கண்ணாடி வளையல்
தங்கத்தால சேஞ்சு
கல்லு கொஞ்சம் பதிச்சு
மின்னும் வைரம் போல
அன்பு மனசு சிலிர்க்க
ஆசை பட்டு கேட்டேன்
என் அத்தான்கிட்ட வளையலு
கல்லு கொஞ்சம் பதிச்சு
மின்னும் வைரம் போல
அன்பு மனசு சிலிர்க்க
ஆசை பட்டு கேட்டேன்
என் அத்தான்கிட்ட வளையலு
வெள்ளிகழமை சந்தையிலே
வேகாத வெயிலிலே
ராவு பகலா வேர்வை சிந்தி
வேகாத வெயிலிலே
ராவு பகலா வேர்வை சிந்தி
உளைச்ச மச்சான்
வாங்கி வந்தான் வளையலு
அது கண்ணாடி வளையலு
கூரை வீட்டுக்குள்ளே
கஞ்சி சோறு பிணைஞ்சு
வெங்காயம் மிளகு கில்லி
ஆசையா ஊட்டிவிட்டேன்
மாமன்கிட்ட செய்தி சொன்னேன்
தங்கமென்ன வைரமென்ன
அன்புகொண்ட வளையமா
ஆசைத்தீர பாசம்பொங்க
என் சாமி நீயிருக்க
கண்ணும் மின்னும் இந்த
கண்ணாடி வளையல் போதும்
ஓசை கலகலக்கும் இந்த
கண்ணாடி வளையல் போதும்
மாமா! இந்த கண்ணாடி
வளையல் போதும்…..
வாங்கி வந்தான் வளையலு
அது கண்ணாடி வளையலு
கூரை வீட்டுக்குள்ளே
கஞ்சி சோறு பிணைஞ்சு
வெங்காயம் மிளகு கில்லி
ஆசையா ஊட்டிவிட்டேன்
மாமன்கிட்ட செய்தி சொன்னேன்
தங்கமென்ன வைரமென்ன
அன்புகொண்ட வளையமா
ஆசைத்தீர பாசம்பொங்க
என் சாமி நீயிருக்க
கண்ணும் மின்னும் இந்த
கண்ணாடி வளையல் போதும்
ஓசை கலகலக்கும் இந்த
கண்ணாடி வளையல் போதும்
மாமா! இந்த கண்ணாடி
வளையல் போதும்…..
அழகிய ராட்சஸி
உன் தேவைகளை
அறிந்து செய்யும்
அசிங்கமான தேவதை
உன் அன்புக்காக
தொந்தரவு செய்யும்
அழகிய ராட்சஸி
உயிருடன் கொல்லும்
உன்னுடைய ஏக்கம்
உறைந்து போகும் முன்
என்னுயிர் பிரியும் பின்
அறிந்து செய்யும்
அசிங்கமான தேவதை
உன் அன்புக்காக
தொந்தரவு செய்யும்
அழகிய ராட்சஸி
உயிருடன் கொல்லும்
உன்னுடைய ஏக்கம்
உறைந்து போகும் முன்
என்னுயிர் பிரியும் பின்
என் கல்லறை
முன்பு அழுவதைவிட
உன்னுடன் இருக்கும்
ஒவ்வொரு நொடிகளில்
என்னை காதலி
அன்பு காதலனே
உயிருடன் மோட்சம் அடைவேன்...
முன்பு அழுவதைவிட
உன்னுடன் இருக்கும்
ஒவ்வொரு நொடிகளில்
என்னை காதலி
அன்பு காதலனே
உயிருடன் மோட்சம் அடைவேன்...
விடை சொல்லிவிடு
உன் குறுகுறு பார்வை
குளிர் காற்றை வீசுதே
மனம் ஏனோ மகிழ்ந்து
வானில் பறந்து திரியுதே
நேரில் சொல்ல எழுதி
வைத்த கவிதை நூறு
முகத்தை கண்டு சொல்ல
மறந்த வார்த்தை நூறு
மனதினில் ஒளித்து வைத்தேன்
புன்னகைக்கண்டு மறந்து போனேன்
குளிர் காற்றை வீசுதே
மனம் ஏனோ மகிழ்ந்து
வானில் பறந்து திரியுதே
நேரில் சொல்ல எழுதி
வைத்த கவிதை நூறு
முகத்தை கண்டு சொல்ல
மறந்த வார்த்தை நூறு
மனதினில் ஒளித்து வைத்தேன்
புன்னகைக்கண்டு மறந்து போனேன்
மந்திரம் தந்திரம் என்ன செய்தாய்
மனதில் நுழைந்து ஆட்சி புரிகிறாய்
என்ன செய்வேன் எப்படி சொல்வேன்
காதல் நோயின் மருந்தே நீயென
மனம் படும்பாடு தெரிகிறதா
வஞ்சியின் மனநோய் புரிகிறதா
விடை சொல்லிவிடு என் மன்னவா
எந்தன் வாழ்க்கை உனது அல்லவா...
மனதில் நுழைந்து ஆட்சி புரிகிறாய்
என்ன செய்வேன் எப்படி சொல்வேன்
காதல் நோயின் மருந்தே நீயென
மனம் படும்பாடு தெரிகிறதா
வஞ்சியின் மனநோய் புரிகிறதா
விடை சொல்லிவிடு என் மன்னவா
எந்தன் வாழ்க்கை உனது அல்லவா...
அழகான மூன்று காதல் கவிதைகள்... காதல் செய்யும் எல்லா பெண்களுக்கும்...
அன்புடன்
ஆயிஷாபாரூக்
ஆயிஷாபாரூக்
மூன்றும் அருமை! முதல் கவிதை மிகவும் ரசித்தேன்! மிக்க நன்றி!
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி....
Deleteஅழகான கவிதை வரிகள்
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி....
Deleteமூன்றும் மூன்று முத்துக்கள்தான்
ReplyDeleteரசித்துப் படித்து மகிழ்ந்தேன்
வாழ்த்துக்கள்
உங்களின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி....
Deleteநன்னா இருக்கு கவிதைகள் வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி....
Deleteஆஹா... ரசிக்க வைக்கும் கவிதைகள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி....
Deleteவரிகளில் சுகம் இழைந்தோடுகிறது..
ReplyDeletealagiya kavithaigal arpudhamana sindhanaigal
ReplyDeletealagiya kavithaigal arpudhamana sindhanaigal
ReplyDeleteஅழகான கவிதை வரிகள் வாழ்த்துக்கள்...
ReplyDeletekavitha varikal mekavum azhkaka ullathu,,,,,,,
ReplyDeletekavitha varikal mekavum azhkaka ullathu,,,,,,,
ReplyDeleteசூப்பர் தோழி
ReplyDeleteஅருமையான வரிகள் தோழி
ReplyDeleteமூன்றும் அருமை... முதல் கவிதை சூப்பர்...
ReplyDelete