September 3, 2012

இட்லி

இட்லி பற்றிய கவிதையா என்று வியக்க வேண்டாம்.. தமிழனின் வாழ்வியல் முறையில் இருந்து பிரிக்கமுடியாத ஒரு உணவு இட்லி.. ஆகையால் இட்லிக்கு ஒரு கவிதை என் மனதில் தோன்றியது. உடனே எழுதிவிட்டேன்.. இந்த கவிதையை இட்லிக்கும் இட்லி பிரியர்கள் அனைவருக்கும் அன்புடன் சமர்பிக்கிறேன்..

உங்களுக்காக சுடச்சுட இட்லி தயார்....!!!


அழகான வெள்ளை பஞ்சு
தேவலோக அமிர்தமோ இல்லை
பூலோக அதிசய படைப்போ
அரிசியும் உளுந்தும் ஜோடிசேர
கலவையாக நீராவியில் வெந்து
தட்டில் மலர்ந்தது இந்த மல்லிகைபூ 
அன்னையின் அழகிய பக்குவத்தில் 
அன்பும் பரிவும் கொண்ட 
ஒளிர்ந்த பௌர்ணமி வட்டமாக
சுடச்சுட சிரித்தது இட்லி 
நண்பர்கள் சட்னி சாம்பார்
வடையின் வரவு கண்டு

ஆயிஷாபாரூக்

36 comments:

  1. Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் வாழ்த்துக்கள்... அன்புக்குரிய இட்லி பிரியரே!

      Delete
  2. என் மனம் கவர்ந்த உணவு இட்லி
    அதற்கு ஒரு அழகிய கவிதைப்படைத்து
    பெருமைப்படுத்தியமைக்கு மனமார்ந்த நன்ரி

    ReplyDelete
    Replies
    1. அய்யா! உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...

      Delete
  3. Replies
    1. செவிக்கு உணவாக இட்லி கவிதை, பசிக்கு இட்லி...

      உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  4. நாங்களும் இட்லி சாப்பிடும்ல்ல....!

    ReplyDelete
    Replies
    1. சந்தோஷம் சகோ... உங்களின் வருகைக்கும் பதிவிற்கும்... மிக்க நன்றி

      Delete
  5. யாம் ஒரு இட்லி வெறியனுங்கோ....கவி பிடிச்சிருக்குங்கோ

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றிங்கோ

      Delete
  6. நல்லா இருக்கு இட்லி போல கவிதையும்! அருமை!

    இன்று என் தளத்தில்
    தளிர்ஹைக்கூ கவிதைகள்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_3.html

    ReplyDelete
    Replies
    1. தளிர் அண்ணா... உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

      Delete
  7. இட்லிக்கு இணை வேறு இல்லையே ! கவிஞர் இரா .இரவி
    ஆவி பறக்கும் இட்லி
    அனைவருக்கும் பிடிக்கும் இட்லி
    மருத்துவர்கள் பரிந்துரைக்கும் இட்லி
    மல்லிகைப் பூ போன்ற இட்லி
    சரி சம விகித சத்துள்ள இட்லி
    சராசரி மனிதர்களின் இட்லி
    காலை உணவு இட்லி
    இரவு உணவு இட்லி
    வயிற்றுக்கு ஏற்ற இட்லி
    வயதானவருக்கும் இட்லி
    குழந்தைகளுக்கும் இட்லி
    ஆரோக்கியமான இட்லி
    ஆய்வின் தகவல் இட்லி
    இட்லிக்கு இணை இட்லியே
    இட்லிக்கு இணை வேறு இல்லையே

    ReplyDelete
    Replies
    1. அய்யா... உங்களின் வருகைக்கும் அழகிய கருத்துரைக்கும் மிக்க நன்றி

      Delete
  8. Replies
    1. அண்ணா... உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  9. Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி தோழரே!

      Delete
  10. என்னங்க மூன்று வடையா... பரவாயில்லை... இட்லியை இன்னும் சேர்த்துக்க வேண்டியது தான்... (நகைச்சுவைக்காக)

    நல்ல வரிகள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்காக தான் மூன்று வடை... ஸ்பெஷல்....

      உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி சகோ!

      Delete
  11. இட்லி கவிதை மிகவும் ருசியாக உள்ளது, சாம்பார் சட்னி தான் இல்லை...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி சகோ!

      Delete
  12. சுவையான இட்லி... அதைவிட சுவையான கவிதை...

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்காக தான் மூன்று வடை... ஸ்பெஷல்....

      உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி சகோ!

      Delete
  13. அஹா.. இட்லிக்கு உங்க கிட்னிய வச்சு கவிதையே சொல்லீட்டிங்க! அருமை!

    ReplyDelete
    Replies
    1. சகோதரி.. ஹா ஹா.. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.....

      Delete
  14. நல்ல கவிதை ...
    அப்படியே இண்ட்லிக்கு ஒரு கைதிஅ எழுதிடுங்க...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி தோழரே... கண்டிப்பாக எழுதலாம்...

      Delete
  15. nallaththaan irukku ayesha... http://www.rishvan.com

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி தோழரே

      Delete
  16. “இட்லி” சுவையாக உள்ளது சகோ.

    ReplyDelete
    Replies
    1. சகோ.... நன்றி வருகைக்கும் பதிவிற்கும்

      Delete
  17. உங்களின் இட்லி கவிதை நல்ல சுவைதான்.

    இட்லியை சாம்பாரில் தொட்டு சாப்பிட்டேன். தேங்காய் சட்னியும், என்னையில் செய்த வடையும் எனக்கு ஒவ்வாமையாதலால்(டாக்டர் வச்ச ஆப்பு..) அதை மட்டும் சுவைக்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. தோழரின் வருகைக்கு பதிவிற்கும் மிக்க நன்றி... உங்களுக்காக ஸ்பெஷல் கார சட்னி ரெடி...

      Delete
  18. உங்கட கவிதையும்,இட்லி வடையும் பார்த்துப் பசி வந்தாச்சு....ஒரு பார்சல் ப்ளீஸ் ஆயிஷா !

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா சகோ! உங்களுக்கு இல்லாமையா...
      மிக்க நன்றி உங்களின் வருகைக்கும் பதிவிற்கும்

      Delete