October 2, 2012

உலகம் நமக்கு மட்டும் சொந்தம் அல்ல


பெறுகிய தொழில்துறை வளர்ச்சி, வீடு மற்றும் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், ரசாயன உரங்கள், பூச்சிகொல்லி மருந்துகள், புகை, கதிரியக்கம், போக்குவரத்து அதிகரிப்பு, நகரங்ககளின் விரைவான வளர்ச்சி, இயற்கை வளங்களை தவறான முறையில் கையாண்டது போன்ற காரணங்களால் இன்று மோசமான சுற்றுச்சூழல் பாதிப்புக்கு நாம் ஆளாகியுள்ளோம். இன்றைய நவநாகரீக வாழ்வியல் முறை காரணமாக பலவகையான சுற்றுச்சுழல் பிரச்சனைகள் பல்வேறு வகைகளில் காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு, நில மாசுபாடு, இரைச்சல் மாசுபாடு என்று அவதியுறுகிறோம். சுற்றுச்சுழலை காக்க, மாசுபாடு இல்லா சூழ்நிலை உருவாக ஒரு சில தரப்பினரே முன்வருகின்றனர். படித்த சிலரே தெரிந்தும் சிலவகையான சுற்றுசுழல் மாசுபடுகளை செய்கின்றனர். வீட்டையும் நாட்டையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமை ஆகும். இந்தியாவில் பெருகிவரும் மக்கள் தொகை காரணமாக சுற்றுச்சூழல் சீர்கேடு அதிகமாக உள்ளது.

இந்தியர்கள் இயற்கை வளத்தை காக்க பழமைத்தொட்டே பல சட்டங்களை வகுத்துள்ளனர். உங்களின் கவனத்திற்கு சில,  கி.பி. ஐந்தாம் ஆம் நூற்றாண்டில் யஜ்னவல்கியா ஸ்மிருதியின் நிலவரைவு சட்டப்படி மரங்களை வெட்டுவது தண்டனைக்குரிய சட்டமாக இயற்றப்பட்டுள்ளது. மௌரிய காலத்தில் எழுதப்பட்ட அர்த்தசாஸ்திரம் என்கிற நூலில் வன நிர்வாகம் பற்றி வலியுறுத்தியுள்ளனர். மாவீரர் அசோகரின் சின்னத்தில் சுழல் மற்றும் பல்லுயிர் நலன்களை பற்றிய சின்னம் உள்ளது. இயற்கை வளங்களை காப்பதில் பண்டைய இந்தியர்களின் பங்கு பாராட்டத்தக்கது. நம்முடைய மூதாதையர் நமக்கு நல்ல சுத்தமான உலகை தந்துவிட்டு சென்றுள்ளனர், ஆனால் நம் வருங்கால சந்ததி மக்களுக்கு நாம் சுகாதாரமான உலகை கொடுக்க தவறி வருகிறோம். நம்மால் உண்டாக்கபடும் மாசுபாடுகள் காரணமாக நம்மை நம்பி இருக்கும் பிற உயிரனமும், மரம் செடி வகைகளும் அழிவிக்கு ஆளாக நேரிடுகிறது. நம்முடைய எதிர்கால சந்ததிகள் நலமுடன் வாழ நாம் அவர்களுக்கு ஒரு சிறப்பான சுகாதாரமான உலகத்தை கொடுக்க வேண்டும்.

