November 22, 2012

மச்சானுக்கு செய்தி வெச்சேன்

காடுக்கரை வேர்வ சிந்தி
உளைச்ச என் மச்சானுக்கு 
பக்குவமா கம்மங்கு கூழு
கிண்டிவைச்சு பத்திரமா
வூடு சேர சன்னலோரம்
நின்னு எட்டி பார்துதிருந்தேன்
மணிக்கணக்கா காத்திருந்தேன்

தாமரைபூ சிரிப்ப போல
மச்சான வரவ பார்த்துபுட்டு
சூடான தண்ணீர கலந்து
உடல்சோர்வ போக்க  
கொல்லையோரம் எடுத்துவெச்சு
சந்தன மணக்க மச்சான்
குளிச்சு வந்து என் முந்தானை
ஈரம்பட தலைய தோர்த்திவிட்டேன்

ராப்பகலா உழைச்சு பசியாறும்
மச்சானுக்கு சேதி வெச்சேன்
நீ குடிச்ச கஞ்சியிலே
என் வயிறும் நிரஞ்சுருச்சு
நீ போட்ட வெத்தலையில்
என் நாக்கு செவந்துருச்சு
சாம்பலும் மாங்காவும்
தின்ன ஆசை வந்தாச்சு
குளிச்சு நாளும் ஆயாச்சு
வெட்கப்பட்டு மாமன் தோளில்
சாஞ்சு செய்தி சொல்லி
மார்போரம் கோலம் போட்டேன்
பாசம் பொங்க அணைச்ச
மச்சான்கிட்ட வார்த்தை மறந்து
நானும் சொக்கி நின்னேன்....

அன்புடன் 
ஆயிஷாபாரூக்

20 comments:

  1. அருமை அருமை
    வயல் வெளியும் கண்மாய் கரையும்
    காதலர்களும் கண் முன்
    சிறிது நேரம் உலவிப் போனார்கள்
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. மிக்க மகிழ்ச்சி...

      Delete
  2. அழகு அழகு சகோ காட்சிகள் கண்முன் வந்து போகின்றன.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. மிக்க மகிழ்ச்சி...

      Delete
  3. அழகு....
    பாடலாய் பாடலாம் போலிருக்கிறது
    ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. மிக்க மகிழ்ச்சி...

      Delete
  4. அழகான நாட்டுப்புற பாடல் வரிகள்! அருமை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. மிக்க மகிழ்ச்சி...

      Delete
  5. கிராமிய மணம் கமழும் கவிதை வெகு சுவாரசியம். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. மிக்க மகிழ்ச்சி...

      Delete
  6. ரசிக்க வைக்கும் வரிகள்... படிக்கும் போது காட்சிகள் கண்முன் தெரிந்தன... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. மிக்க மகிழ்ச்சி...

      Delete
  7. அழகு + ரசிக்க வைக்கும் வரிகள்...

    தொடருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. மிக்க மகிழ்ச்சி...

      Delete
  8. சூப்பர், நல்ல கிராமத்து மண் வாசனை@

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. மிக்க மகிழ்ச்சி...

      Delete
  9. கிராமிய காதலின் மண்ணோடு கலந்த மணம் எண்கள் மனதை இழுக்குது தோழி அழகிய வெளிபாடு தொடருங்கள்

    ReplyDelete
  10. அருமையான பாடல் - வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. மிக்க மகிழ்ச்சி...

      Delete