காதல் தோல்வி எனக்கில்லை
காதல் தோல்வி
அடைந்த உன்னை
மனமார காதலிக்கிறேன்
அன்பின் ஆழத்தையும்
வலியின் வடுகளையும்
உறைந்த கண்ணீரையும்
சுமந்த உன் இதயம்
இனி ஏமாறக்கூடாது
மறந்து சென்றவளை
நினைக்கும் உன் மனம்
உனக்காக உருகி நிற்கும்
என்னை காணவில்லையா?
விலகி சென்றவளை
விரும்பும் உன் இதயம்
விழிப்பார்த்து உன்னை
வரவேற்கும் என் மனதை
உனக்கு புரியவில்லையா?
காதல் தோல்வியின்
வலியை அறிந்த நீ
எனக்கும் அந்த வலியை
தருவது முறையோ
ஆருயிரே! என்னுயிரே!
வாழ்வும் மரணமும்
உன்னுடன் என
வந்துவிட்ட எனக்கு
உன்னுடைய எந்த பதிலும்
காதல் சம்மதம் தான்
அன்புடன்
ஆயிஷாபாரூக்
அட..... அசத்தல் - வலிக்கு நிவாரணியா
ReplyDeleteவலி பட்ட மனதிற்கு நல்லதொரு மருந்து...
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...
Deleteவித்தியாசமான காதல், அருமையா இருக்கு.
ReplyDeleteவித்தியாசமாக சிந்தித்து
ReplyDeleteஅருமையாகப் படைத்துள்ள கவிதை
மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்
காதல் வலியில் சுகம் காண்கிறீர்கள்.
ReplyDeleteவித்தியசமானப் படைப்பு.
வாழ்த்துக்கள் ஆயிஷா.
உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...
Deleteகாதல் சம்மதம் தான்...
ReplyDeleteஅருமை...
ReplyDelete