August 23, 2012

அந்தி நேர பூக்கள்


எத்தனை நாளா இப்படி மனசுக்குள்ளயே நினைச்சுகிட்டே இருக்குறது இன்னிக்கு எப்படியாது  ட்ரை பண்ணி பார்க்க வேண்டியது தான். தன் கட்டுக்கு அடங்காத இளமை தணலை தணித்திட முடியாமல் தவித்த  சுந்தர் முணுமுணுத்த படியே தன் வீட்டு வாசலில் முன்னால் குட்டி போட்ட பூனை  போல  அங்கும்  இங்கும்  நடந்து யோசித்து கொண்டு இருந்தான்யார் இந்த சுந்தர்?  சுந்தர்  வயது   இருபத்தி  மூன்று,  ராங்கியத்தில் உள்ள ஒரு அரிசி மில்லில் கணக்கு எழுதும் வேலை பார்க்கிறான். இன்று நேற்றல்ல அவன் மனதில் பல நாட்களாக  சபல ஆசைதன்  சபலதிற்கான வடிகால் எங்கேயாவது கிடைக்காதா என்று அவன் மனது தேடாத நாளே இல்லை.அதுவும்  குறிப்பாக  இருட்டுத்தெரு  மீது  அவனுக்கு ஒரு தீராத ஆசை. இருட்டு தெரு என்பது  சுந்தரின்  ஊரில் உள்ள பல ஆண்களுக்கு  பிரசித்தி பெற்ற இடம்.  

சுந்தரின் ஊருக்கு வெளியே  பாலியல்  தொழில்  நடக்கும்  இடம்  அது.சிறு வயது முதல் அந்த  தெருகெல்லாம்  போகக்கூடாது,அங்கே மோசமான பொம்பளைங்க இருப்பாங்க என்று பெரியவர்கள்  சொல்லி அந்த தெருவில் அப்படி என்ன இருக்கிறது என்கிற ஆவல் அவனுள் ஏற்பட ஒரு  காரணமாகவும் அமைந்தது.இளமை பருவத்தில் அந்த தெரு வழியாக  வேண்டும்மென்றே வேடிக்கை பார்த்தபடியே செல்வான், ஆனால் அங்கே உள்ள   வீடுகளுக்கு இது வரை சென்றது இல்லை.அங்கே என்ன நடக்கிறது என்பதை  தன் சகதோழர்கள் மூலம் கேட்டு அறிந்து  கொண்டான். இரவு நேரத்தில் இருட்டு தெரு  பூக்களை சுற்றிய தேனிக்கள் நிறைந்து களைகட்டும். முழுநிலவின் வெளிச்சம் இரவு நேரத்தில்   பரவியிருக்க  சுந்தரின்  மனதும் சபல எண்ணத்தில்  தவிக்கதன்னுடைய நெடுநாள் ஆசையை தனித்துவிட முற்பட்டு  வீட்டின்  சுவற்றில்  சாய்ந்து  நின்ற சைக்கிளை சட்டேன்று எடுத்து இருட்டுத்தெரு நோக்கி முகம் மலர  வேகமாக விரைந்தான். 

இருட்டு தெருவின் முனைக்கு சென்றதும் சைக்கிள்  வேகத்தை  கட்டுப்படுத்தி   அக்கம் பக்கம் சுற்றும் பார்த்தான். சைக்கிள் வேகத்தை கட்டுப்படுத்திய அவனால் இளமையின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அருகில் இருந்த வேப்ப மரத்தடியில் சைக்கிளை  நிறுத்திவிட்டு இருட்டு தெருவில் பிரபலமான பாலியல் விடுதியான காஞ்சானாவின்   வீட்டிற்கு சென்றான்.எவரு மீறுஇக்கட ரா என்று கேட்டது ஒரு குரல். முகம்  வியர்த்த படி சுந்தர் வாசல் கதவு வெளியே நின்றான்.காக்கிநாடு காஞ்சனா, அந்த வீட்டு   முதலாளி விலைமாதர்களின் தலைவி. ஊரில் இருக்கும் அரசியல் பிரமுகர்கள்முக்கிய  புள்ளிகள்ரௌடிகள் ஆகியோருக்கு நன்கு பிரபலமான நபர். கடந்த பத்து  ஆண்டுகளுக்கு  மேலாக இருட்டு தெருவில் பாலியல் தொழில் விடுதி நடத்தும் நபர்களில்  ஒருவர்.ஆந்திரா மாநிலம் காக்கிநாடு சொந்த ஊர். ஊரும் அவள் பெயருடன் ஒட்டிக்கொண்டு அவளை இன்னும்கொஞ்சம் பிரபலபடுத்தியது.