130க்கும் மேற்பட்ட இந்திய நகரங்கள் இன்றைய காலக்கட்டத்தில் காற்று மாசுப்பாட்டில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு கூற்றுப்படி கடுமையான சுவாச தொற்று நோய்கள் ஏற்பட்டு பெரும்பாலான குழந்தைகள் இந்தியாவில் மடிவதாக கூறியுள்ளது. இந்தியாவில் சராசரியாக  13% மக்கள் கடுமையான சுவாச தொற்று நோய்கள் காரணமாக இறக்கின்றனர். 132 நாடுகளில் மாசு படிந்த காற்று துகள் கொண்ட நாடாக 125 ஆவது இடத்தில இந்தியா திகழ்வது மிகவும் வருத்தமான ஒன்று. அதிகமாக மாசுப்படிந்த காற்றுத்துகள் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியா உலகின் ஏழாவது மிக சுற்றுச்சூழல் அபாயகரமான நாடு என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தொழில்மயமாக்கல் மனித சமுகத்தின் வளர்ச்சிக்கு சந்தேகமின்றி பெரிதும் உதவிய அதே நேரம் நகரமயமாக்கலுக்கும் வழிவகுத்தது. வேலை தேடி நகரங்களுக்கு பல லட்ச கிராமப்புற மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்வு ஏற்பட்டதன் காரணமாக ஏடாகூடமான வளர்ச்சியும் தொழில் நகரங்கள் சந்தித்து அதே வேளையில் அடிப்படை வசதிகள் கொண்ட குடியிருப்பு கட்டமைப்பு, சுற்றுசுழல் சுகாதார சீர்கேடு, சாலை வசதிகள், கழிவுநீர் அகற்றுதல் ஆகியவற்றில் தொழில் நகரங்கள் போதிய கவனம் செலுத்தவில்லை. அதிக மக்கள் தொகை நெருக்கம், பொருளாதார ஏற்ற தாழ்வுகள் போன்ற காரணங்கள் போதிய காற்றோட்டம் இல்லாத சுகாதார சீர்கேடு கொண்ட குடிசைகள் கொண்ட பல சேரிகளை நகரங்கள் உருவாக்கியது, பல குற்ற செயல்கள் கொண்ட கூடாரமாக சேரிகளை மது, போதை அடிமைகள் மற்றும் சமூக விரோதிகள் பயன்படுத்தினர்.

என் சிந்தனையில் தோன்றிய வரிகள்... 

சுத்தமான காற்று வேண்டும்
பசுமையான மரங்கள் வேண்டும்
தூய்மையான தண்ணீர் வேண்டும்
தெளிந்த நீர்நிலைகள் வேண்டும்
அமைதியான சாலை வேண்டும்
சத்தம்மில்லா பயணம் வேண்டும்
மாசுயில்லா ஆகாயம் வேண்டும்
துகள்களில்லா சுவாசம் வேண்டும்
நோய்யில்லா வாழ்வு வேண்டும்
நலமுடன் வாழவழி வேண்டும்
இயற்கை பொழிந்த பூமி வேண்டும்
மாசுயில்லா லோகம் வேண்டும்

பல உயிரினமும் நலமாய் வாழவேண்டும் 

பெரிய நகரங்களில் வாழும் மக்கள் மரங்களில் மூலம் கிடைக்கும் சுத்தமான பசுமையான காற்றை சுவாசிக்க மறந்தார்கள், வாகனங்களின் புகையில் உண்டான மாசுபடிந்த காற்றை சுவாசிக்க பழகினர். மேலும் நகரங்களில் வாகன ஓட்டிகளின் வண்டிகளில் இருந்து எழும் சப்தம் அதிக ஒலி மாசு ஏற்பட காரணாமாக அமைந்தது, அதன் விளைவு சிலருக்கு காதுகேளாமை அதிகமானது. வாகனங்கள், தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகை,  ஆஸ்துமா முதல் பல கொடிய சுவாச புற்றுநோய்கள் ஏற்பட்டு உயிரிழப்புக்கும் வழிவகுத்தது. அகற்றபடாத பல பொருட்கள், தேங்கி நிற்கும் சாக்கடை நீர், தொழிற்சாலைகளின் கழிவுகள், உரங்கள், மருந்து கழிவுகள் என்று நீரையும் மாசுபடுத்தின. ஒருவகையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ நாம் மாசு படிந்த உலகமாக மாற்ற பெரிதும் உதவுகிறோம். நாளைய சந்ததிகள் நம்மை பழி கூறும் வகையில் நம் ஒவ்வொருவரின் நடவடிக்கையும் உள்ளது.

