September 16, 2012

பலூன்காரன்




விற்கும் பலூனில்
எத்தனை வண்ணங்கள்
விற்கும் எனக்கோ
கருப்பு வெள்ளையாய்
வாழ்வின் பக்கங்கள் 
நானும் பலூனும்
பறக்க முடிந்தும்
பறக்க முடியாமல்  

வாழ்க்கை வானில்
சூழ்நிலை நூலில்
கட்டப்பட்ட கைதிகளாய் 
காற்றின் திசைநோக்கி 
போகிறோம் முகவரியில்லா
பயணத்தை எதிர்கொண்டு  


அன்புடன்
ஆயிஷாபாரூக்

21 comments:

  1. சூழ்நிலைக்கைதிகளாய் அற்புதமான கற்பனை சகோ.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி... சகோ!

      Delete
  2. அர்த்தமுள்ள அருமையான கவிதை தோழி.வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி... தோழரே!

      Delete
  3. மிகச்சிறப்பான கவிதை! கறுப்பு வெள்ளை பக்கங்கள் பலூன் காரனுக்கு மட்டுமல்ல பலருக்கும் உள்ளது! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  4. சிறப்பான கவிதை... சூழ்நிலைக் கைதிகள்... ஒரு விதத்தில் அனைவருமே....

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  5. வாவ் ! சகோதரி மிக அருமையான ஒரு கவிதை.. பலூன் - பலூன் காரனை வாழ்க்கையோடு உவமைப் படுத்திய விதம் அருமை ... !

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ! உங்களின் வருகைக்கும் பதிவிற்கும்....

      Delete
  6. குழந்தைகளுக்கான சமூக கவிதை போல் இருந்தாலும் இது பெரியவர்களுக்காக சமூக கவியும் கூட...

    சூப்பர் டீ.............

    ReplyDelete
    Replies
    1. சகோ, உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி...

      Delete
  7. உண்மை தான் என்றாலும், இவை மாற வேண்டும் என்பதே என் விருப்பம்...

    ReplyDelete
    Replies
    1. மாறும்! மாற வேண்டும்... உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி... சகோ

      Delete
  8. பல பேசும் படங்களுக்கு மத்தில்... ஒரு கவிதை பாடும் படம்...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி... சகோதரி

      Delete
  9. பலூனுக்கும் வாழ்க்கைக்குமான கோர்வை அழகு..

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி... தோழரே

      Delete
  10. பலூன்போல பாழாய்ப்போன வாழ்வு.அதற்கிடையில்தான் எத்தனை ஏற்றத்தாழ்வு !

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி... தோழி

      Delete
  11. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

    ReplyDelete