அவசரம்
அவசரம்
எதற்கும்
அவசரம்
எங்கும்
அவசரம்
வண்டி ஒட்டி
வேகமாய்
செல்ல
விரைந்து
பறந்து
மைல்கள்
கடக்க
சாலையில்
சாகச
ஜாலங்கள்
புரிய
சீறினேன்
வண்டியோடு
கவனக் குறைவு
விதிமுறை
மீறல்
அலட்சிய
மனம்
விரைந்த வேகம்
ஆனது விபத்து
தலையும்
சுற்ற
கண்ணும்
மயங்கின
விழித்து
பார்த்தேன்
மயக்கம்
தெளிந்து
காலில்
தலையில்
காயக் கட்டு
வருந்தி
திருந்தி
மனம் கொண்டேன்
விதி மீறல்
பயணம் முடிக்கும்
வாகன வேகம்
வாழ்வை
முடிக்கும்
அவசரம்
வேண்டாம்
இனி சாலையிலே
வாகன விபத்து குறைக்க வேண்டுமெனில் வாகன ஓட்டிகளான நாம் தான் முதலில் முழு ஒத்துழைப்பு கொடுக்க முன்வர வேண்டும். வாகனம் ஓட்டும் போது அலைபேசி பயன்படுத்தக்கூடாது, வேகமான பயணத்தை மேற்கொள்ளக்கூடாது. வாகன விதிகளை கவனமாக பின்பற்ற வேண்டும். வாகன விபத்துகளை குறைக்க முற்படுவோம். மரணம் நம்மை தேடி வர வேண்டும், மரணத்தை நாம் தேடிப் போகக்கூடாது.
அன்புடன்
ஆயிஷாபாரூக்
ஆயிஷாபாரூக்