நம்மால் அனைவரையும் மாற்றமுடியாது ஆனால் நாம் மாறலாம், பாதுகாப்பான சுற்றுச்சுழல் கொண்ட உலகம் உருவாக நம் பங்கு ஒரு சிறு அளவேனும் வேண்டும், அது எப்படி இருந்தாலும் கவலை இல்லை. ஒரு மரம் நடுவதோ அல்லது கழிவுகளை நம் வீட்டில் உள்ள மறு சுழற்சி செய்வதோ, முடிந்தவரை பிளாஸ்டிக் பொருட்களை பயனில் தவிர்ப்பது, அதிக புகை கக்காமல் வாகனத்தை ஓட்டுவதோ, ஒலி பெருக்கிகளை முடிந்தவரை உபயோக படுத்தாமல் இருப்பது என்று நம்மால் முடிந்தவைகளை செய்து செய்து மாசுயில்லா உலகம் உருவாக முற்படவேண்டும்.  மாசு ஏற்படும் வகையில் நம் செயல்கள் இருக்காதவாறு நாம் வாழ கற்க வேண்டும்.

அன்புடன்
ஆயிஷாபாரூக்

21 comments:

 1. Replies
  1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...

   Delete
 2. சிறப்பான கருத்துக்கள்...

  நல்ல சிந்தனை வரிகள்.... பாராட்டுக்கள்...

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...

   Delete
 3. நம்மால் அனைவரையும் மாற்ற முடியாது..ஆனால் நாம் மாறலாம்....அருமையான ஆழமான வரிகள்....

  ReplyDelete
 4. இன்றைய சூழலில் நிச்சயம் அனைவரும்
  மனதில் கொள்ளவேண்டிய கருத்தினைக் கொண்ட
  அருமையான பதிவு
  மனதில் மட்டுமின்றி சூழலையும் சுத்தமாக
  வைத்துக் கொள்ள முயல்வோம்

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...

   Delete
 5. வேண்டும் என்கிற பட்டியல் நம்மில் நீண்டு கொண்டே போனாலும் இயற்கையை அழிக்க வேண்டாம் என்கிற ஒன்று மட்டும் வேண்டாம் என்கிற பட்டியலில் இருக்கட்டும் சிறந்த பகிர்வு சகோ.

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...

   Delete
 6. நச்சுன்னு பதிவு

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...

   Delete
 7. நல்லதொரு விழிப்புணர்வு பதிவு! திருந்துவோம்! திருத்துவோம்! நன்றி!

  ReplyDelete
 8. தொடர்ந்து சுற்றுச்சூழல் பற்றி கருத்து வழங்கிவரும் தங்களுக்கு என் இனிய பாராட்டுகள்...

  வாழ்த்துகள் தொடரட்டும்...தங்கள் சேவை...

  ReplyDelete
 9. நல்ல பதிவு டீ உண்மைதான் அனைத்து கருத்துக்ககளும்......................

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...

   Delete
 10. தொடருங்கள் சகோ,,, அருமை

  ReplyDelete
 11. நல்ல பதிவு .. சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கைக் குறித்த ஆழ்ந்த கருத்துக்கள் பயன் தருபவையாக உள்ளது சகோதரி !

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...

   Delete
 12. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்

  ReplyDelete
 13. இந்த நிலை நினைத்து நானும் வருந்தி இருக்கிறேன்... என்னால் முடிந்த மாற்றத்தை கொண்டு வருவேன் !!! "நாம் மாறலாம், மாசுயில்லா உலகம் உருவாக நம்மால் முடிந்தவைகளை செய்து மாறலாம்"

  ReplyDelete
 14. மிகவும் பயனுள்ள பதிவு ஆயிஷா

  ReplyDelete