காடுக்கரை வேர்வ சிந்தி
உளைச்ச என் மச்சானுக்கு
பக்குவமா கம்மங்கு கூழு
கிண்டிவைச்சு பத்திரமா
வூடு சேர சன்னலோரம்
நின்னு எட்டி பார்துதிருந்தேன்
மணிக்கணக்கா காத்திருந்தேன்
தாமரைபூ சிரிப்ப போல
மச்சான வரவ பார்த்துபுட்டு
சூடான தண்ணீர கலந்து
உடல்சோர்வ போக்க
கொல்லையோரம் எடுத்துவெச்சு
சந்தன மணக்க மச்சான்
குளிச்சு வந்து என் முந்தானை
ஈரம்பட தலைய தோர்த்திவிட்டேன்
ராப்பகலா உழைச்சு பசியாறும்
மச்சானுக்கு சேதி வெச்சேன்
நீ குடிச்ச கஞ்சியிலே
என் வயிறும் நிரஞ்சுருச்சு
நீ போட்ட வெத்தலையில்
என் நாக்கு செவந்துருச்சு
சாம்பலும் மாங்காவும்
தின்ன ஆசை வந்தாச்சு
குளிச்சு நாளும் ஆயாச்சு
வெட்கப்பட்டு மாமன் தோளில்
சாஞ்சு செய்தி சொல்லி
மார்போரம் கோலம் போட்டேன்
பாசம் பொங்க அணைச்ச
மச்சான்கிட்ட வார்த்தை மறந்து
நானும் சொக்கி நின்னேன்....
அன்புடன்
ஆயிஷாபாரூக்
அருமை அருமை
ReplyDeleteவயல் வெளியும் கண்மாய் கரையும்
காதலர்களும் கண் முன்
சிறிது நேரம் உலவிப் போனார்கள்
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்
உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. மிக்க மகிழ்ச்சி...
Deletevery nice sister :)
ReplyDeleteall the best
அழகு அழகு சகோ காட்சிகள் கண்முன் வந்து போகின்றன.
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. மிக்க மகிழ்ச்சி...
Deleteஅழகு....
ReplyDeleteபாடலாய் பாடலாம் போலிருக்கிறது
ரசித்தேன்
உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. மிக்க மகிழ்ச்சி...
Deleteஅழகான நாட்டுப்புற பாடல் வரிகள்! அருமை! நன்றி!
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. மிக்க மகிழ்ச்சி...
Deleteகிராமிய மணம் கமழும் கவிதை வெகு சுவாரசியம். வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. மிக்க மகிழ்ச்சி...
Deleteரசிக்க வைக்கும் வரிகள்... படிக்கும் போது காட்சிகள் கண்முன் தெரிந்தன... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. மிக்க மகிழ்ச்சி...
Deleteஅழகு + ரசிக்க வைக்கும் வரிகள்...
ReplyDeleteதொடருங்கள்...
உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. மிக்க மகிழ்ச்சி...
Deleteசூப்பர், நல்ல கிராமத்து மண் வாசனை@
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. மிக்க மகிழ்ச்சி...
Deleteகிராமிய காதலின் மண்ணோடு கலந்த மணம் எண்கள் மனதை இழுக்குது தோழி அழகிய வெளிபாடு தொடருங்கள்
ReplyDeleteஅருமையான பாடல் - வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. மிக்க மகிழ்ச்சி...
Delete