தமிழ்
எனக்கு பிடித்த மொழிகளில் அழகிய மொழி. செம்மொழியான தமிழ் மொழி தமிழகத்தில்
இன்று மொழி கலப்புடன் தான் புழக்கத்தில் உள்ளது என்பது நான் கூறும் அதிசய
உண்மை கிடையாது, இது உங்கள் அனைவருக்குமே அறிந்த நன்கு தெரிந்த யதார்த்த
உண்மை. பொதுவாக தமிழுக்கு குரல் கொடுக்கும் பல நபர்கள் தமிழை
வெளியிடங்களில் வாழவைத்தும் வீட்டினில் தமிழை கலப்படம் செய்து தங்கள்
பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்கின்றனர்.
அப்பா, அம்மா என்ற உணர்வு பூர்வமான தமிழ் சொல்லை பல பெற்றோர்கள் டாடி, மம்மி அல்லது டாட், மம் என்று தேனிசை பாய குழந்தைகள் கூறுவதையே விரும்புகின்றனர். இந்த நவீன மோகத்தில் குழந்தைகள் தமிழை பேசுவது கூட சில தம்பதிகள் கௌரவ குறைச்சலாக கருதுவதும் உண்டு. பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கில அறிவு வளர வேண்டும் என்பதற்காக புத்தக கடைக்கு சென்று ஆங்கில அறிவு வளர்க்கும் வண்ணம் உள்ள புத்தகங்களை குழந்தைகளுக்கு படிக்க வாங்கி தருகிறார்கள். இதில் எத்தனை பேர் தமிழ் இலக்கிய, கவிதை புத்தகங்களை குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்துள்ளனர், அப்படி கொடுத்தாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே பெற்றோர்கள் இருப்பர்.
அப்பா, அம்மா என்ற உணர்வு பூர்வமான தமிழ் சொல்லை பல பெற்றோர்கள் டாடி, மம்மி அல்லது டாட், மம் என்று தேனிசை பாய குழந்தைகள் கூறுவதையே விரும்புகின்றனர். இந்த நவீன மோகத்தில் குழந்தைகள் தமிழை பேசுவது கூட சில தம்பதிகள் கௌரவ குறைச்சலாக கருதுவதும் உண்டு. பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கில அறிவு வளர வேண்டும் என்பதற்காக புத்தக கடைக்கு சென்று ஆங்கில அறிவு வளர்க்கும் வண்ணம் உள்ள புத்தகங்களை குழந்தைகளுக்கு படிக்க வாங்கி தருகிறார்கள். இதில் எத்தனை பேர் தமிழ் இலக்கிய, கவிதை புத்தகங்களை குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்துள்ளனர், அப்படி கொடுத்தாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே பெற்றோர்கள் இருப்பர்.
என்னுடைய தாய்மொழி மலையாளம் ஆனாலும் தமிழ் மேல் பற்று காரணமாக நான் இந்த தமிழை எழுதும் அளவிற்கு ஒரு சராசரி தமிழன் எழுதுவது கூட இல்லை என்று சில நேரம் வருத்தபட்டும் இருக்கிறேன். எனக்கு தமிழின் ஆழமான விழுதுகள் தெரியாமல் இருக்கலாம் ஆனாலும் தமிழை என் மனதினில் விழுதாக விதைத்து நான் தமிழை மதிக்கிறேன், நேசிக்கிறேன்.
தமிழ் என் உயிர் மூச்சு, தமிழ் என் பேச்சு என்று முழங்கிடம் சில ஆசாமிகள் கூட தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு ஆங்கில அறிவு வளர வேண்டும் என்றே விரும்புகின்றனர். அதனால் வெளியே உள்ள பிள்ளைகளுக்கு மட்டும் அறிவுரையாக தமிழ் மட்டும் படி, தமிழை மட்டும் பேசு என்று அறிவுரை கூறி தங்கள் குழந்தைகளை அயல்நாடுகளில் படிக்க அனுப்பிய சில தமிழ் மேதைகளும் நான் கண்டதுண்டு. ஏன் இந்த வேஷம், யாரை ஏமாற்ற என்று புரியவில்லை.
