August 16, 2012

கனவான கனவு


 
கல்வியும் பயில
அறிவும் வளர்க்க
பண்பும் சிறக்க
கல்லாமை விலக
அறியாமை நீங்க
பரம்பரை மடமை
நோயும் அகன்றிட
உயிரும் மெய்யும்
எழுதிட ஆசை
பள்ளி சென்று
பயின்று வர ஆசை
இரவும் நீள
உடலும் களைப்பாக
கண்களும் அயர
உறக்கம் தழுவ
அயர்ந்தேன் மறந்தே

பொழுதும் விடிந்தது  
கனவும் கலைந்தது   
வயிறும் காய்ந்தே
பசியும் வந்தது
கனவு மூட்டையை
பரணில் எரிந்தே
குடும்ப சுமையை
முதுகில் சுமந்தே
சட்டியை எடுத்தேன்
கூலிக்கு விரைந்தேன்
இன்றைய வேலையாக
பள்ளிக்கு சென்றேன்
கட்டிட வேலைக்கு
கனவுகளை மண்ணாக்கி
கண்ணீரை செங்கல்லாக்கி
பூசிமொழுகினேன் என்னுள்
புதைந்த ஆசைகளை

குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த மாட்டோம் என்று உறுதி செய்வோம். குழந்தைகள் மூலம் கிடைக்கும் வருமானம் நாட்டிற்கும் வீட்டிற்கும் அவமானம்.  


அன்புடன்
ஆயிஷாபாரூக்   

27 comments:

  1. குழந்தைகள் மூலம் கிடைக்கும் வருமானம் நாட்டிற்கும் வீட்டிற்கும் அவமானம்.
    /////////////

    நல்ல கவிதை நல்ல கருத்து வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி!

      Delete
  2. உண்மைதான்! இந்த உறுதிமொழியை ஒவ்வொருவரும் ஏற்க வேண்டும்! அருமையான பகிர்வு!

    இன்று என் தளத்தில்
    பிரபு தேவாவின் புதுக்காதலியும் நயனின் சீண்டலும்
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_16.html
    நான் ரசித்த சிரிப்புக்கள்! 17
    http://thalirssb.blogspot.in/2012/08/17.html

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி! உறுதி மொழி ஏற்போம்!

      Delete
  3. சிறப்பான கருத்துக்கள்...
    ஒவ்வொவரும் உணர வேண்டும்... உறுதியை ஏற்க வேண்டும்...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி!

      Delete
  4. பள்ளிக்கு சென்றேன்
    கட்டிட வேலைக்கு//

    மனத்தைப் பாதித்த முரண்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி! அய்யா!

      Delete
  5. இன்றைய வேலையாக
    பள்ளிக்கு சென்றேன்
    கட்டிட வேலைக்கு
    கனவுகளை மண்ணாக்கி
    கண்ணீரை செங்கல்லாக்கி
    பூசிமொழுகினேன் என்னுள்
    புதைந்த ஆசைகளை…

    அருமை.. அருமைங்க சகோ...
    வாழ்த்திட வார்த்தை இல்லை!

    ReplyDelete
    Replies
    1. சகோ! உங்களின் வருகைக்கும் கருத்து பதிவிற்கு மிக்க நன்றி!

      Delete
  6. Replies
    1. சகோதரி! உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  7. சகோ... உங்களின் “பாதை மாறும் பயணத்தைத்“ தேடுகிறேன். கிடைக்கவில்லைங்க...

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய திருநங்கை என்கிற அடையாள பெட்டகத்தில் "திருநங்கை விழிப்புணர்வு தொடர் - ஐந்து" தான் பாதை மாறும் பயணம் கட்டுரை!

      Delete
  8. Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி தோழரே!

      Delete
  9. பல இடங்களில் குழந்தைத் தொழிளாலர்களை பார்க்கும் போது மனது வலிக்கத்தான் செய்கிறது யார் சொல்லித்தான் திருந்தப் போகிறார்கள் மக்கள் என்று தெரியவில்லை. தங்களின் ஆதங்கம் என்னிடத்திலும் சகோ.

    ReplyDelete
    Replies
    1. பிஞ்சு கைகள் வேலைசெய்திட பனிக்கும் வர்க்கத்தை எதிர்ப்போம்... சகோ உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

      Delete
  10. Great... கவிதைக்கான சிறந்த கருப்பொருள் தேர்வு... நேர்த்தியான வார்த்தை கோர்ப்பு... சரியான புகைப்படம்...இன்னும் இனிதே எழுத வேண்டி வாழ்த்துகிறேன்... keep it up friend...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி!

      Delete
  11. வணக்கம் சொந்தமே!சிறுவர் தொழிலாழர்கள்.அருமையாக நகர்கிறது கவிப்பிரவாகம்.புகைப்படம் அப்படியே ஒத்துக்கொள்கிறது தங்கள் கவியுடன்.வாழ்த்துக்கள் சொந்தமே!

    இன்னும் சொல்லுவேன் சத்தமாய்! ..!!!!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் அன்பான கருத்து பதிவு செய்தமைக்கு நன்றி...

      Delete
  12. ..............தொடரட்டும்... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  13. அருமை உங்கள் கவிதை எனக்கு என்ன தோன்றியது இளமையில் கல் என்றுசொன்னது இது தானா ????

    ReplyDelete
    Replies
    1. தோழரின் வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி!

      Delete
  14. கடைசி வரிகளில் கருவின் சாரம் தெரிகிறது.படம் அருமை.பதிவு கண்ணீரை வரவழைத்தது ,அன்புடன் கருப்பசாமி

    ReplyDelete