எவருதி உள்ளே வாங்கோ... என்று காக்கிநாடு காஞ்சனா அழைக்க முகத்தில் உள்ள வியர்வையை துடைத்து தயங்கிய படியே உள்ளே வந்தான் சுந்தர்.. குற்சோ (உட்கார் என்று அர்த்தம்).. புரியாததால் சுந்தர் நின்றான்... புதுசா தெரியுது,  சொல்லுங்க உங்களுக்கு எந்த ஸ்டேட் வேணும்,  நமக்கிட எல்லா சரக்கும் இருக்குது,  தமிழுதெலுங்குமலையாளம்கன்னடம்ஹிந்தி எல்லாம் இருக்கு... என்ன டப்ள பொண்ணு வேணும் உனக்கு செப்பு பாபு ? நூறு ரூபாலேந்து ஆயிரம் ரூபாவரை இருக்குது என்றாள். கடை தெருவில் பொருட்கள் விற்பது போல பெண்களா என்று சுந்தரின் மனம் உள்ளூற நினைத்தது. சற்று யோசித்து எனக்கு தமிழ் பொண்ணு போதும்எனக்கிட ஐநூறு ரூபா இருக்குசட்டை பையில் உள்ள பணத்தை எடுத்து காஞ்சானா விடம் கொடுத்தான்.. சிரித்தபடி சாள பாகுந்தி பாபு... அந்த ஐநூறு ரூபாயை வாங்கி வெற்றிலை பெட்டியில் உள்ள வெத்தலைக்கு கிழே வைத்தாள். அம்மா மல்லிகா இக்கட ரா மா... மஞ்சி அடுத்தி வச்சிண்டிவன்னி திஸ்கோ  (மல்லிகா  இங்கே வா மாநல்ல விருந்தாளி வந்துருக்கு கூட்டிட்டு போ).பூக்களின் மனம் கமழ கண்கள் கவிபாட செந்நிற உதடுகள் துடித்திட நீல நிற புடவையில் ஜொலித்தபடி மல்லிகா வந்தாள். வெல்லு பாபு (போ பா) என்று சுந்தரிடம் காஞ்சனா கூற மல்லிகாவின் பின்னாடியே முகத்தை கீழே சாய்த்தவாறு ஒரு வித பதட்டத்துடன் அவளின் அறையை நோக்கி சென்றான்.