இன்றைய காலச்சூழலில் ஆங்கிலம் நமக்கு தேவை. தமிழ்நாட்டில் சாராசரியாக வேலைக்கு செல்லும் இடத்தில் ஆங்கில அறிவு கொண்ட நபரையே முதன்மை படுத்தி வேலைக்கு அமர்த்துகின்றனர். அயல்நாட்டு வேலைக்கு கண்டிப்பாக ஆங்கில அறிவு வேண்டும். என்னை பொறுத்தவரை தன் தாயை மறந்தவனும் தாய் மொழியை மறந்தவனும் ஒன்று. தமிழை நாம் என்றும் சிறப்பித்து காக்க வேண்டும் நம் தாயை போல. பிற மொழிகளை நம்முடைய தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி பின்பு அதை சுழற்றிவிட வேண்டும். ஆனால் இன்றைய தமிழர்கள் சிலர் நவீன நாகரீகம் என்கிற மட்டமான போதையில் தமிழை துச்சமாகவும் பிற மொழிகளை உச்சமாகவும் கருதுவது தமிழுக்கு வந்த காலக்கொடுமை என்றே சொல்லாம்.
அன்புடன்
ஆயிஷாபாரூக்
ஆயிஷாபாரூக்
எந்த மொழி கற்றவரையும் கவர்ந்திழுக்கும் எம்தமிழ் மொழி எத்தனை உண்மை பாருங்கள். உங்கள் தாய்மொழி மலையாளமாக இருப்பினும் இப்படி அழகுத் தமிழில் உங்களை அளவிலாத பற்று கொள்ள வைத்திருக்கிறதே மகிழ்ச்சி சகோ.
ReplyDeleteநிழலின் அருமை வெயிலில் என்பது போலத்தான் தமிழனின் நிலையும் எதையும் இருக்கும் போது அதன் அருமை தெரிவதில்லை பலருக்கு. ஆதங்கப்படுவதை விட வேறு என்ன செய்ய ?
சகோதரி வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி... எனக்கு தமிழ் அதிகம் பிடிக்கும்... தமிழை சில தமிழர்கள் துச்சமாக நினைப்பதால் இந்த பதிவு..
Deleteஎன்னுடைய தாய்மொழி மலையாளம் ஆனாலும் தமிழ் மேல் பற்று காரணமாக நான் இந்த தமிழை எழுதும் அளவிற்கு ஒரு சராசரி தமிழன் எழுதுவது கூட இல்லை.// வருத்தப்பட வைக்கும் உண்மைதான்.தமிழ் பேசுவதை கௌரவக்குறைவாக நினைப்பவர்கள் மிக அதிகமாகிவிட்டது.
ReplyDeleteதங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு ஆங்கில அறிவு வளர வேண்டும் என்றே விரும்புகின்றனர்.// பிறமொழி அறிவை வளர்ப்பதில் அது எந்த மொழியாயினும் தவறேதும் இல்லையே சகோ. ஆனால் அது தாய்மொழியை மிஞ்சும் அளவுக்கு போவதைத்தான் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.நல்ல பதிவு சகோ. தொடருங்கள்....
பிற மொழிகளை நம்முடைய தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி பின்பு அதை சுழற்றிவிட வேண்டும்... தாய் மொழியான தமிழை நான் பிற மொழிகளுடன் நேசித்தால் தமிழ் என்றும் சிறக்கும் ...உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி..
Deleteநல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரை ஆயிஷா.
ReplyDeleteபாராட்டுக்கள்!
மிக்க நன்றி...அம்மா..
Deleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி..
//என்னுடைய தாய்மொழி மலையாளம் ஆனாலும் தமிழ் மேல் பற்று காரணமாக நான் இந்த தமிழை என் மனதினில் விழுதாக விதைத்து நான் தமிழை மதிக்கிறேன், நேசிக்கிறேன்.//
ReplyDeleteமனதில் நிற்கும் வரிகள்.
