September 5, 2012

வாழ்கிறேன் ஒரு திருநங்கையாக


தெளிந்த மனமுடன்
தேங்காத நதியாய்
வாழ்க்கை கடலில்
எதிர்நீச்சல் அடித்து
பொறுமை ஆயுதமுடன்
எதிர்வரும் ஏளனங்களை
நிலம்போல பொறுத்து 
துணிவோடு விரட்டி
மடமையை அழித்து
அறிவுடன் செழித்து
தீமைகளை தீயன
மனச்சுடரில் எரித்து
கவலைகளை காற்றில்
பட்டம்போல பறக்கவிட்டு
மனமதை சவாலுடன்
யாவையும் சந்தித்து
பரந்த வான்போல 
வாழ்வை விரிவாக்கி
மகிழ்ச்சியை பெருக்கி
கவலைகளை சுருக்கி

வஞ்சமில்லா மனமால் தூயநீராகி
துயரங்களை நிலம்போல சுமந்து
அக்னிபோன்ற வாழ்கையை தனதாக்கி
தென்றலாய் கவலைகளை மறந்து
எல்லையில்லா சகிப்பால் வானாகி
வாழ்கிறேன் ஒரு திருநங்கையாக!

-- ஆயிஷாபாரூக் --

23 comments:

  1. //வான் போல//


    எழுத்துப்பிழைகளை குறைத்துக் கொள்ளுங்கள் நிறைய எழுத வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி தோழரே!...

      Delete
  2. கவிதை நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள் ஆயிஷா...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி தோழரே!...

      Delete
  3. உங்கள் உணர்வுகளை எவரும் புரிந்து கொண்டதில்லை,

    கவிதை வாயிலாய் புரிந்துகொள்ள ஓர் அறிய சந்தர்ப்பம் நல்கிய
    ஆயிஷா அக்காவுக்கு நன்றிகள் பல,

    புரிந்துகொள்வோம் இனியேனும் உணர்வுகள் என்பது அனைவருக்கும் பொதுவென்று.

    நன்றி: Ayesha Farook அக்கா!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி சகோதரரே!...

      Delete
  4. நீங்கள் ஏன் உங்களை திருநங்கை என்ற வட்டத்தினுள் பார்க்கிறீர்கள். நீங்கள் ஒரு பெண். நீங்கள் பெண்ணாக வாழவேண்டும்... அன்பு சகோதரியே....

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி சகோதரி!

      Delete
  5. முதலில் இந்த மனப்பான்மையை தூக்கி தூரப் போடுங்க...

    ReplyDelete
    Replies
    1. இது என் மனப்பான்மை இல்லை, எங்கள் உணர்வு உங்களின் கவனத்திற்கு சகோ! உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  6. Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி சகோ!

      Delete
  7. நிஜம் சொல்லும் கவி

    ReplyDelete
  8. அவர்கள் சிந்தனையில் இருந்து சிறப்பு சகோ.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி சகோ!

      Delete
  9. உணர்ச்சிகரமான வரிகள்! அருமை!

    இன்று என் தளத்தில்
    பழஞ்சோறு! அழகான கிழவி!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5.html

    ReplyDelete
  10. துயரங்களை நிலம் போல சுமந்து.....

    உணர்வுபூர்வமான வரிகள்....

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி சகோ!

      Delete
  11. அழகான சிந்தனை + வரிகள்

    ReplyDelete
  12. பரந்து விரிந்த உலகில், நேர்மையாய் வாழ வழிகள் பல உள்ளன. மனதில் விசாலமான எண்ணம் கொண்டு குறுகிய வட்டத்தில் இருந்து வெளியேறினால், வானம் வசப்படும்!

    அழகிய கருத்துச் செறிவுள்ள உணர்வுபூர்வமான கவிதை! பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  13. Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி சகோ!

      Delete
  14. உணர்வோடு இணைந்திருக்கும் கவிதை தோழி !

    ReplyDelete