சுந்தர் உள்ளே வந்ததும் கதவை அடைத்து கட்டிலில் அமர்ந்தாள் மல்லிகா. சுந்தர் அந்த அறையை சற்று வியந்து பார்த்தான்யோவ்ஏன் நிக்கிற சும்மா பக்கதுல உட்காரு. ஆளு புதுசா இருக்குஇந்த ஊரா இல்ல அசலுராஎன்ன பண்ற ? மல்லிகா கேட்க சுந்தர் சற்று படபடப்புடன் தயங்கியே கட்டில் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான். கொஞ்சம் தண்ணி வேணும் குடிக்க.. தணுத்த குரலில் சுந்தர் கேட்க,  பானையில் உள்ள தண்ணீரை சொம்பில் மொண்டு கொடுத்தாள் மல்லிகா. தண்ணீர் குடித்து கொண்டு இருந்த சுந்தரிடம் யோவ்..  உனக்கு இதுலாம் பழக்கம் இல்ல போலஉன் முகத்த பார்த்தாலே தெரியுது திரு திருன்னு முழிக்கிற புன்னகைத்தவாறே சுந்தரிடம் கேட்டாள். ஆமாங்கஎனக்கு இதுலாம் பழக்கம் இல்ல இப்போ கூட எதோ வேகத்துல தான் வந்தேன்  மெல்லிய குரலில் கூறிய சுந்தரை பார்த்து.ஹாஹா சிரித்தபடி மல்லிகா ஹ்ம்ம் கத்துக்க தானே இங்க வந்து இருக்க...  கவலைப்படாதேயாசரி உன்னை பத்தி சொல்லுநான் அறிமுகம் இல்லாம யார்கிட்டையும் படுக்க மாட்டேன்.. என் பேரு சுந்தர். நான் ஒரு மில்லுல கணக்கு எழுதுறேன்இதே ஊரு தான்… சரி சரிஉனக்கு எதுவும் வியாதி இருக்கா...டிபி,  இல்ல பலானது எதுவும்... என்று  மல்லிகா கூறி முடிக்கும் முன்பே,  அய்யோ நான் நல்ல பயங்க அப்படிலாம் எதுவும் கிடையாது. என்றான் சுந்தர்.  நல்ல பயனு சொல்றஅப்புறம் ஏன் எங்கே வந்த கோவிலுக்கு போக வேண்டியது தானேமறுபடியும் புன்னகைத்து மல்லிகா கூறினாள்.

தப்பா எடுத்துக்காதயாநான் எந்த கிராக்கி வந்தாலும் இந்த கேள்வி  எல்லாம் கேட்பேன்.  எனக்கு பாதுகாப்பு முக்கியம். இந்தா புடி  காண்டம். படுக்கை தலையணை  கிழே இருந்த  ஆணுறையை சுந்தரிடம் எடுத்து கொடுத்தாள். சுந்தர் தயங்கி பார்த்தான்.  என்ன பாக்குற?  இது இல்லாம நான் யாரையும் அனுமதிக்கிறது கிடையாது. ஊர்ல  நிறைய பேரு AIDS,பால்வினை  நோயின்னு சீக்கு புடிச்சு இருப்பான். முன்ஜாகிரத்தை தான். நானும் பாதுக்காப்பா இருக்கணும் என்னை நம்பி வரவனும் பாதுகாப்பா இருக்கணும்.உங்கள பத்தி நான் தெரிஞ்சுக்கலாமா என்று சுந்தர் கேட்கஇங்கே பாரு நீ மேட்டர் பண்ண வந்தியா இல்ல  என்னை பேட்டி எடுக்க வந்தியாவந்தோமா வேலையா முடிச்சோமா போனோமானு இரு. இப்படி வளவளன்னு பேசிகிட்டு இருந்தா என் புழைப்பு கெட்டு போயிடும், ராசா கதைக்கு ஆகாது. சற்றே சலிப்புடன் மல்லிகா கூற ப்ளீஸ் கோச்சுகாதிங்க உங்களை பத்தி தெரிஞ்சுக்க தான் கேக்குறேன் என்று சுந்தர் சொல்ல மல்லிகா நக்கலாக... 