பகிர்வுக்கு மிக்க நன்றி ஆயிஷா பாரூக்.
மிக்க நன்றி... மாசிலா...உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி..
Deleteநெத்தியடி பதிவு சகோதரி. முதலில் என்னதான் ஆங்கிலத்தை முக்கி முனகி கக்கினாலும், முதல் மொழியாய் தமிழ்நாட்டவரின் மூளையில் சிக்கிக் கிடப்பது தமிழ் தான், அதனை செம்மைப்படுத்தினால் மட்டுமே, சிந்தனை செழிப்பாகவும் சீராகவும் அமையும். அதன் பின் எத்தனை மொழி வேண்டுமானாலும் எளிதாகப் படிக்கலாம். தமிழில் ஆங்கிலத்தைக் கலப்பதால், தமிழ் மட்டுமல்ல தமிழன் பேசும் ஆங்கிலமும் கூட நாறியேக் கிடக்கின்றது. தாய்மொழித் தாக்கம் ஆங்கிலத்தில் மிகுவதற்கும், ஆங்கிலச் சொற்களை பிழைப்பட பேசுவதற்கும், பொருள் குற்றம் ஏற்படுவதற்கும் முக்கியக் காரணம் தமிழில் ஆங்கிலத்தைக் கலப்பதனாலேயே. அத்தோடு எவருக்கும் சிந்திக்கும் மொழியே அடையாளம், தமிழைத் தொலைத்துவிட்டு பேப்பர் தமிழனாய் காட்டிக் கொண்டால் வேற்று மொழியார், ஏன் இங்கிலாந்தில் வாழும் நாய்கள் கூட மதிக்காது. தமிழ், ஆங்கிலம் இரண்டையும் செம்மையாக பேசவும், எழுதவும் வேண்டும். இரண்டையும் கலந்து சாம்பார் மொழியை உருவாக்கினால் வங்கக் கடல் கூட பொறுக்காமல் சுநாமியாய் பொங்கிவிடும்.
ReplyDeleteபிற மொழிகளை நம்முடைய தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி பின்பு அதை சுழற்றிவிட வேண்டும்... தாய் மொழியான தமிழை நான் பிற மொழிகளுடன் நேசித்தால் தமிழ் என்றும் சிறக்கும் ...உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி..
Deleteஉண்மையான கருத்துக்கள்! என் குழந்தை அம்மா- அப்பா என்று எங்களை அழைப்பதை பக்கத்து வீட்டு குழந்தைகள் வித்தியாசமாக பார்க்கின்றன. கிராமத்திலேயே இந்த நிலை! இக்கால இளைஞர்கள் மனது வைத்தால் தமிழை வளர்க்காவிட்டாலும் காக்கலாம்! ஊம்! நடக்குமா?
ReplyDeleteநீங்கள் கூறுவது உண்மை தான்... பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும் அப்பொழுது தான் பிள்ளைகளும் சிந்திப்பார்கள்.. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி..
Deleteஇப்ப சிங்கப்பூரில் இருக்கேன் இங்க்லீஷ், சைனீஸ் மொழிகளுடன் தமிழ் மொழியிலும் எல்லா இடங்களிலும் அறிவிப்புகள் செய்திருக்காங்க. பாக்கவே அவ்வளவு சந்தோஷமா இருக்கு
ReplyDeleteசிங்கபூர் என்னை பொறுத்தவரை தமிழ் நாட்டில் உள்ளது போல தான், நான் அங்கே உள்ள லிட்டில் இந்தியா, தேக்காஹ் போன்ற இடங்களில் ஒரு காலத்தில் ஊலா வந்துள்ளேன். உங்களின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி அம்மா...
Deleteதமிழ் என்று சொல்லும்போதே மனதில் ஒரு நெகிழ்வும் தைரியமும்.வாழ்த்தி வனங்குவோம் நம் தமிழன்னையை !
ReplyDeletethamizh mozhiyai mathithatharku mikka nandri
ReplyDelete