July 13, 2012

பா எழுதி வந்தேன்

வாசமில்லா  மலராய் விரிந்தே
வண்ணமில்லா வானவில்லாய்  
மௌனகீதமாய் இசையும்மீட்டு  
சுவரில்லா சித்திரமாய்
இறைவியின் மறதியில் பாதி
வரைந்நின்ற ஓவிய மங்கையான
திருநங்கையானவள் நானே!
உணர்வின்பால் வலியோடும்
உறவின்காள் கண்ணீர்விழியோடும்  
பார் உலகில் வாழவழித்தேடி
மயிலிறகில் மையிட்டு பா
எழுதியுன் முன்வந்தேன்
எற்றுகொள் நானும் மனித
மேயன ஒலித்து கூறிடவே

ஆயிஷாபாரூக்  

12 comments:

  1. Replies
    1. உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

      Delete
  2. வாசமில்லா மலராய் விரிந்தே
    வண்ணமில்லா வானவில்லாய்
    மௌனகீதமாய் இசையும்மீட்டு
    சுவரில்லா சித்திரமாய்
    இறைவியின் மறதியில் பாதி//

    ஆழமான சிந்தனை
    அருமையான வரிகள்
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

      Delete
  3. மனதை உறுத்தும் வரிகள். சுடும் வரிகள். சிந்திக்க வைக்கும் வரிகள். உங்கள் இடத்தில் இருந்து நீங்கள் கடந்து வந்த பாதைகள், வளர்ந்த சூழ் நிலைகள் இக்காலங்களிலும் உம் போன்றவர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் போன்றவைகளை நினைத்துப் பார்கும்போதே மனது வலிக்கிறது.

    முதிர்ச்சி அடைந்த மனிதர்கள் ஒரு கால கட்டத்தில் தான் 'ஆண்' ஆணாக இருப்பதையும், 'பெண்' பெண்ணாக இருப்பதையும் நிறுத்திவிட்ட அனைத்து முகமூடிகளையும் கழட்டி தூர எறிந்து எப்பாலுமற்ற உண்மை மனிதத்துடன் வாழ பக்குவப்பட்டிருப்பர். இப்பக்குவம் இன்றே நம் அனைவருக்கு கிட்டி பாகுபாடற்ற, சகிப்புத் தன்மை நிறைந்த, மனித நேயம்மிகுந்த சமுதாயத்தில் நம் அனைவரும் ஒருவர் ஒருவர் நேசித்து அன்பு காட்டி வாழ்வோம். முயற்சிப்போம்.
    ஒவ்வொரு நாளும் (அன்றாட) தினசரி வாழ்க்கைக்கே உம்மைப் போன்றவர் தைரியமாக தீரத்துடன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளாலும், போராட்டங்களாலும் பக்குவப்பட்ட உம் மனது உமக்கு என்றும் துணை இருக்குமென வாழ்த்துகிறேன்.

    விழிப்புணர்வூட்டும் இப்பா பகிர்வுக்கு நன்றிகள் பல ஆயிஷா.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.. நம்பிக்கையில் பயணிப்போம்!

      Delete
  4. Replies
    1. உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி..

      Delete
  5. எற்றுகொள் நானும் மனித
    மேயன ஒலித்து கூறிடவே !

    நிச்சயம் தங்கள் வரிகள் உணர்த்தும் உண்மையை.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி..

      Delete
  6. ஆயிஷா...

    உணர்ச்சிப் புர்வமான கவிதை இது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! உங்களின் பார்வைக்கும் பதிவிற்கும் தோழரே

      Delete