ஆமா நீ என்னத்துக்கு கேக்குற, என்னை வெச்சு படம் எடுக்க போறியா என்ன... ஹ்ம், நீ கேக்குறதுனால சொல்றேன். இதுவரை எத்தனையோ  பேரு வந்துருக்காங்கயாரும் என்னை பத்தி கேட்டது இல்ல... என்னோட சதைய மட்டும் தான் ருசிச்சுட்டு போவாங்க , என் மனச எவனும் பார்த்ததும் இல்லஎன்னை பத்தி கேட்டதும் இல்ல சுந்தரு  கண்களில் நீர் வார்த்தபடி தொடர்ந்தாள்.என்னை கட்டிகிட்ட ஒருத்தன் தான் இந்த படுகுழில தள்ளிவிட்டு என்னை வெச்சு பணம் சம்பாதிச்சு குடிச்சு அழிக்கிறான் . நான் கல்யாணம் பண்ணி என் வாழ்க்க மத்த பொண்ணுங்க வாழ்க்க மாறி நல்லா இருக்கும்னு  நினைச்சு தான் கனவு கண்டேன்.நாம ஒன்னு நினைக்கிறோம் தெய்வம் ஒன்னு  நினைக்கிது. நாம நினைக்கிறது எல்லாமா நடக்குது. எனக்கு ஒரு மகள் இருக்காள்,  ஸ்கூல்ல ஒன்னாவது  படிக்கிறாள்,  அவளோட எதிர்காலத்துக்காக தான் இப்படி மனுஷ இயந்திரமா உணர்வு உணர்ச்சி எல்லாம் விட்டு  நடைபிணமா வாழறேன். ஒரு சிலரை தவிர்த்து இங்க இருக்குற எல்லா பொண்னுகளும் அவுளுக அப்பன்அண்ணன்மாமன்புருஷன்காதலன்  இப்படி பட்ட உறவுகளே அவனுக சுயலாபத்திற்காக அப்பாவி அதரவு இல்லாத புள்ளைகள  கொண்டுவந்து இங்கே காசுக்கு விப்பாங்க.  ஆரம்பத்துல்ல இந்த  புழைப்புக்கு சகலாமனு தான்  தோணிச்சு,என்னை நம்பி என் மகள் இருக்க அந்த பிஞ்சு குழந்தைய பார்த்து என் முடிவை  மாத்திகிட்டேன்.முதல்ல ரொம்ப கஷ்டமா இருந்துச்சு இப்போ பணமும் தேவையும் அந்த வலிய மறைச்சுருச்சு.. இப்போ கூச்சமும் இல்லவெட்கமும் இல்லமானமும் இல்ல. எல்லாம் பழகிடுச்சு. பணம் இருந்தா போதும்இது எதுவும் தேவை இல்லை. 

உங்க கதையை கேட்க ரொம்ப
  சங்கடமா இருக்குங்க... பாவம் நீங்க! வேதனையான குரலில் சொன்னான் சுந்தர். நான் சொல்றேன்னு கோச்சுகாதிங்க நீங்க ஏன் வேற தொழில் பண்ணக்கூடாது தயங்கியப் படியே சுந்தர் கேட்க ஒரு தடவப்பட்ட கரை காலத்துக்கும் போகாது சுந்தர்.  நான் சாகுற வரை என்னை தேவுடியானு தான் சொல்லுவாங்க. நான் திருந்தினாலும்  இவ இப்படி அப்படியிருந்தாநடத்தைக்கெட்டவன்னு சொல்லுவாங்க. ஆனா பொழைக்க யாரும் வேலையும் கொடுக்க மாட்டாங்க. எல்லாத்துக்கும் மேலே எங்க கிட்ட சுகம் கண்ட ஆம்பளையும் பணத்த பார்த்த விபசாரியும் மாறுறது கஷ்டம் சுந்தர். நான் அதுக்கு இப்படியே இருந்தேனா என் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சு  கொடுப்பேன். என் வாடையே அவ மேலே படக்கூடாதுன்னு தான் என் தங்கச்சி வீட்ல வெச்சு அவள நல்ல ஸ்கூல்ல படிக்க வைக்கிறேன்.அவ நல்ல நிலைமைக்கு ஆளாய்யிடாள்ன அப்புறம் எனக்கு எந்த கவலையும் இல்லாமா இருப்பேன்.விபச்சாரம் தப்பு தான், ஆனா நான் யாரையும் ஏமாத்தலா, மோசம் பண்ணல. என் உடம்ப வித்து நேர்மையா காசு சம்பாதிக்கிறேன்.

