மனங்களில் நீங்கா தியாக சுடராய், எளியோரை தேடி தொண்டூழியம் செய்த அன்னை தெரேசா அவர்களை புகழ்பாட வார்த்தைகள் எதுவுமில்லை. அன்னையின் கூற்றுப்படி நம்மால் முடிந்த உதவி ஒருவருக்காவது செய்வோம்...

சுடரொளியாய் பூமியில் நீக்கமற
தன்னலமில்லா சேவையின் மணிமகுடமாய்
எளிமையின் எளிமையாய் பழகுவதில்
இனிமையாய் பேசுவதில் கனிமையாய்
அளவற்ற தொன்டூழியத்தில் முன்மாதிரி
யானஅருட்  சகோதரி  இரக்கத்தின் உறைவிட
மேலானஅன் பிற்குமரு பொருளேயுன்
முகத்தில் சுருக்கங்கள் வந்தாலும்
தள்ளாது பதறாது மனம் குன்றாது  
முகம் சுனங்கா  தாமரையின்
இதழ் விரிபுன்னகை  யோடுநின்  
அரவணைப்பில் உறங்கிய ஆயிரமாயிரம்
ஆதரவில்லா உயிர்களின் புனிதன்னையாய்  
நோயிபிடி  உடலுருகி மனமிறுகி
மரணத்தின் மடியில்தலைச் சாயுல்லூரை
நல்லாள்நின்  கைக்கொண்டு புனிதமாக்கியவர்  
கரையேறத்  தொளுத சாந்தக் குனவதியே
வறியாரை நீதேடி கண்டோடி உதவினன்காள்
என்சொல்லி தமிழ்தேடி புகழ்வேனம்மா
உன்யுகம்வாழ் பிறந்ததேயென் புண்ணியமே!

அமைதி புன்னகையில் தொடங்குகிறது; ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது புன்னகைப்போம், அன்பு அதிலிருந்து தொடங்குகிறது... அன்னை தெரேசா

6 comments:

  1. அவர் புகழ் பாடிட எம்மிடம் வார்த்தைகளும் இல்லை, தகுதியும் இல்லை......... சொந்தமே இனிமையான கவிதை தந்துள்ளீர்கள்

    ReplyDelete
  2. ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது புன்னகைப்போம், அன்பு அதிலிருந்து தொடங்குகிறது... அன்னை தெரேசா
    உன்னத வரிகள்.
    தோழி நேரம் இருப்பின் தென்றல் பக்கமும் வருகை தரவும்.
    http://veesuthendral.blogspot.com/2012/07/blog-post_09.html

    ReplyDelete