அரசியல் பதிவுகள்
அரசியல் பதிவுகள் இனி எழுதக்கூடாது என்று நினைக்கிறேன்... அரசியல் பதிவுகள் எழுதும் போது ஒருதலை பட்சமாகவோ அல்லது உண்மையை மறைத்து கொண்டோ தான் எழுத வேண்டி உள்ளது. அரசியல் உண்மைகள் சிலருக்கு கசக்கும், சிலருக்கு இனிக்கும்...என்றுமே எனக்கு துவர்க்க தான் செய்கிறது. இங்கே கட்சி சார்பாக அரசியல் பதிவுகள் எழுதும் அனைவரும் தங்களின் மனசாட்சியை சாகடித்து கொண்டு தான் எழுதுகிறார்கள்.
உலக அழிவு
உலகம் என்ன புதுசா அழியவேண்டி இருக்கு, ஏற்கனவே நாம எல்லோரும் அழிஞ்சு போயிட்டு இருக்குற உலகத்துல தான் நாம வாழ்ந்துட்டு இருக்கோம்...
ஜாதியும் ஜாதி கட்சியும்
ஜாதி என்பது மனிதனில் கலக்கும் நஞ்சு, அது அவனை மிருகமாக்கும். அதுவே அந்த ஜாதி ஒரு கட்சியாக மாறினால் அது நாட்டிற்கே கேடு விளைவிக்கும். ஜாதியும் ஜாதி கட்சிகளும் புறக்கணிக்கபடும் வரை மனிதன் மனிதனாகவும் கட்சி மக்களுக்காகவும் இருக்காது.
சமநிலை
இங்கே யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை.அனைவரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளே...
திருநங்கை
உங்கள் அப்பா என்றாவது உங்களை வெறுத்து நிராகரித்தது உண்டா? என்றாவது உங்கள் அம்மா உங்களை ஏற்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் தவித்தது உண்டா? உங்கள் சகோதரன் அல்லது சகோதரி உங்களை அவமானமாக நினைத்தது உண்டா? உங்களை உங்கள் சுற்றம், நட்பு கேலி செய்தது உண்டா? இத்தனையும் மீறி நீங்கள் வாழ்ந்தது உண்டா? ஒவ்வொரு திருநங்கையும் இத்தனையும் கடந்து தான் வாழ்கிறாள்... பல மனக்காயங்களை சுமந்து தான் வாழ்கிறாள்... வேதனையான மறுக்கமுடியாத உண்மை இது.
பேரம் பேசுதல்
பிரபலமான துணி கடைகளில் துணி வாங்கும் பொழுது துணியில் உள்ள அட்டவணையில் உள்ள விலையை சற்றே தயங்காமல் வாதம் செய்யாமல் பணத்தை கட்டி விடுகிறோம். சாலையில் கர்சீப் விற்கும் சிறு வியாபாரிகளிடம் ஒரு ரூபாய்க்கு கூட பேரம் பேசுவது நம்முடைய ஆதிக்கதன்மையும்,புத்திசாலி என்கிற நினைப்பையும் பிரபலமான துணி கடைகளில் நம்முடைய அடிமைத்தனத்தையும் பிரதிபளிக்கிறது. மாற்றம் வேண்டும் சிந்தனையிலும் செயலிலும்.
பழகுவது
எந்த காரணமும் இல்லாமல் யாரும் யாருடனும் பழகுவது இல்லை, தேவையின் அளவை பொருத்து அடுத்தவரோடு பழக்கம் கூட குறைச்சல் உள்ளது. காரணங்கள் பலவகையாக இருக்கலாம் பணமோ, பொருளோ, அன்போ இப்படி எதுவும் இருக்கலாம். இது இயற்கை இதில் தவறும் இல்லை. அதிக சுயநலம் தான் பழக்கவழக்கத்தில் கூடாது.
அன்புடன் ஆயிஷாபாரூக்
ஒவ்வொரு தலைப்பிலு எழுதி இருக்கும் விஷயங்கள் எல்லாமே சிந்திக்க வைக்கிரது
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...
Deleteஒவ்வொன்றும் நச் நச் என்று இருக்கிறது... இன்றைய உண்மை நிலை... மாற வேண்டும்... மாறுமா...?
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...
Delete