யோவ்
டைம் ஆயிட்டே இருக்கு யா... வந்த வேலையே மறந்துட்டு என் சொந்த கதைய கேட்டுகிட்டு இருக்க. சீக்கிரம் ரெடி ஆகு சுந்தர் என்றாள் மல்லிகா. இல்லவேண்டாம்ங்க எனக்கு மனசு சரி இல்லஎன் மனசு சபல பட்டு தான் வந்துது ஆனா இப்போ இல்ல.. இத்தனை நாளா உங்கள மாறி ஆளுங்கள நான் போகப்பொருளா மட்டும் தான் பார்த்து  இருக்கேன்.. இப்போ தான் உங்களை பத்தி புரிஞ்சுக்க முடிஞ்சுச்சு... நீங்களும் உணர்ச்சியும் உணர்வும் உள்ள பொண்ணுங்க தான்விதி வசத்தால இப்படி ஆச்சு உங்க பொழைப்பு. நல்ல யோசிச்சுக்கோ... அந்த பொம்பளை பணம் திருப்பி கொடுக்காது. பணம் போனது போனது தான் சுந்தர். பணம் போனா போகட்டும்ங்க. ஐநூறு தானே.. சுந்தர் கூற சிரித்தப்படி  மல்லிகா  யோவ்... உனக்கு பணம் ஒரு விஷயம் கிடையாது. ஆனா எனக்கு படுக்கைல புரண்டா தான் பணம் புரட்ட முடியும். இது தான்யா உலகம்.. போலிசுக்கு மாமுல்ரௌடிக்கு மாமுல்வீட்டுக்காரிக்கு   மாமுல போக நீ கொடுத்த ஐநூருல எனக்கு வெறும் இறநூறு ரூபாய் தான் மிஞ்சும். ரத்தமும் சதையும் நான் விக்க யார் யாருலாம் அதுல குளிர்காயுறாங்க பாரு.வருபவன் நொண்டியோ, குருடோ, கிழடோ, முரடனோ எவன் வந்தாலும் நான் அவனுக்கு பொண்டாட்டி மாறி நடந்துக்கணும், காசு கொடுத்தா நான் சுகத்த கொடுக்கணும். (பெருமூச்சு விட்ட படி) பொம்பளையா பொறந்து விபாசாரியாக இருக்கவே கூடாது யா. சுந்தருக்கு கண்கள் கலங்கியது. யோவ், நீ நிஜமா நல்லவனா இருக்க இனிமே இது மாறி  இடத்துக்கு வராதையா. உன்னை மாறி வயசு பசங்க ஏதோ இளமை வேகத்துல வருவாங்க, அவங்களுக்கு நான் புத்திமதி சொல்லி அனுப்புவேன், பல பேரு கேட்க மாட்டாங்க.. என் புழைப்பு கெடும் தான் இருந்தாலும் என் மனசு கேட்காம தான் அவங்க கிட்ட சொல்லுறது.

விடைபெற்ற
 சுந்தர் வீட்டிற்கு செல்லும் போது சைக்கிள்ளில் உள்ள சக்கரம் போல  மல்லிகாவின்  நினைவுகள் அவன் மனதில் சலனம் இல்லாமல் சுழன்றது.

அன்புடன்
ஆயிஷாபாரூக்

27 comments:

  1. அருமையான பதிவு அக்கா! விலைமாதர்களின் அவலங்களையும், அவர்கள் எப்படி இத்தொழிலுக்கு தள்ளபடுகிறார்கள் என்பதையும் தெளிவாய், சரியாய் சொல்லி இருக்குறீர்கள்.

    உங்கள் எழுத்துப்பணி தொடர, சிறக்க என் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. சில மனிதர்களை சற்று கூட புரிந்துகொள்ளாமல் மனித சமூகம் ஒதுக்கிவிடுகிறது. அவர்களில் ஒருவர் தான் விலைமாதர்கள். சகோ உங்களின் அன்புக்கும் கருத்து அளித்தமைக்கும் மிக்க நன்றி!

      Delete
  2. சகோ அற்புதமான படைப்பு காட்சிகளை கண் முன் படம் பிடித்து காட்டுகின்றன.வாழ்த்துக்கள் தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. சகோதரியின் வரவுக்கும், கருத்து பதிவுக்கும் மிக்க நன்றி! என்றும் அன்புடன் ஆயிஷாபாரூக்.

      Delete
  3. இதை பற்றி நான் கட்டுரை எழுதி இருக்கிறேன்
    மரபு தொட்டு நம்மை பிணைத்திருக்கும் துரு பிடித்த சங்கிலியை அறுக்க இன்று தலைப்பட்டு இருக்கிறோம் என்பதை நினிகையில் மகிழ்ச்சி தோழி .............நம் எழுத்துகள் இவுலகை மாற்றும் என்ற நம்பிக்கை துளிவிடுகிறது ..........தொடர்ந்து அறுக்க முற்படுங்கள் அடிமை சங்கிலியை

    ReplyDelete
    Replies
    1. அக்கா அப்பதிவின் லிங்கை தரமுடியுமா அக்கா?ஃ

      Delete
    2. அன்பு தோழியின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி! அடிமை சங்கிலிகள் அறுக்கப்பட வேண்டும்.. யாவரும் சமம் என்கிற நிலை வேண்டும்.. தோழி அதிசயா கூறுவது போல உங்கள் கட்டுரையின் லிங்க் படிக்கச் ஆசை...

      Delete
  4. சிறந்த படைப்பு! விலைமாதர்களை அரசும் சமூகமும் பரிவுடன் நோக்கி அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முதல் வருகையை இனிதே வரவேற்கிறேன். உங்களின் பதிவிற்கும் நன்றி தோழரே!

      Delete
  5. வணக்கம் தோழி!மிக்க மகிழ்ச்சி.இப்படியாகிலும் இவர் இன்னல்கள் வெளியெ வருகிறது.ஒரு நான் இந்த எழுத்துக்கள் எல்◌ாவற்றையும் மாற்றும் சொந்தமே!!அருமையாக எழுதியுள்ளீர்கள்.பாராட்டுகள்.இவர்கள் பற்றி பேசி ஒருமுறை நான் வாங்கிய பல்புக்களோ ஏராளம்.ஆனாலும் வருத்தமில்லை.இப்படியாவது இப்படைப்புகள் கவனிக்கப்படுவது மகிழ்ச்சியே!!


    வாழ்த்துக்கள் சொந்தமே!

    ReplyDelete
    Replies
    1. தோழியின் வருகை பதிவு கருத்து ஆகியவை என்றும் மகிழ்ச்சியே அளிக்கிறது. சில விஷயங்கள் துணிச்சலாக எழுத வேண்டும், அதற்கு எதிர்ப்புகள் வந்தால் நாம் சரியான தளத்தில் செல்கிறோம் என்று நினைத்து கொள்ளலாம்.. நன்றி தோழி

      Delete
  6. நல்ல கதை
    ஆனால் வெளிப்படையான எழுத்துநடை
    நல்ல கருத்து

    நிகழ காலத்தில்
    இந்த மாதிரியான மனிதர்கள்
    அரிது

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி தோழரே! வெளிப்படையான பதிவு தேவைப்பட்டது அதனால் தான் எழுதினேன்

      Delete
  7. ஒளிவில்லாமல் மனம் விட்டு எழுதிய பதிவு.பாராட்டுக்கள் தோழி !

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி தோழி,அன்பான கருத்துக்கு!

      Delete
  8. நல்ல வாழ்க்கைச் சித்திரம்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா! உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  9. அருமையான எதார்த்தமான எழுத்து நடை வாழ்த்துக்கள் சிநேகிதி

    ReplyDelete
    Replies
    1. அன்பு தோழிக்கு, இனிய வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி!

      Delete
  10. அருமையான பதிவு

    ReplyDelete
    Replies
    1. அன்பு தோழருக்கு, இனிய வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி!

      Delete
  11. எதார்த்தமான நடை....அருமை.. http://www.rishvan.com

    ReplyDelete
    Replies
    1. அன்பு தோழருக்கு, இனிய வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி!

      Delete
  12. nice ka...

















    Picasle - Share your Images for Free!









    yuotube

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோவின் வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி!

      Delete
  13. நல்ல எதார்த்தமான பதிவு

    ReplyDelete